Jio, Airtel பயனர்களே! உங்களிடம் இந்த போன் இருக்கா? உடனே கையில் எடுங்கள்!

|

Jio, Airtel இணைப்புகளைக் கொண்ட ஐபோன் பயனர்கள் டிசம்பர் 13 இரவு 11:30 மணி முதல் தங்கள் போனில் 5ஜி இணைப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. iOS 16.2 வெளியீட்டின் மூலம் இந்த 5ஜி சேவைக் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் 5ஜி இணைப்பு கிடைக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால் தாராளமாக 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐபோன் 5ஜி சேவை

ஐபோன் 5ஜி சேவை

2020 அல்லது அதற்கு பிறகு வெளியான ஐபோன் மாடல்களை கொண்டிருக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனை ஆகும். அதாவது iPhone 12, iPhone 13 மற்றும் iPhone 14 உள்ளிட்ட மாடல்களை கொண்டிருப்பவர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். அதேபோல் சமீபத்திய ஐபோன் எஸ்இ மாடல் கொண்டிருக்கும் பயனர்களும் 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

ஐபோன் மாடல்களின் பட்டியல்

ஐபோன் மாடல்களின் பட்டியல்

5ஜி இயக்கப்பட்ட ஐபோன் மாடல்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 12
ஐபோன் 12 மினி
ஐபோன் 12 ப்ரோ
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்
ஐபோன் 13
ஐபோன் 13 மினி
ஐபோன் 13 ப்ரோ
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்
ஐபோன் 14
ஐபோன் 14 ப்ளஸ்
ஐபோன் 14 ப்ரோ
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்
ஐபோன் எஸ்இ

ஐபோன் அப்டேட் முக்கியம்

ஐபோன் அப்டேட் முக்கியம்

உங்கள் ஐபோனில் செட்டிங்க்ஸ் பயன்பாட்டை திறந்து ஜெனரல் என்ற தேர்வை கிளிக் செய்யவும். பின் அதில் காட்டப்படு்ம சாஃப்ட்வேர் அப்டேட் என்ற தேர்வை ஓபன் செய்யவும். அதில் iOS 16.2 என்ற சமீபத்திய சாஃப்ட்வேர் அப்டேட்டை புதுப்பித்துக் கொள்ளவும்.

5ஜி ஐகான் காட்டப்படும்

5ஜி ஐகான் காட்டப்படும்

இதை அப்டேட் செய்ததும் உங்கள் ஐபோன் மறுதொடக்கம் செய்து கொள்ளவும், தற்போது உங்கள் நோட்டிப்பிகேஷன் பகுதியில் புதிய 5ஜி ஐகான் காட்டப்படும். செட்டிங்க்ஸ் பயன்பாட்டை திறந்து செல்லுலார் விருப்பங்கள் என்ற தேர்வை தேர்ந்தெடுத்துக் கொண்டால் 5ஜி என்ற தேர்வு விருப்பம் இதில் காட்டப்படும், அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

5ஜி சேவை கிடைக்கும் பகுதி

5ஜி சேவை கிடைக்கும் பகுதி

டெல்லி, மும்பை, நாத்துவாரா, வாரணாசி உள்ளிட்ட 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. 5G சேவையில் ஜியோ மற்றும் ஏர்டெல் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கும் என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளது. அதன்படி 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது.

50 இந்திய நகரங்களில் 5ஜி

50 இந்திய நகரங்களில் 5ஜி

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இலவசமாக தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2 மாதங்களுக்குள் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து 50 இந்திய நகரங்களில் தங்களது 5ஜி சேவையை நிறுவனங்கள் விரிவுப்படுத்தியுள்ளது.

5ஜி சேவை ஆக்டிவேட் செய்வது எப்படி?

5ஜி சேவை ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீங்கள் இருக்கும் பகுதியில் 5ஜி சேவை கிடைக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டு, உங்கள் போனில் 5ஜிக்கான அப்டேட் கிடைக்கத் தொடங்கிவிட்டதா என்பதையும் சரிபார்த்துக் கொண்டு 5ஜி சேவையை பயன்படுத்தத் தொடங்கலாம்.

Best Mobiles in India

English summary
5G service is starting to be available for iPhone 12 and above models: How to Activate Jio, AIrtel Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X