குட் நியூஸ் சொன்ன மோடி: 5ஜி வேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை உயர்த்தும்.. 450 பில்லியன் டாலர் இலக்கு..

|

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 5G சேவையானது இந்தியாவில் வேகமான இணையச் சேவையைக் கொண்டு வருவது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் வேகமாக முன்னேறி, நாட்டில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். அடுத்த ஒன்றரை தசாப்தத்தில் 5ஜி மூலம் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 450 பில்லியன் டாலர்களை தாண்டி உயரும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் 5ஜி அறிமுகத்தை விரைவுபடுத்த அரசு முடிவு

நாட்டில் 5ஜி அறிமுகத்தை விரைவுபடுத்த அரசு முடிவு

இந்திய நாட்டில் 5ஜி அறிமுகத்தை விரைவுபடுத்த அரசு மற்றும் தொழில்துறையினர் சேர்ந்து ஒத்துழைத்து, நாட்டிற்கான முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மேலும், மோடியின் கூற்றுப்படி, இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் 5G வெளியீடு நிச்சயமாக விவசாயம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பல துறைகளுக்கும் பயனளிக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார். இந்தியா 5ஜிக்கு தயாராகிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியா 6ஜி நோக்கிய பாயும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா 6ஜிக்கு தயாராகி வருகிறது பிரதமர் மோடி

இந்தியா 6ஜிக்கு தயாராகி வருகிறது பிரதமர் மோடி

சமீபத்திய டெலிகாம் அறிக்கையின்படி, இந்தியா 5G சேவைக்கு நகரும் அதே நேரத்தில், நாடு இப்போது 6G சேவைக்கு தயாராகி வருவதாக மோடி கூறினார். இந்தியா இதற்கு முன் 2G, 3G மற்றும் அடுத்தடுத்த தலைமுறை நெட்வொர்க் தொழில்நுட்பங்களில் இருந்து இந்தியா சீராக நகர்வதை உறுதி செய்வதற்கான TRAI இன் முயற்சிகளை அவர் ஒப்புக்கொண்டார். நாட்டில் 5ஜி நெட்வொர்க்குகளை விரைவாக வெளியிடப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் 5ஜி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரூ.8,000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்.. குறைந்த விலையில் சிறப்பான அனுபவம்..ரூ.8,000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்.. குறைந்த விலையில் சிறப்பான அனுபவம்..

எப்போது 5ஜி சேவையை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்?

எப்போது 5ஜி சேவையை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்?

தொலைத்தொடர்புத் துறைக்கு (DoT) எழுதிய பழைய கடிதத்தின்படி, பிரதமர் அலுவலகம் (PMO) ஆகஸ்ட் 15, 2022க்குள் 5G வெளியீடு நடக்க வேண்டும் என்று விரும்புகிறது. அது நடக்க, ஸ்பெக்ட்ரம் ஏலங்கள் சரியான நேரத்தில் நடைபெற வேண்டும் என்பது மிக முக்கியமானது. பின்னர் DoT ஆபரேட்டர்களுக்கு ஏற்ற அலைகளை விரைவில் ஒதுக்க வேண்டும். இதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரியான நேரத்தில் 5G சேவைகளைத் தொடங்க முடியும். இருப்பினும், இந்தியா இன்னும் கவனிக்க வேண்டிய 5G பற்றி சில கவலைகள் உள்ளது.

WhatsApp இல் லொகேஷன் பகிர்வது எப்படி? லைவ் மற்றும் கரண்ட் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன?WhatsApp இல் லொகேஷன் பகிர்வது எப்படி? லைவ் மற்றும் கரண்ட் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன?

ஸ்பெக்ட்ரம் ஏலம் விபரங்கள்

ஸ்பெக்ட்ரம் ஏலம் விபரங்கள்

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்த இறுதி அழைப்பு இந்த வாரம் அமைச்சரவையில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 5ஜி சேவைக்கான கையிருப்பு விலை, கால அளவு (20 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகள்) மற்றும் பல விஷயங்கள் அமைச்சரவையால் விவாதிக்கப்படும். அமைச்சரவையின் இறுதி முடிவுகள் வந்தவுடன், ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான விண்ணப்பங்களை (NIA) அழைக்கும். இதைத் தொடர்ந்து அறிவிப்பை வெளியிட DoT நகரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..

5ஜி சேவைக்கான சோதனை

5ஜி சேவைக்கான சோதனை

சரியான நேரத்தில் விஷயங்கள் நடந்தால், இந்தியா ஸ்பெக்ட்ரம் ஏலத்தை ஜூலை 2022 மாதத்திற்குள் நடத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் 2022க்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 5ஜி சேவையைத் தொடங்க முடியுமா என்பது இன்னும் ஒரு கேள்வியை எழுப்புகிறது. இருப்பினும், ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்கள் இப்போதே 5ஜி சேவைக்கான சோதனைகளை நடத்தி வருவதனால், இந்தியாவில் 5ஜி களமிறங்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படாது என்று நம்பப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
5G Will Create Employment Opportunities and Boost Economy Says PM Modi : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X