விஞ்ஞானிகளை வியக்க வைத்த 57 ஆயிரம் ஆண்டு பழமையான ஓநாய் குட்டி கண்டுபிடிப்பு.. எங்கே தெரியுமா?

|

உலகத்தில் தினமும் பல பிரமிக்கத்தக்க விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புறம் நமது முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் டைனோசர், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அரிய ஓநாய் குட்டியின் மம்மி புதைபடிமம்

அரிய ஓநாய் குட்டியின் மம்மி புதைபடிமம்

அப்படியான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த ஒரு அரிய மம்மி புதைபடிமம் தான் இந்த ஓநாய் குட்டி. கனடாவின் வடக்குப் பகுதியில் 56 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பணிக்குள் புதைந்து கிடந்த இந்த புதைபடிம விலங்கு ஒரு ஓநாய்க் குட்டியாகும். முதலில், இந்த ஓநாய் குட்டி 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

வெளியான திடுக்கிடும் உண்மைகள்

வெளியான திடுக்கிடும் உண்மைகள்

ஆனால், பலகட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. இந்த படத்தில் பற்களை காட்டிக்கொண்டு, சுருங்கிய தோலுடன் உடலில் மயிர் உடன் காணப்படும் இந்த ஓநாய்க் குட்டி ஒரு பெண் ஓநாய் குட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அடர்த்தியான நிரந்தரப் பனிப் பாறைக்குள் 57 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புதைந்து கிடந்த இந்த பெண் ஓநாய்க் குட்டியின் புதைபடிமத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.

ஜியோ பயனர்களுக்கு குஷி.. ஜியோ வழங்கும் போனஸ் டேட்டா நன்மை..ஜியோ பயனர்களுக்கு குஷி.. ஜியோ வழங்கும் போனஸ் டேட்டா நன்மை..

ஜூர் என்ற ஓநாய்குட்டி

ஜூர் என்ற ஓநாய்குட்டி

அந்த பகுதியில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த ஒரு தங்கம் தேடும் நபர் இதைக் கண்டுபிடித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த பெண் ஓநாய்குட்டிக்கு ஜூர் என்று பெயரிடப்பட்டது. ஜூர் (Zhur) என்றால் அப்பகுதியின் உள்ளூர் மக்கள் மொழியில் ஓநாய் என்று அர்த்தம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஓநாய் மம்மி புதைபடிமங்களிலேயே மிகவும் பழமையானது மற்றும் முழு உடலுடன் கிடைத்த புதைபடிமம் இதுவாகும்.

அழியாமல் அப்படியே இருக்கும் தோல், முடி மற்றும் பற்கள்

அழியாமல் அப்படியே இருக்கும் தோல், முடி மற்றும் பற்கள்

பனிப்பாறைக்குள் இருந்ததால், இதன் தோல், முடி, பற்கள் போன்ற உறுப்புக்கள் சிதையாமல் அப்படியே இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார். இதனால், இந்த ஆராய்ச்சி இன்னும் பல நம்பமுடியாத உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். குறிப்பாக ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் ஓநாய்கள் எவ்வாறு குடிபெயர்ந்தன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

விளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.!!விளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.!!

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி

2106 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் எப்படி வாழ்ந்திருக்கும்? அதன் வயது என்ன இருக்கும்? இதன் உணவு முறை என்னவாக இருந்திருக்கும்? எதனால் இந்த ஓநாய் குட்டி இறந்திருக்கக் கூடும்? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஒரு விஞ்ஞானி குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. பல அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அனைத்து கேள்விகளுக்கான பதிலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

57 ஆயிரம் ஆண்டு பழமையான ஓநாய் குட்டி

57 ஆயிரம் ஆண்டு பழமையான ஓநாய் குட்டி

முதலில் இந்த ஓநாய் குட்டி எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்தது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் டி.என்.ஏ. டெஸ்டிங், கார்பன் டெஸ்டிங், பல் எனாமல் டெஸ்டிங் போன்ற பல முறைகளைப் பின்பற்றி, இது 57 ஆயிரம் ஆண்டு பழமையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அக்குட்டியும் அதன் தாயும் அந்த பகுதியில் சாலமோன் மீன் வகைகளை உண்டு உயிர் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஓநாய் குட்டியின் எக்ஸ்-ரே

ஓநாய் குட்டியின் எக்ஸ்-ரே

அதேபோல், இந்த ஓநாய் குட்டியின் உடலை எக்ஸ்-ரே செய்து பார்த்ததில், இது பிறந்து 6 முதல் 8 வாரங்கள் மட்டுமே ஆனா குட்டியாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த ஓநாய் குட்டி இறப்பதற்கு முன்பு வரை எந்த நோய் தோற்றும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருந்துள்ளது என்றும், அது வாழ்ந்து வந்த குகை இடிந்து விழுந்ததால் உடனடியாக இறந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2016ம் ஆண்டிற்கு பின் இந்த செய்தி மீண்டும் வலைத்தளத்தில் இப்போது பரவி வருகிறது.

Source: nationalgeographic.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
57000-Year-Old Wolf Puppy Found Frozen In Yukon Permafrost North Canada : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X