பெற்றோர்களே உஷார்: 59.2% குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் சாட்டிங்- அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல்!
கொரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியானது.

இதையடுத்து மாணவர்களின் நலன்கருதி சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினர். அதேபோல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறித்து வருகிறது. அதற்கேற்ப தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி வருகிறது.
மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளத் தொடங்கினர். இதற்கு லேப்டாப், டேப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்கள் பிரதானமாக இருக்கிறது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வாங்கிக் கொடுத்து வருகின்றனர். பெற்றோர்களின் செல்போனை அவ்வப்போது பயன்படுத்திய காலம் சென்று தற்போது 24 மணிநேரமும் தங்களுக்கென ஒரு ஸ்மார்ட்போனை சொந்தமாக்கி குழந்தைகள்(மாணவர்கள்) பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பை தொந்தரவு இன்றி படிக்க வேண்டும் என்ற பெயரில் ஸ்மார்ட்போனை சொந்தமாக்கி வருகின்றனர்.
இதையடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வானது இன்டெர்நெட் இமைப்புடன் ஸ்மார்ட்போன்களை குழந்தைகள் பயன்படுத்துவதால் உடல்நீதியாக, மனரீதியாக, சமூகரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. 59.2% குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற தளங்களின் மூலம் மெசேஜ் அனுப்பவே பயன்படுத்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 10.1% குழந்தைகள் மட்டுமே கல்வி கற்க பயன்படுத்துகிறார்கள்.
அதுமட்டுமின்றி 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 37.8% பேர் ஃபேஸ்புக் தளத்தில் கணக்கு வைத்திருக்கிறார்கள் எனவும் 24.3% பேர் இன்ஸ்டாகிராம் தளத்தில் கணக்கு வைத்திருக்கிறார்கள் எனவும் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பேஸ்புக், இன்ஸ்டா விதிகளை மீறி கணக்குத் வைத்துள்ளனர்.
அதோடு 8 வயதுமுதல் 18 வயதுவரை உள்ள பேர்களில் 30.2 சதவீதம் பேரிடம் சொந்தமாக ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. இதில் 94.8 சதவீதம் பேர் ஆன்லைன் வகுப்புக்கு மற்றும் பாடங்களை கற்கவே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோம் என தெரிவிக்கின்றனர். ஆனால் ஆய்வில் வெளியானத் தகவல் பெற்றோர்களை ஆச்சரியளிக்கும் வகையில் இருக்கிறது என்பதே உண்மை என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications