"இது" சாத்தியமானால் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஒரு மாத காலம் நீடிக்கும்.! எப்படி.?

இதில் எது சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

|

ஒருமுறை முழுமையான சார்ஜ் செய்தால் ஒரு வாரம் முழுவதும் அல்லது 10-15 நாட்ள் வரையிலாக மொபைல் சார்ஜ் நீடித்த பொற்காலம், நினைவில் உள்ளதா.? அந்த காலம் மீண்டும் நம் கைகளுக்குள் வருகிறது என்று கூறினால் நம்புவீர்களா.? ஒருவேளை நாம் இங்கு பேசும் பேட்டரி ஆயுள் நீட்டிப்பானது, முன்னர் இருந்ததை விட இரட்டிப்பாகவும் இருக்கலாம் என்று கூறினால், என்ன பைத்தியம் பிடித்து இருக்கிறதா என்று கேட்பீர்கள் தானே.? ஆம் கிட்டத்தட்ட பைத்தியம் தான் - 5ஜி பைத்தியம்.!

இது சாத்தியமானால் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஒரு மாத காலம் நீடிக்கும்!

வெரிசோன் சிஇஓ, ஒரு தொழில்நுட்ப மாநாட்டில், எதிர்காலத்தில் வரவிருக்கும் 5ஜி தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆயுளில் ஒரு கடுமையான மாற்றத்தை (அதிகரிப்பை) கொண்டு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உருவாக்கம் பெறும் 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட மிக வேகமான இணைய வேகத்தை வழங்குவது மட்டுமின்றி, குறைவான லேடன்சி மதிப்பையும் வழங்கும். லேடன்சி மதிப்பு என்பது நெரிசலான இடங்களில் இருக்கும் டவர்களுடன் எந்த அளவு எளிமையாக இணைப்பை பெற முடியும் என்பது சார்ந்த குறியீடாகும். குறைவான லேடன்சி மதிப்பு என்றால், (5ஜி) பயனர்களால் மிக எளிமையாக டவர்களுடன் இணைய முடியும் என்று அர்த்தம்.

குறைந்த லேடன்சி மதிப்பானது, ஒரு ஸ்மார்ட்போனில் ஒரு சக்தி மாற்றத்தினை (ஸ்மார்ட்போனின் கம்யூட்டிங் ஆற்றல் - மொபைல் நெட்வெர்க் எட்ஜ்) ஏற்ப்படுத்தும், அது எதிர்காலத்தில் மெலிதான சாதனங்களை உருவாக்க வழிவகுக்கும், பின்னர் அது மகத்தான பேட்டரி ஆயுளுக்கு இடமளிக்கும்.

வெரிசோன் சிஇஓ மெக் ஆடமின் கருத்துப்படி, வேகமாக மற்றும் தடையற்ற டேட்டா ஸ்ட்ரீமிங் ஆனது கம்யூட்டிங் ஆற்றலை ஸ்மார்ட்போன்களின் நெட்வொர்க் முனைகளுக்கு மாற்ற உதவும். அது மிக மெல்லிய ஸ்மார்ட்போன்களை உருவாக்க வழிவகை செய்து பேட்டரி ஆயுளை வாரக்கணக்கில் நீட்டிக்க உதவும். இது 5ஜி மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் இது சாத்தியமா.? என்று கேட்டால் சில கோட்பாடுகள் ஒற்றுப்போகின்றன. சில கோட்பாடுகளின்படி, ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரியானது மிகபொறுமையாக குறையும் பட்சத்தில், அக்கருவியின் கம்ப்யூட்டிங் திறன்கள் பாதிக்கப்படும். இதில் எது சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது சாத்தியமானால் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஒரு மாத காலம் நீடிக்கும்!
How To Increase the Speed of your Laptop (TAMIL)

வெரிசோன் நிறுவனம், தற்போது எதிர்கால தொழில்நுட்பங்களின் மீது 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து வருகிறது. இதில் 5ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் கனெக்டெட் கார்ஸ் ஆகியவைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
5G smartphones would only need to be charged once a month: Verizon CEO. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X