அச்சச்சோ.. என்ன இப்படி சொல்லிட்டாங்க? Airtel, Jio யூசர்களுக்கு ஒரு 'பேட்' நியூஸ்!

|

ஒருபக்கம், அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான BSNL இன்னமும் அதன் 4G சேவையை கொண்டு வரவில்லை. மறுகையில், Airtel மற்றும் Jio போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களோடு இணைந்து, ஒட்டுமொத்த இந்தியாவும் 5G சேவைக்குள் நுழைய தயாராகி கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில்

இந்த நேரத்தில் "இப்படி" ஒரு தகவலா?

2ஜி மற்றும் 3ஜி வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொண்டிருந்த நம்மில் பலரும் தற்போது 4ஜி ஸ்பீட்-ஐ குறைசொல்லும் அளவிற்கு "வளர்ந்து உள்ளோம்" மற்றும் சிலர் எப்போது 5ஜி வரும் என்று பல்லைக்கடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் "இப்படி" ஒரு தகவல் வந்திருப்பது, சிலரை அதிருப்திக்கு உள்ளாக்கலாம். குறிப்பாக ஏர்டெல் & ஜியோ நிறுவனங்களின் பயனர்களை, மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியவர்களையும் & வாங்க திட்டமிடுபவர்களை!

10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!

அப்படி என்ன தகவல்?

அப்படி என்ன தகவல்?

அது, 5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்கிற தகவலே ஆகும்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தத்தம் 5ஜி திட்டங்களின் விலைகளை எந்த 'ரேன்ஞ்சில்' நிர்ணயம் செய்யும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

5ஜி திட்டங்களின் விலைகள் குறித்த இந்த தகவல் டெலிகாம் ஆய்வாளர்களிடம் இருந்து வந்துள்ளதால், அதை மேலோட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது; முழுமையாக தவிர்க்கவும் முடியாது.

5ஜி டேட்டா பிளான்கள் - ஆரம்பத்தில்

5ஜி டேட்டா பிளான்கள் - ஆரம்பத்தில் "வச்சி செய்யும்"!

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 5ஜி சேவை அறிமுகமான தொடக்கத்தில், 5ஜி டேட்டா திட்டங்களானது "அதிக அளவிலான" கட்டணங்களை வசூலிக்கலாம்.

எந்த அளவு அதிகம் என்றால், தற்போது அணுக கிடைக்கும் 4ஜி கட்டணங்களுடன் ஒப்பிடும்போது புதிய தலைமுறை செல்லுலார் நெட்வொர்க்குகள் (அதாவது 5ஜி நெட்வொர்க்) ஆனது "ஆரம்பத்தில்" அதிக விலை கொண்டதாக இருக்கும்.

இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், 4ஜி உடன் ஒப்பிடும்போது 5ஜி திட்டங்களின் கட்டணமானது 10 முதல் 12 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

10% கூடுதல் கட்டணத்தில்... 10 மடங்கு அதிக வேகம்!

10% கூடுதல் கட்டணத்தில்... 10 மடங்கு அதிக வேகம்!

சற்றே அதிகமான 5ஜி திட்டங்களின் விலை விகிதங்கள் ஆனது, டெலிகாம் நிறுவனங்களின் ஆவரேஜ் ரெவன்யூ பெர் யூசரை (Average revenue per user) புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அதே சமயம் 4G உடன் ஒப்பிடும்போது 5G சேவையானது 10 மடங்கு அதிக வேகத்தை வழங்கும் என்பதையும் மறக்க வேண்டாம்.

குறிவைக்கப்படும் மிட்-ரேன்ஜ் & பிரீமியம் ஸ்மார்ட்போன் யூசர்கள்!

குறிவைக்கப்படும் மிட்-ரேன்ஜ் & பிரீமியம் ஸ்மார்ட்போன் யூசர்கள்!

