தடையற்ற வேகம், வரம்பற்ற அணுகல் - மிக விரைவில் சாத்தியமானது 5ஜி.!

Written By:

அடுத்த தலைமுறை மொபைல் நெட்வர்க் ஆன 5ஜி தொழில்நுட்ப்பம் வருகிற 2019-ஆம் ஆண்டில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வானம் ஏடி & டி, டி-மொபைல் மற்றும் வெரிசோன் போன்ற நிறுவனங்கள் நோக்கியா மற்றும் எரிக்சன் போன்ற உற்பத்தியாளர்களுடன் இணைந்து அடுத் தலைமுறை மொபைல் நெட்வொர்க்குகள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

5ஜி தொழில்நுட்பம் சாத்தியப்படும் போது நெரிசல் மிக்க இடங்களில் கோடா பல சாதனங்களுக்கும்எ அதிக அளவிலான டேட்டாவை வழங்க முடியும். 5ஜி சேவையின் அறிமுகத்திற்கு பின்னர் யாரையாவது அழைக்கவோ அல்லது ஒரு செய்தியை அனுப்பவோ நீங்கள் உங்கள் வொர்க்குகளுடன் போராட வேண்டிய அவசியமே இருக்காது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வரம்பற்ற அணுகலை எளிமையாக பெறலாம்

வரம்பற்ற அணுகலை எளிமையாக பெறலாம்

ஃபாரஸ்டர் ஆய்வாளரான டான் பைலர் கணிப்பின்படி, "5ஜி தொழில்நுட்பம், ஒரு நாடு முழுவதிலுமே ஒருமுறை வந்துவிடுகிறது என்றால், அதிக அளவிலான அலைவரிசை கிடைக்கும் ஆக நாம் வரம்பற்ற அணுகலை எளிமையாக பெறலாம்".ஃபாரஸ்டர் ஆய்வாளரான டான் பைலர் கணிப்பின்படி, "5ஜி தொழில்நுட்பம், ஒரு நாடு முழுவதிலுமே ஒருமுறை வந்துவிடுகிறது என்றால், அதிக அளவிலான அலைவரிசை கிடைக்கும் ஆக நாம் வரம்பற்ற அணுகலை எளிமையாக பெறலாம்".

10 மடங்கு வேகமாக இருக்கும்

10 மடங்கு வேகமாக இருக்கும்

5ஜி நெட்வொர்க் தரவானது 4ஜி சேவையை விட வேகமாக அனுப்பப்படும். 5ஜி வழியாக அனுப்பப்படும் தரவு சிறந்த நிலையில் இருக்கும் அதாவது 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகமாக இருக்கும்.

கவரேஜை மேம்படுத்தவும், கருவியின் உழைப்பை குறைக்கவும்

கவரேஜை மேம்படுத்தவும், கருவியின் உழைப்பை குறைக்கவும்

5ஜி ஆனது கவரேஜை மேம்படுத்தவும், கருவியின் உழைப்பை குறைக்கவும், சமிக்ஞை செயல்திறனை மேம்படுத்தவும் மற்றும் பலவற்றிற்காகவும் உதவும். ஒரு பெரிய கூட்ட நெரிசலில் கூட நீங்கள் ஒரு யூட்யூப் வீடியோவைப் பார்க்கலாம், மின்னஞ்சல் அனுப்பலாம். மேற்கூறியவற்றை 4ஜி சேவை பயன்படுத்தி அவ்வளவு எளிதாக செய்ய முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள்.

விர்ச்சுவல் ரியாலிட்டி, தானியங்கி கார்

விர்ச்சுவல் ரியாலிட்டி, தானியங்கி கார்

5ஜி தொழில்நுட்பமானது, உயர்தர வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதற்கு மட்டுமல்லாமல், 5ஜி ஆனது புதிய தொழில்நுட்பங்களான விர்ச்சுவல் ரியாலிட்டி, தானியங்கி கார்களுக்கு இடையேயான நிகழ்நேர தகவல் பரிமாற்றம் ஆகியவைகளையும் நிகழ்த்தும்.

"நிலையான வயர்லெஸ்"

வேகமாக பிராட்பேண்ட் கொண்டு வரப்படும் "நிலையான வயர்லெஸ்" இணைப்புகளின் கீழ் நமது வீடுகளில் ஆரம்பக்கட்ட 5ஜி தொழில்நுட்பம் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி காணப்படும்

5ஜி காணப்படும்

மொபைல் சிப் தயாரிப்பு நிறுவனமான க்வால்காம், 2019 ஆம் ஆண்டில் மொபைல்களில் 5ஜி காணப்படும் என்றும், அதன் வழியாக மொபைல் போன்களுக்கான 5ஜி தொடர்புகளின் முதல் பரிசோதனைகள் தொடங்கப்பட்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு அருகிலான சில நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளது.

5ஜி மோடம் சோதனை

5ஜி மோடம் சோதனை

வெறும் கூற்றோடு இல்லாமல், க்வால்காம் நிறுவனம் அதன் எக்ஸ்50 5ஜி மோடம் சோதனையை நிறைவு செய்து விட்டதாகவும் மற்றும் அந்த சோதனை 28ஜிகாஹெர்ட்ஸ் மில்லிமீட்டர் அலைவரிசை கொண்டு நிகழ்த்தப்பட்டது என்று அறிவித்துள்ளது.

5ஜிபிபிஎஸ் என்ற வேகத்தை எட்டும்

5ஜிபிபிஎஸ் என்ற வேகத்தை எட்டும்

இந்த சோதனைகளில் மோடமானது ஜிகாபிட் வேகத்தை அடைந்துள்ளது என்றும், ஒருமுறை 5ஜி தொழில்நுட்ப பணிகள் முழுமையாக முடிந்தவுடன், இந்த வேகமானது 5ஜிபிபிஎஸ் என்ற வேகத்தை எட்டும் என்றும் க்வால்காம் தெரிவித்துள்ளது.

"மாதிரி" வடிவமைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக க்வால்காம் நிறுவனம் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் சார்ந்த "மாதிரி" வடிவமைப்பு ஒன்றையும் அறிவித்தது. வருகிற 2019-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு இணக்கமான ஸ்மார்ட்போன்களை வெளியிட நிறுவனம் உத்தேசித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
5G Networks with Unlimited Data are Expected in 2019. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot