Home
News

கேபிள் TV-ஐ கட் பண்ணிடுங்க.. இவ்ளோ கம்மி விலைக்கு.. மாசா மாசம்.. 550+ சேனல்கள், 21 OTT.. 400Mbps ஸ்பீட்-ஆ!

நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ள 3 திட்டங்களின் நன்மைகளை பற்றியும்.. அவைகளின் விலை நிர்ணயங்களை பற்றியும் கேள்விப்பட்ட பின்னர்.. உங்கள் வீட்டில் உள்ள கேபிள் டிபி (Cable TV) கனெக்ஷனை நீங்கள் உடனே 'கட்' செய்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

ஏனென்றால், குறிப்பிட்ட 3 திட்டங்களும் கேபிள் கட்டர் (Cable Cutter) என்கிற தொகுப்பின் கீழ் தான் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. "அடேய்.. யார்றா நீ ?" என்று அம்பானியே கேட்கும் படியாக.. வேகமாக வளர்ந்து வரும் இண்டர்நெட் சேவை வழங்குநரான எக்சைடெல்-ன் (Excitel) ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 3 திட்டங்களை பற்றித்தான். அதென்ன திட்டங்கள்? அவற்றின் விலை என்ன? நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:

கேபிள் TV-ஐ கட் பண்ணிடுங்க.. 550+ சேனல்கள், 21 OTT, 400Mbps ஸ்பீட்!

01. கேபிள் கட்டர் - வைஃபை + ஐபிடிவி (எக்சைடெல் டிவி) + ஓடிடி: இது 400 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஸ்டார்பிளஸ், சோனி டிவி, கலர்ஸ், டிஸ்கவரி, எம்டிவி மற்றும் கார்ட்டூன் நெட்வொர்க் போன்ற 37 பிரீமியம் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் 300+ எப்டிஏ சேனல்கள் கிடைக்கும்.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), சோனி லைவ் (Sony Liv), ஜீ5 (Zee5), ஆல்ட் பாலாஜி (ALT Balaji), சன் நெக்ஸ்ட் (Sun Nxt), ஆஹா டிவி (Aha TV) உட்பட மொத்தம் 21 ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். விலையை பொறுத்தவரை 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.734 செலுத்த வேண்டும்.

கேபிள் TV-ஐ கட் பண்ணிடுங்க.. 550+ சேனல்கள், 21 OTT, 400Mbps ஸ்பீட்!

02. கேபிள் கட்டர் - வைஃபை + ஓடிடி: இது 300 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5, ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், ஆஹா டிவி உட்பட மொத்தம் 21 ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். விலையை பொறுத்தவரை 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.604 செலுத்த வேண்டும்.

03. கேபிள் கட்டர் - வைஃபை + ஐபிடிவி (எக்சைடெல் டிவி): இது 200 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் ஒரு திட்டமாகும். இதன்கீழ் ஸ்டார்பிளஸ், சோனி டிவி, கலர்ஸ், டிஸ்கவரி, எம்டிவி மற்றும் கார்ட்டூன் நெட்வொர்க் உட்பட மொத்தம் 37 பிரீமியம் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் 300+ எப்டிஏ சேனல்கள் கிடைக்கும். விலையை பொறுத்தவரை 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.554 செலுத்த வேண்டும்.

கேபிள் TV-ஐ கட் பண்ணிடுங்க.. 550+ சேனல்கள், 21 OTT, 400Mbps ஸ்பீட்!

இந்த மூன்று எக்சைடெல் திட்டங்களில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்.. இவைகள் அனைத்தும் ​​வைஃபை கனெக்ஷன் வழியாக.. அட்டகாசமான இண்டர்நெட் ஸ்பீடின்கீழ் போதுமான அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்குகின்றன. கூடவே நம்பமுடியாத பொழுதுபோக்கு நன்மைகளையும் வழங்குகின்றன; அதாவது ஒட்டுமொத்த வீட்டின் தேவைகளையும் "ஒரே ஆளாக" பூர்த்தி செய்கின்றன.

நாம் மேற்கண்ட 3 எக்சைடெல் டிவி திட்டங்களும் தற்போது டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் எதிர்காலத்தில், இது பல பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
550 TV channels 21 OTT Upto 400 Mbps Internet Speed All Details About Excitel Cable Cutter Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X