5G சேவைக்கு அப்டேட் செய்வதாக கூறி மோசடி.! வங்கி கணக்கு பணம் அபேஸ்.! உஷார் மக்களே.!

|

கடந்த வாரம் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் 5G மொபைல் நெட்வொர்க்கை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாரம், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் வெளியீடு திட்டங்களையும், இந்தியா முழுவதும் 5G இன் ஆரம்ப வெளியீட்டிற்கு தகுதியான நகரங்களின் ஆரம்ப பட்டியலையும் அறிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் 5ஜி போன்களை வைத்திருக்கும் மக்கள் தங்கள் போன்களில் 5ஜியின் ஆற்றலையும் வேகத்தையும் அனுபவிக்க ஆர்வமாக உள்ள நிலையில், ஹைதராபாத் சைபர் க்ரைம் பிரிவு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரித்துள்ளது.

SIM அப்டேட் என்று கூறி வங்கி கணக்கில் இருக்கும் பணம் அபேஸ்.!

SIM அப்டேட் என்று கூறி வங்கி கணக்கில் இருக்கும் பணம் அபேஸ்.!

abplive அறிக்கையின்படி, மோசடி செய்பவர்கள் அப்பாவி மக்களுக்கு அழைப்புகளை விடுத்து தங்கள் ஸ்மார்ட்போனில் பெறப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்த பிறகு வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை இழந்ததற்காகப் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது மிகவும் மோசமான மோசடியாக இருக்கிறது என்பதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், 5G மோசடியில் இருந்து விலகி இருங்கள்.

ஆபத்தான இணைப்பை கிளிக் செய்யாதீர்கள்.!

ஆபத்தான இணைப்பை கிளிக் செய்யாதீர்கள்.!

சில மோசடி செய்பவர்கள் பயனர்களின் போன்களுக்கு ஆபத்தான இணைப்பை அனுப்புகிறார்கள். அதாவது ஒரு லிங்க்-ஐ அனுப்புகிறார்கள்.

இது பயனர்களுக்கு 4G இலிருந்து 5G நெட்வொர்க் அப்டேட் செய்ய உதவுவதாகக் கூறுகிறது. ஆனால், 5ஜியின் சுவையை ருசிக்கத் துடிக்கும் பொதுமக்கள், இது ஏதோ அதிகாரப்பூர்வ செய்தி என்று நினைத்து இந்த இணைப்பை கிளிக் செய்கிறார்கள்.ஆனால், உண்மையில் இது சைபர் குற்றவாளிகளால் அனுப்படுகிறது.

Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?

ஒரே ஒரு லிங்க் கிளிக் செய்ததும் மொத்த பணமும் திருட்டு

ஒரே ஒரு லிங்க் கிளிக் செய்ததும் மொத்த பணமும் திருட்டு

இந்த லிங்க் உங்கள் போனில் உள்ள டேட்டாவை ஹேக் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் போனில் உள்ள தகவலைத் திருடுகிறார்கள்.

இணைப்பைக் கிளிக் செய்தவுடன், குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை அறிந்தவுடன், அவர்கள் தொலைப்பேசி எண்ணைத் தடுத்து, சிம்மை மாற்றிக்கொள்கிறார்கள்.

இதன் விளைவாக மக்கள் தங்கள் சொந்த சிம்மிற்கான அணுகலை இழக்கிறார்கள்.

'4G இலிருந்து 5G-க்கு மாறுங்கள்' என்ற மெசேஜ் வந்தால் உஷார்.!

'4G இலிருந்து 5G-க்கு மாறுங்கள்' என்ற மெசேஜ் வந்தால் உஷார்.!

இதன் காரணமாகப் பல பயனர்கள் சைபர் குற்றவாளிகள் தங்கள் தொலைப்பேசியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதாகப் புகார் அளித்துள்ளனர்.

அறிமுகமில்லாத எண் அல்லது அனுப்புநரிடமிருந்து "4G இலிருந்து 5G-க்கு மாறுங்கள்" என்று வரும் எந்த செய்தியையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் பிரிவு பயனர்களை எச்சரித்துள்ளது.

சிம் வழங்குநரின் அதிகாரப்பூர்வ தளத்தில் சரியான விவரங்களைப் பார்ப்பது எப்போதும் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி எங்கெல்லாம் அறிமுகம்?

ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி எங்கெல்லாம் அறிமுகம்?

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டம் இப்போது இந்தியாவில் உள்ள 8 நகரங்களில் நேரலையில் உள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் களமிறங்கியுள்ளது. ஜியோ பயனர்களுக்கு, 5G சோதனைகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் தொடங்குகிறது. 5ஜி சேவைக்கு மாற நினைத்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஸ்டோர்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
5G SIM Upgrade Fraud: Smartphone User Be Alert and Don't Click The Link On Messages

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X