"கொஞ்சம் அதிகமாக செலவானாலும் பரவாயில்லை.. கண்டிப்பாக 5ஜி நெட்வொர்க் வேண்டும்!" என்கிற மனநிலையில் உள்ள மிட்-ரேன்ஜ் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பயனர்களை இலக்காக கொண்டே 5ஜி டேட்டா திட்டங்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

இருப்பினும் - எப்படி பார்த்தாலும் - ஒருகட்டத்தில் 5ஜி திட்டங்களின் விலைகள் 4G விகிதங்களுடன் ஒத்துப்போகும் என்றும் சிலர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை நிஜமாகும் பட்சத்தில், எல்லோருக்குமே 5ஜி சேவைகளுக்கான கதவுகள் திறக்கப்படும். இல்லையேல் 5ஜி போன்களை வாங்கியவர்களுக்கு மட்டுமே 5ஜி சேவை அணுக கிடைக்கும்!

யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் "இதை" மறைக்க முடியும்னு!

ஆக.. நம்பி 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கலாமா?

ஆக.. நம்பி 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கலாமா?

இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படவில்லை; இன்னும் சோதனை கட்டத்திலேயே தான் உள்ளது என்றாலும் கூட சாம்சங், ஒப்போ, ஒன்பிளஸ், ரெட்மி, சியோமி, ரியல்மி போன்ற பெரும்பாலான நிறுவங்களின் கீழ், பல வகையான பட்ஜெட்களின் கீழ், 5ஜி-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன.

இருந்தாலும் ஒரு 5ஜி போனை வாங்கும் முன், அதன் வழியாக உங்களுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

5ஜி சேவை இல்லாத நாட்டில் 5ஜி போன் வாங்குவதால் என்ன நன்மை?

5ஜி சேவை இல்லாத நாட்டில் 5ஜி போன் வாங்குவதால் என்ன நன்மை?

பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைக்கு 5ஜி என்பது வெறுமனே ஒரு வியாபாரம் தான்!

பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ​​இன்னும் மெயின்-ஸ்ட்ரீமிற்கு வராத ஒரு தொழில்நுட்பத்தை (5ஜி) தங்கள் ஸ்மார்ட்போன்களுக்குள் வைத்து, அவைகளை 'பிரீமியம்' விலை பிரிவிற்குள் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள், அவ்வளவு தான்!

78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!

அப்போ 5ஜி போன் வாங்குறது வேஸ்ட்-ஆ!

அப்போ 5ஜி போன் வாங்குறது வேஸ்ட்-ஆ!

அப்படி பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. ஏனெனில் நல்ல சென்சார்களை பேக் செய்யும் கேமரா செட்டப், டிஸ்பிளே க்வாலிட்டி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் போன்ற அம்சங்ளில் நீங்கள் கவனம் செலுத்தும் பட்சத்தில் - எப்படி பார்த்தாலும் - 4ஜி போன்களை விட 5ஜி மாடல்கள் தான் பெஸ்ட்!

மேலும் நீங்கள் ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், அது ​​5-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் பேண்டுகளை ஆதரிக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளவும்.

இல்லையேல், அடுத்த 2 - 3 ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க்குகள் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பின்னர், ​​நீங்கள் புதிதா மற்றொரு 5ஜி போனை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

5ஜி வேண்டாம் என்றால்.. தொடர்ந்து 4ஜி-யையே பயன்படுத்தலாம்!

5ஜி வேண்டாம் என்றால்.. தொடர்ந்து 4ஜி-யையே பயன்படுத்தலாம்!

ஏனெனில் 5ஜி அறிமுகம் ஆகினாலும் கூட 4ஜி நெட்வொர்க்குகள் எங்கும் போகாது; இங்கேயே தான் இருக்கும்.

அதுமட்டுமின்றி, 5ஜி சேவையானது படிப்படியாகவே அறிமுகம் செய்யப்படும். எனவே, உடனே ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற எந்த கட்டாயமும் இங்கே இல்லை. எல்லாமே உங்கள் விருப்பம் தான்!

Best Mobiles in India

English summary
5G Plan Cost in India Telcos like Airtel Jio Prices Initially to be Higher than 4G.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X