இந்த 13 நகரங்களில் வணிக ரீதியாக வந்து சேரும் 5G.. 4G விட 10 மடங்கு வேகத்தில் டாப் ஸ்பீட் இன்டர்நெட் விரைவில்..

|

இந்தியாவில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான முதல் படியாக, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான விண்ணப்பங்களைத் தொலைத்தொடர்புத் துறை (DoT) இன்று (ஜூன் 15) அறிவித்து அழைப்புவிடுத்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தொலைத்தொடர்புத் துறை ஆனது 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான தகுதி அளவுகோல்களை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி, மொத்தம் 20 ஆண்டுகளுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும்.

5ஜி ஏலத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றது

5ஜி ஏலத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றது

DoT ஆனது மொத்தம் 72097.85 MHz அலைவரிசையை ஏலத்தில் வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. "இந்திய ஜனாதிபதியின் சார்பாக, ஏலத்தில் பங்கேற்பதற்கான தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்யும் வருங்கால ஏலதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களின் அடிப்படையில், ஏலத்தில் பங்கேற்பதற்கான தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்யப்படும் என்று DoT அதன் அறிவிப்பில் கூறியுள்ளது.

என்னென்ன அலைவரிசையில் 5ஜி சேவையை எதிர்பார்க்கலாம்?

என்னென்ன அலைவரிசையில் 5ஜி சேவையை எதிர்பார்க்கலாம்?

தொலைத்தொடர்பு துறையின் அறிவிப்பு படி, 600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் உட்பட அனைத்து ஸ்பெக்ட்ரமும், இந்த பகுதியின் கீழ் வரும் என்று DoT கூறியது. இந்த ஏலத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம், அணுகல் சேவை உரிமத்தின் எல்லைக்குள் 5G (IMT-2020) பயன்படுத்தப்படும்.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலம்

பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலம்

இந்த ஏலத்தின் மூலம் ஸ்பெக்ட்ரம் வாங்கும் எந்த நிறுவனமும் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதை ஒப்படைக்கலாம் என்று தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஏலத்தில் விற்கப்படும் அலைக்கற்றைக்கு ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் (SUC) என்று எதுவும் விதிக்கப்படாது. விஷயம் என்னவென்றால், நெட்வொர்க் ரோல்அவுட் செலவுகள் காரணமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களால் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் 5G ஐ அறிமுகப்படுத்த முடியாது,

இந்த 13 நகரங்களில் தான் 5ஜி முதலில் களமிறங்குமா?

இந்த 13 நகரங்களில் தான் 5ஜி முதலில் களமிறங்குமா?

இந்த காரணத்தினால் குறிப்பிட்ட சில முக்கிய இடங்களில் மட்டும் இதன் சேவையை அறிமுகம் செய்து வைக்கப்போகிறது. இதன்படி, இந்தியாவில் கமர்ஷியல் 5G ஆனது செப்டம்பர் 2022 இல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவில் உள்ள அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஜாம்நகர், ஹைதராபாத், புனே, லக்னோ, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 13 இந்திய நகரங்களில் வணிகரீதியான வெளியீடு தொடங்கும்.

முதல் 5G நெட்வொர்க்கு நேரடி வணிக சேவை 2022

முதல் 5G நெட்வொர்க்கு நேரடி வணிக சேவை 2022

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை இந்த நகரங்களில் தங்களின் 5G சோதனைகளை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெருநகரங்கள் மற்றும் பெரிய நகரங்கள் தான் முதன் முதலில் நேரடி வணிக 5G நெட்வொர்க்குகளைப் பெறும் என்பதைத் தொலைத்தொடர்புத் துறை (DoT) திங்களன்று உறுதிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த பகுதிகளில் எப்போது 5ஜி சேவை துவங்கப்படும் என்ற கேள்வி தான் அடுத்து உங்கள் மனதில் எழுந்திருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.

5ஜி சேவை எப்போது இந்திய நகரங்களில் அறிமுகமாகும்?

5ஜி சேவை எப்போது இந்திய நகரங்களில் அறிமுகமாகும்?

இந்த கேள்விக்கான பதிலைத் தொலைத்தொடர்புத் துறை இன்னும் தெளிவாக வெளியிடவில்லை என்பதே இப்போதைய உண்மையாகும். இந்தியாவின் இந்த முக்கிய நகரங்களில் எப்போது 5ஜி சேவை நிலையான காலக்கெடுவுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என்பது நமக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், CY22 இன் மூன்றாவது காலாண்டில் இந்தியா நேரடி 5G நெட்வொர்க்குகளைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம் என்பது மட்டும் நமக்கு உறுதியாகத் தெரிகிறது.

5ஜி இந்தியாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா?

5ஜி இந்தியாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா?

DoT கூட 2018 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு 5G சோதனைப் படுக்கையுடன் இணைந்து செயல்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சோதனை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு செயலர் கே.ராஜாராமன் நம்பிக்கையுடன், ஜனவரி தொடக்கத்தில் முதல் 5G சோதனை படுக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வரவிருக்கும் பல்வேறு தொழில்களின் பிற பகுதிகள் மற்றும் அவற்றின் 5G தீர்வுகள் பெரிய மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சைலண்டாக 6ஜி சேவைக்கான ஆராய்ச்சியைத் துவங்குகிறதா?

இந்தியா சைலண்டாக 6ஜி சேவைக்கான ஆராய்ச்சியைத் துவங்குகிறதா?

5G சோதனை படுக்கையானது, 6G மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஆரம்ப ஆராய்ச்சியை மேற்கொள்வதில் இந்தியாவை மேலும் வலுவான நிலையில் வைக்கும். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியத் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒதுக்கிய அலைக்கற்றையைப் பயன்படுத்தி நாடுகளின் பல்வேறு பகுதிகளில் 5G சோதனைகளை நடத்தி வருகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
5G To Launch In India Soon DoT Has Invited Applications For The Auction Of 5G Spectrum : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X