5ஜி சோதனை: 'அது' இந்தியாவின் சொந்த முடிவு.! அமெரிக்கா.!
இந்தியா முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்படுவது 5ஜி தொழில்நுட்பம் தான். அதாவது ஜந்தாம் தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

5ஜி தொழில்நுட்ப பரிசோதனை
அண்மையில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின்தொலைத்தொடர்புத் துறை அனுமதி அளித்தது.

சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
இந்தியாவில் 5ஜி சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அறிந்த சீன அரசு ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் எம்டிஎன்எல் போன்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு விண்ணப்பித்திருந்தன. பின்பு இந்த நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பங்களை வழங்கும் எரிக்ஸன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

சீன தூதரக செய்தி தொடர்பாளர்
பின்பு இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் சீன தூதரக செய்தி தொடர்பாளர் வாங் ஜியோஜியான் கூறியது என்னவென்றால், இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வழங்குவதற்கான தொழில்நுட்பப் பரிசோதனையில் சீனாவைசேர்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறிப்பாக இந்த 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதில் சீனா சிறந்து விளங்கி வருகிறது. மேலும் சீனநிறுவனங்களுகக்கு அனுமதி மறுக்கப்பட்டது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று கூறினார்.

அதாவது சீனாவில் ஆளும் கட்சி உத்தரவிட்டால் வெளிநாடுகளில் சேவையாளிக்கும் அந்நாட்டு நிறுவனங்கள் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று கூறப்படுகிறது. இதில் அந்நாட்டின் தொலைதொடர்பு சேவை நிறுவனங்காளன இசட்.டி.இ, ஹூவாவே ஆகிய நிறுவனங்களும் அடங்கும். எனவேதான் பல நாடுகள் சீன நிறுவனங்களை அனுமதிக்க தயக்கம் காட்டி வருகின்றன. தற்போது அவற்றைப் பின்பற்றி இந்தியாவும் சீன நிறுவனங்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தயாவின் சொந்த முடிவு
அண்மையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸின் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர், 5ஜி சேவையில் சீன நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என்பது இந்தயாவின் சொந்த முடிவு. அந்த முடிவு தொடர்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் எவ்வித தகவல் தொடர்பையும் வைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் சீன நிறுவனங்களை தகவல்தொழில்நுட்ப சேவையில் அனுமதித்தால், அவை தகவல் திருட்டு மற்றும் தங்கள் நாட்டுக்காக உளவு வேலைகளில் ஈடுபடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்ற கவலை அமெரிக்காவுக்கு உள்ளது. மேலும் இதில் மனித உரிமை மீறல் தொடங்கி உள்நாட்டு பாதுகாப்பு வரை பல்வேறு விஷயங்கள் உள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸின் கூறியுள்ளார்.

5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள்
இந்த புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள். ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்துதுறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உதாரணமாக கூறவேண்டும் என்றால், 5ஜிதொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து
வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.

குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.


Click it and Unblock the Notifications