அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் 5G அறிமுகமா? எங்கு முதலில் லான்ச் செய்யப்படும் தெரியுமா?

|

இந்தியாவில் உள்ள அனைவரும் 5ஜி நெட்வொர்க் அறிமுகத்திற்காகக் காத்திருக்கின்றனர். 5ஜியை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்காது என்றாலும், 5ஜி நெட்வொர்க்குகளின் நாடு தழுவிய கவரேஜை மிக வேகமாகப் பெறும் நாடாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, எப்போது இந்தியாவில் 5G சேவை மக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்பது தானே உங்களுடைய கேள்வியாக இருக்கிறது. வாருங்கள் எப்போது, எந்த சிட்டியில் முதலில் 5ஜி பயன்படுத்தக் கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்?

எந்த டெலிகாம் நிறுவனம் இந்தியாவில் முதலில் 5G சேவையை அறிமுகம் செய்யும்?

எந்த டெலிகாம் நிறுவனம் இந்தியாவில் முதலில் 5G சேவையை அறிமுகம் செய்யும்?

சமீபத்திய அறிவிப்புகளின் படி, வரும் அக்டோபர் 1, 2022 இல் 5G நெட்வொர்க்குகள் தொடங்கப்படும் என்று பல செய்திகள் வெளியாகியுள்ளது. அநேகமாக, வரவிருக்கும் அக்டோபர் மாதத்தில், நாம் எதிர்பார்க்கும் 5G சேவையை டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏர்டெல் அல்லது ஜியோ ஆகிய 2 நிறுவனங்களில் ஏதேனும் 1 முதலில் 5ஜியை அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.

அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி நெட்வொர்க்கு தொடங்கப்படுமா?

அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி நெட்வொர்க்கு தொடங்கப்படுமா?

Jio மற்றும் Airtel இரண்டும் 5G வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. மேலும், இந்தியா தனது முதல் வணிக 5G நெட்வொர்க்கைப் பெறுவதற்கு ஒரு குறுகிய காலமே ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 5ஜி நெட்வொர்க்குகள் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஆபரேட்டர்களோ அல்லது அரசாங்கமோ அறிவிக்காத நிலையில், இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) இல் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

அரசாங்க தரப்பு 5ஜி அறிமுகம் பற்றி என்ன சொல்லப்படுகிறது?

அரசாங்க தரப்பு 5ஜி அறிமுகம் பற்றி என்ன சொல்லப்படுகிறது?

இந்த செய்தி குறித்துப் பல மாதங்களாக நாம் கேள்விப்பட்டு வந்தாலும் கூட, இன்னும் இந்த செய்தி அரசாங்க தரப்பினரால் உறுதிப்படுத்தவில்லை என்பதனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு நாம் காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு அக்டோபர் 1ம் தேதி 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் இன்னும் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அக்டோபர் 2022 இல் இந்தியாவில் 5G சேவை தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படாதா?

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படாதா?

இந்த தகவலை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மூலம் வெளியானது. ஆனால், எதோ சில காரண சிக்கல்களால் இது அறிமுகமாவதில் தாமதம் ஏற்படலாம் என்றும் மற்றொரு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கட்டாயமாக அக்டோபரில் எப்போது வேண்டுமானாலும் 5ஜி வெளியீடு நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படாது என்பது கவனிக்கத்தக்கது.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே 5ஜி அறிமுகமா?

குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே 5ஜி அறிமுகமா?

முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்படும் இந்த 5ஜி சேவை, இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், உங்களிடம் 5G போன் இல்லை என்றால், இந்த வெளியீடு உங்களுக்கு உடனடியாகப் பயன்படாது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இருப்பினும், அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் 5G நெட்வொர்க்குகள் தொடங்கப்படுவதைக் காண நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

எந்த நகரங்களில் முதலில் 5G லான்ச் செய்யப்படும்?

எந்த நகரங்களில் முதலில் 5G லான்ச் செய்யப்படும்?

குறிப்பாக, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் 5ஜி சேவைக்கான கட்டணம் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்பதற்கு உங்களைப் போல் நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம். இந்தியாவில் 5ஜி முதற்கட்டமாக மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முதலில் களமிறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், இந்தியாவில் 5ஜியை அறிமுகம் செய்யும் முதல் டெலிகாம் நிறுவனமாக ஜியோ இருக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
5G will indeed first launch in Delhi, Kolkata, Mumbai, and Chennai in India On October 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X