5ஜி எதிர்பார்க்கும் மக்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன நிலை தெரியுமா?
நாடு முழுவதும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 5ஜி தொழில்நுட்பம் தான். அதாவது ஜந்தாம் தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்
மேலும் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 5ஜி
சேவையை வழங்க தயாராகி வருகின்றன. இப்போது வெளியான தகவலின்படி இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனைஇரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் துவங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

5ஜி சேவைக்கான சோதனை
குறிப்பாக இந்த 5ஜி சோதனை குறித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்புக்கு வந்த 16 கோரிக்கைகள் பற்றி பாராளுமன்ற குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. பின்பு இந்த குழு இந்தியாவில் ஏன் இன்னும் 5ஜி சேவைக்கான சோதனை துவங்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

அதேபோல் டெலிகாம் நிறுவனங்களுக்கு இதுவரை 5ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்படாதது பற்றி பாராளுமன்ற குழு வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. பின்பு தற்போதைய சூழலில் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை வாங்கும் முறை முன்பை விட எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் துவங்க இருக்கிறது
குறிப்பாக இந்தியாவில் 5ஜி சோதனைக்கான விண்ணப்பங்களில் ஆரோக்கியம், விவாசயம், கல்வி, பொது பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நிதி துறையில் 5ஜி பயன்பாட்டுக்கு டிராய் ஏற்கனவே அனமதி
கொடுத்துவிட்டது. பின்பு இதுகுறித்த பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.

உலகம் முழுவதும் இப்போது உள்ள 4ஜி தொழில்நுட்பத்திற்கென குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கிறது என்றே கூறலாம்.

என்னென்ன நன்மைகள்
மேலும் இந்த 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப் பல முன்னை நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள்.

ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்துதுறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உதாரணமாக கூறவேண்டும் என்றால், 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும்ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.

குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.


Click it and Unblock the Notifications