மின்னல் வேகம்.. 50 இந்திய நகரங்களில் 5G சேவை: உங்கள் பகுதி எது? மொத்தமும் ஃப்ரீ மக்களே.!

|

டெல்லி, மும்பை, நாத்துவாரா, வாரணாசி உள்ளிட்ட 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. 5G சேவையில் ஜியோ மற்றும் ஏர்டெல் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கும் என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளது. அதன்படி 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது.

50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை

50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இலவசமாக தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2 மாதங்களுக்குள் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதிகரிக்கும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள்

அதிகரிக்கும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள்

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து 50 இந்திய நகரங்களில் தங்களது 5ஜி சேவையை நிறுவனங்கள் விரிவுப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இரண்டு மாதங்களில் 50 நகரங்கள்

இரண்டு மாதங்களில் 50 நகரங்கள்

சமீபத்திய நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இரண்டு மாதங்களுக்குள் 50 இந்திய நகரங்களில் 5G சேவை தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 5ஜி சேவைக்கு என எவ்வித கட்டணங்களையும் வசூலிக்காமல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி இணைப்பை வழங்குகிறது.

ஏர்டெல் 5ஜி ப்ளஸ் சேவை

ஏர்டெல் 5ஜி ப்ளஸ் சேவை

5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். முதலில் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் குறித்து பார்க்கையில்,

டெல்லி

சில்குரி

பெங்களூரு

ஐதராபாத்

வாரணாசி

மும்பை

நாக்பூர்

சென்னை

குருகிராம்

பனிபட்

குவாஹாடி

பாட்னா

அதேபோல் பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், புனேவில் உள்ள லோஹேகான் விமான நிலையம், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம், நாக்பூரில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் மற்றும் பாட்னாவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் ஏர்டெல் 5ஜி ப்ளஸ் சேவைக் கிடைக்கிறது.

ஜியோ 5ஜி சேவை

ஜியோ 5ஜி சேவை

ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் நகரங்கள் குறித்து பார்க்கையில், ஜியோ 5ஜி சேவையானது

டெல்லி என்சிஆர்

மும்பை

வாரணாசி

கொல்கத்தா

பெங்களூரு

ஐதராபாத்

சென்னை

நாத்வாரா

புனே

குருகிராம்

நொய்டா

காஜியாபாத்

ஃபரிதாபாத்

மற்றும் குஜராத்தின் அனைத்து 33 மாவட்ட தலைமையகங்களிலும் கிடைக்கிறது.

இந்தியா முழுவதும் 5ஜி சேவை

இந்தியா முழுவதும் 5ஜி சேவை

இந்தியாவில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மட்டுமே வழங்குகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் 2024 ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ டிசம்பர் 2023க்குள் குறிப்பிடத்தக்க இந்திய நகரங்களை சென்றடைய இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

Vodafone Idea (Vi) மற்றும் பிஎஸ்என்எல்

Vodafone Idea (Vi) மற்றும் பிஎஸ்என்எல்

Vodafone Idea (Vi) மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்னும் இந்தியாவில் தங்களது 5ஜி சேவைகளை தொடங்கவில்லை. இந்த இரண்டு நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை தொடங்கலாம் என கூறப்படுகிறது.

இலவச 5ஜி

இலவச 5ஜி

எது எப்படியோ, அதிவிரைவாக 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதியில் இருந்தால் 5ஜி இணைப்பை பெறுவதற்கு 5ஜி ஸ்மார்ட்போன் என்பது கட்டாயம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவசமாக 5ஜி சேவையை வழங்கி வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
5G Service Available Indian Cities Expand by Jio and Airtel: People in these 50 cities can use 5G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X