டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 செயலிகளுக்கு தடை: இந்திய அரசு அதிரடி அறிவிப்பு- பட்டியல் உள்ளே

|

டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. 59 சீன பட்டியல் மற்றும் தடை விதிப்புக்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 வைரஸ் தாக்கம்

கோவிட்-19 வைரஸ் தாக்கம்

உலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையை சாதகமாக்கி சீனா தங்களுக்கு சாதகமாக எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை!

போர் விமானங்கள் குவிப்பு

போர் விமானங்கள் குவிப்பு

லடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதிகமான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது. இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு

உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு

அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்ற வகையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிவுறுத்தலை அரசு வெளியிட வேண்டும் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தாக தெரிவித்தது.

இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு

இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு

அதோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்பட்டு வந்தது.

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

இந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.

130 கோடி இந்தியர்களின் தனியுரிமை பாதுகாப்பு

130 கோடி இந்தியர்களின் தனியுரிமை பாதுகாப்பு

இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு

பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு

இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகும்.

59 சீன செயலிகள் பட்டியல்

59 சீன செயலிகள் பட்டியல்

  • டிக்டாக்
  • ஷேர் இட்
  • க்வாய்
  • யூசி பிரவுசர்
  • பய்டு மேப்
  • ஷெயின்
  • க்ளாஷ் ஆப் கிங்ஸ்
  • டியூ பேட்டரி சேவர்
  • ஹலோ
  • லைக்
  • யூகேம் மேக்அப்
  • எம்ஐ கம்யூனிட்டி
  • சிஎம் ப்ரவுசர்
  • வைரஸ் க்ளீனர்
  • அபஸ் பிரவுசர்
  • ரோம்வி
  • க்ளப் ஃபேக்டரி
  • நியூஸ்டாக்
  • ப்யூட்டி ப்ளஸ்
  • வீசேட்
  • யூசி நியூஸ்
  • க்யூ க்யூ மெயில்
  • வெய்போ
  • க்சென்டர்
  • க்யூ க்யூ மியூசிக்
  • க்யூ க்யூ நியூஸ் ஃபீட்
  • பிகோ லைவ்
  • செல்பி சிட்டி
  • மெயில் மாஸ்டர்
  • பேரலல் ஸ்பேஷ்
  • எம்ஐ வீடியோ கால்-சியோமி
  • வீசின்க்
  • இஎஸ் ஃபைல் எக்ஸ்ப்ளோரர்
  • கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!

    விவோ வீடியோ உட்பட விவோ வீடியோ உட்பட தடை விதிக்கப்பட்ட செயலிகள்

    விவோ வீடியோ உட்பட விவோ வீடியோ உட்பட தடை விதிக்கப்பட்ட செயலிகள்

    • விவோ வீடியோ- க்யூ வீடியோ இன்க்
    • மெய்டூ
    • விஹோ வீடியோ
    • நியூ வீடியோ ஸ்டேடஸ்
    • டியூ ரெக்கார்டர்
    • வால்ட்-ஹைட்
    • கேச்சி க்ளீனர் டியூ ஆப் ஸ்டுடியோ
    • டியூ க்ளீனர்
    • டியூ ப்ரவுசர்
    • ஹாகோ ப்ளே வித் நியூ ப்ரண்ட்ஸ்
    • கேம் ஸ்கேனர்
    • க்ளீன் மாஸ்டர்-சீட்டாஹ் மொபைல்
    • வொண்டர் கேமரா
    • போட்டோ வொண்டர்
    • க்யூ க்யூ ப்ளேயர்
    • வீ மீட்
    • ஸ்வீட் செல்பி
    • பெய்டு ட்ரான்ஸ்லேட்
    • வீ மேட்
    • க்யூ க்யூ இன்டர்நேஷனல்
    • க்யூ க்யூ செக்யூரிட்டி சென்டர்
    • க்யூ க்யூ லான்சர்
    • யூ வீடியோ
    • வீ ஃப்ளை ஸ்டேடஸ் வீடியோ
    • மொபைல் லெகன்ட்ஸ்
    • டியூ ப்ரைவசி

Best Mobiles in India

English summary
59 chinese app banned in india: here the list- do you know the reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X