வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 5G போன்; பக்காவாக பிளான் போடும் Samsung!

|

"வீட்டில் இருக்கும் எல்லோருக்குமே 5ஜி ஸ்மார்ட்போன்!" என்றதும், இது எந்த தேர்தல் அறிக்கை என்று கேட்டு - கலாய்த்து - விடாதீர்கள்!

இதுவொன்றும் தேர்தல் அறிக்கையல்ல. இது தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான Samsung (சாம்சங்), நம் இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்போகும் ஒரு மிக முக்கியமான வியாபார தந்திரம் ஆகும்!

அதென்ன தந்திரம்?

அதென்ன தந்திரம்?

ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் நிறுவனங்களும் (BSNL உட்பட) 5ஜி அறிமுகத்திற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

(அறியாதோரக்ளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் 2023-இல் தான் அறிமுகமாகும் என்றாலும் கூட, அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் 5ஜி சோதனை தொடர்பான வேலைகளையும் ஈடுபட்டு வருகிறது)

இந்நிலையாட்டில் தான் சாம்சங் அதன் "5ஜி தந்திரம்" ஒன்றை, இந்தியாவில் கட்டவிழ்த்து விட உள்ளது!

10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!

நினைத்து பார்க்க முடியாத பட்ஜெட் விலையில் 5ஜி போன்!

நினைத்து பார்க்க முடியாத பட்ஜெட் விலையில் 5ஜி போன்!

சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படவுள்ள Galaxy A04s ஆனது 4G மற்றும் 5G என இரண்டு எடிஷன்களிலும் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இது நினைத்து பார்க்க முடியாத பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

அதாவது இந்தியாவில் (அடுத்த சில மாதங்களில்) 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதை மனதில் கொண்டு சாம்சங் நிறுவனம் Galaxy A04s ஸ்மார்ட்போனை மிகவும் குறைவான விலை நிர்ணயம் கொண்ட 5ஜி போனாக அறிமுகம் செய்ய உள்ளது!

மிகவும் குறைவான விலை என்றால்.. எவ்வளவு குறைவாக?

மிகவும் குறைவான விலை என்றால்.. எவ்வளவு குறைவாக?

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.10,000 மற்றும் ரூ.11,000 பட்ஜெட் பிரிவின் கீழ் கூட அறிமுகம் செய்யலாம்.

மேற்குறிப்பிட்ட வரம்பில், வேறு நிறுவனங்களின் 5ஜி (போன்) விருப்பங்கள் அதிகமாக இல்லை என்பதால் சாம்சங்கின் இந்த "5ஜி தந்திரம்" மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய அதிக வாய்ப்புள்ளது.

இப்போது சொல்லுங்கள், ரூ.10,000 என்கிற பட்ஜெட்டில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானால், அதுவும் சாம்சங் போன்ற ஒரு பிரபலமான நிறுவனத்திடம் இருந்து வெளியானால், உங்கள் வீட்டில் இருக்கும் எல்லோருக்குமே 5ஜி போன் எளிமையாக கிடைக்கும் தானே?!

பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!

Samsung Galaxy A04s எப்போது அறிமுகமாகும்?

Samsung Galaxy A04s எப்போது அறிமுகமாகும்?

91Mobiles வழியாக நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தியானது நொய்டா உள்ள சாம்சங் ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள், அனேகமாக செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில், தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் அறிமுகம் செய்யப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம் Samsung Galaxy A03s ஆனது கடந்த ஆகஸ்ட் 2021 இல் இந்தியாவில் அறிமுகமானது.

Galaxy A04s ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

Galaxy A04s ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

சாம்சங்கின் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பெரிய அளவிலான லீக்ஸ் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட, இது சில சான்றிதழ் தளங்களில் காணப்பட்டுள்ளது.

அதன் வழியாக கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

அதன்படி, Samsung Galaxy A04s ஆனது நிறுவனத்தின் சொந்த Exynos 850 சிப்செட்டை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. முன்னதாக, இதே சிப்செட் Geekbench லிஸ்டிங் வழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டது என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

ஸ்டோரேஜ், கேமரா - எப்படி இருக்கும்?

ஸ்டோரேஜ், கேமரா - எப்படி இருக்கும்?

இந்த சாம்சங் போன் குறைந்தது 3ஜிபி ரேம்-ஐ பேக் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் இல்லை.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 13எம்பி ரியர் கேமரா இடம்பெறலாம். லேட்டஸ்ட் ஆக லீக் ஆன ரெண்டர்களை (புகைப்படங்கள்) வைத்து பார்க்கும் போது, கேலக்ஸி A04s ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். ஆனால் மீதமுள்ள 2 சென்சார்கள் குறித்து தகவல்கள் இல்லை.

பாஸ்ட் சார்ஜிங் & பேட்டரியில் என்ன எதிர்பார்க்கலாம்?

பாஸ்ட் சார்ஜிங் & பேட்டரியில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த போனின் சார்ஜிங் தொடர்பான தகவல், அமெரிக்க சான்றிதழ் இணையதளமான FCC வழியாக தெரியவந்துள்ளது. அதன்படி, இது 25W சப்போர்ட்-ஐ பேக் செய்யும்.

ஒருவேளை இது மற்ற M சீரீஸ் மற்றும் A சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒற்றுப்போகும் பட்சத்தில், சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஆனது இந்தியாவில் 15W சார்ஜர் உடன் வரவும் வாய்ப்புள்ளது.

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

விலை கம்மி என்பதால்.. டிசைன் மொக்கையாக இருக்குமா?

விலை கம்மி என்பதால்.. டிசைன் மொக்கையாக இருக்குமா?

சான்ஸே இல்லை! முன்னனரே குறிப்பிட்டபடி Samsung Galaxy A04s ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் ரெண்டர் புகைப்படங்கள் சமீபத்தில் தன லீக் ஆகின. அதன் வழியாக, இது மிகவும் 'டீசன்ட்' ஆன வடிவமைப்பையே வெளிப்படுத்துகிறது.

மொபைலின் பின்புறத்தில், ட்ரிபிள் ரியர் கேமராக்களை பார்க்க முடிகிறது. முன்பக்கத்தில் உள்ள செல்பீ கேமராவானது டிஸ்பிளேவின் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பில் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் கீழ் பகுதியில் யூஎஸ்பி டைப்-சி, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் போன்றவைகள் அமைந்துள்ளன.

அதே நேரத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் ஆனது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் அமைந்துள்ளன. இதன் பவர் பட்டன் ஆனது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனராகவும் செயல்படலாம்.

Samsung Galaxy A04s பற்றிய புதிய விவரங்கள் ஏதேனும் கிடைத்தால், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Photo Courtesy: On Leaks, GizNext

Best Mobiles in India

English summary
5G Phone Under Rs 11000 in India Samsung Working on Galaxy A04s Check Expected launch date Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X