5ஜி தொழில்நுட்ப சோதனை: சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு.! சீன தூதரக செய்தி தொடர்பாளர் கருத்து.!

|

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், நாடு முழுவதும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 5ஜி தொழில்நுட்பம் தான். அதாவது ஜந்தாம் தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை

அண்மையில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின்தொலைத்தொடர்புத் துறை செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது

அனுமதி மறுக்கப்பட்டது

அனுமதி மறுக்கப்பட்டது

இந்த நிலையில் இந்தியாவில் 5ஜி சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அறிந்த சீன அரசு ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் எம்டிஎன்எல் போன்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு விண்ணப்பித்திருந்தன. பின்பு இந்ந நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்பங்களை வழங்கும் எரிக்ஸன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

தோல்வி நிலையல்ல என்று நிரூபித்த எலான் மஸ்க்: ஸ்டார்ஷிப் எஸ்என் 15 விண்கல சோதனை வெற்றி!தோல்வி நிலையல்ல என்று நிரூபித்த எலான் மஸ்க்: ஸ்டார்ஷிப் எஸ்என் 15 விண்கல சோதனை வெற்றி!

5ஜி சோதனகளை நடத்தவுள்ளது

மேலும் ஜியோ நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த 5ஜி சோதனகளை நடத்தவுள்ளது. இதில் அதிக எதர்பார்ப்புடன் காத்திருந்த சீன நிறுவனங்கள் எதற்கும் அனுமதி அளிக்கப்பட்டவில்லை.

இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்

வாங் ஜியோஜியான்

வாங் ஜியோஜியான்

பின்பு இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் சீன தூதரக செய்தி தொடர்பாளர் வாங் ஜியோஜியான் கூறியது என்னவென்றால், இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வழங்குவதற்கான தொழில்நுட்பப் பரிசோதனையில் சீனாவைசேர்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறிப்பாக இந்த 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதில் சீனா சிறந்து விளங்கி வருகிறது. மேலும் சீன நிறுவனங்களுகக்கு அனுமதி மறுக்கப்பட்டதுஅதிருப்தியையும்,ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று கூறினார்.

 நிறுவனங்களின் வளர்ச்சியையும் பாதிக்கும்

நிறுவனங்களின் வளர்ச்சியையும் பாதிக்கும்

குறிப்பாக இந்த புறக்கணிப்பு இந்தியாவில் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும், நலன்களையும் பாதிப்பது மட்டுமல்லாது இந்திய நிறுவனங்களின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்று கூறியுள்ளார் செய்தி தொடர்பாளர் வாங் ஜியோஜியான்.

இது சினிமா காட்சி அல்ல.! பறக்கும் ஜெட் சூட்களை சோதனை செய்யும் பிரிட்டிஷ் கடற்படை.. வீடியோ உள்ளே..இது சினிமா காட்சி அல்ல.! பறக்கும் ஜெட் சூட்களை சோதனை செய்யும் பிரிட்டிஷ் கடற்படை.. வீடியோ உள்ளே..

5ஜி தொழில்நுட்பத்தினால்

இந்த புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள். ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்துதுறைகளிலும்
ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உதாரணமாக கூறவேண்டும் என்றால், 5ஜிதொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும்.

தொழில்நுட்பங்களை மையமாக

குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
5G technology test: chinese companies denied permission!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X