Home
News

ஆர்டர் அரளுது.. வெறும் ரூ.15,990க்கு 40 இன்ச் டிவி.. பெசல்-லெஸ் டிஸ்பிளே.. 16GB மெமரி.. டால்பி ஆடியோ!

இந்திய டெலிவிஷன் மார்கெட்டே மிரளும் விதமாக வெறும் ரூ.15,990 பட்ஜெட்டுக்கு டிசிஎல் 40 இன்ச் ஃபுல்எச்டி ஆண்ட்ராய்டு டிவி ஆஃபரில் விற்பனைக்கு வந்துள்ளது. பெசல்-லெஸ் டிசைன், ஃபுல்எச்டி டிஸ்பிளே, 8 ஜிபி மெமரி போன்ற பிரீமியம் அம்சங்கள் இந்த டிவி கொண்டிருக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) வரும் அக்டோபர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் முதல் டிவிகள் வரையில் மூக்கில் விரல் வைக்கும்படியான ஆஃபர்கள் கொடுக்கப்பட இருக்கிறது. இதனிடையே நாள்தோறும் ஆஃபர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருவதால், அமேசான் தளத்தில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

ரூ.15,990க்கு 40 இன்ச் டிவி.. பெசல்-லெஸ் டிஸ்பிளே.. 16GB மெமரி!

இவர்களை அப்படியே தட்டித்தூக்கும் விதமாக அமேசான் நிறுவனம், ஃபெஸ்டிவல் சேலுக்கு முன்பு டிவிகளுக்கு 40 முதல் 60 சதவீதம் வரையில் தள்ளுபடியை கொடுக்க தொடங்கிவிட்டது. இந்த தள்ளுபடியில் டிசிஎல் (TCL) டிவிகளுக்கு நம்ப முடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில் ஒட்டுமொத்த கவனத்தையும், டிசிஎல் 40 இன்ச் ஃபுல்எச்டி ஆண்ட்ராய்டு டிவி (TCL 40 inch FHD Android TV) பெற்றுள்ளது.

டிசிஎல் எஸ் சீரிஸ் டிவி அம்சங்கள் (TCL S Series TV Specification): இந்த டிவி 40 இன்ச் ((1920 x 1080) பிக்சல்கள்) ஃபுல்எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு எல்இடி பெசல்-லெஸ் டிஸ்பிளே மாடலாகும். ஏ பிளஸ் (A+) கிரேட் பேனல் கொண்டுள்ளது. இந்த டிவியில் 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் ‎1080p ரெசொலூஷன் கிடைக்கும். டிஜிட்டல் நாய்ஸ் கன்ட்ரோல் (Digital Noise Control) வருகிறது. குறிப்பாக மைக்ரோ டிம்மிங் (Micro Dimming), டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement) மற்றும் ஏஐபிகியூ என்ஜின் (AiPQ Engine) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதனால், வீடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் அனுபவத்தை கொடுக்கும். இந்த டிவியின் ஆடியோவை பொறுத்தவரையில், 24W அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதில் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவி ஆண்ட்ராய்டு 11 டிவி ஓஎஸ் (Android 11 TV OS) கொண்டுள்ளது.

ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் வருகிறது. அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பெரும்பாலான ஓடிடி ஆப்கள் வருகின்றன. அதோடு 64 பிட் குவாட்-கோர் (Quadcore) சிப்செட் மற்றும் ஜி31எம்பி2 (‎G31MP2) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த டிவி 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

மொத்தமாக 29 சிஸ்டம் லாங்குவேஜ் சப்போர்ட் வருகிறது. ஓகே கூகுள் (Ok Google) வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Chromecast built-in) சப்போர்ட் உள்ளது. இந்த டிசிஎல் டிவி ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யுஎஸ்பி (USB), வை-பை (‎Wi-Fi) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டுள்ளது. இதற்கு ஸ்மார்ட் ரிமோட் (Smart remote) கொடுக்கப்பட்டுள்ளது.

வால் மவுண்ட் (‎Wall Mount) மற்றும் டேபிள் மவுண்ட் (Table Mount) டைப் கொண்டிக்கிறது. மொத்தமாக 5.280 கிலோ எடைக் கொண்டுள்ளது. பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு வருகிறது. 2 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த டிவியின் விலை ரூ.20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது.

இப்போது, வெறும் ரூ.16,990க்கு அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கூப்பன் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த டிசிஎல் 43 இன்ச் பெசல்-லெஸ் ஆண்ட்ராய்டு டிவியை வெறும் ரூ.15,990க்கு வாங்கிக் கொள்ள முடிகிறது. இதனால், டிவி பிரியர்கள் ஆர்டருக்கு மேல் ஆர்டர் செய்து வருகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
59 percent discount on 40 inch TCL S Series Android LED TV in Amazon Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X