Home
News

பரியேறும் BSNL.. கதிகலங்கும் Jio, Airtel.. 2025 முன்பே ஆட்டம்.. கட்டண உயர்வுக்கு பின் 55 லட்சம் சிம் போர்ட்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) 2024ஆம் ஆண்டில் கட்டண உயர்வை செய்தாலும் செய்தன. முடியலடா சாமி என்று சொல்லும் அளவுக்கு பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் கஸ்டமர்களின் கரிசனம் அதிகரித்துவிட்டது. நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய சிம் கார்டுகள் மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இருந்து மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இப்போது, 2025ஆம் ஆண்டுக்கு முன்பே மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது.

டெலிகாம் மார்கெட்டில் கொடிக்கட்டி பறந்த பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களின் வருகைக்கு பிறகு துடைத்து எடுக்கப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனங்கள் வழங்க முடியாத தொலைத்தூரப் பகுதிகளிலும், கிராமங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கிடைப்பதால் அதை தவிர்க்கவும் முடியவில்லை.

பரியேறும் BSNL.. கதிகலங்கும் Jio, Airtel.. 2025 முன்பே ஆட்டம் ஆரம்பம்!

அதே நேரத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையும் நாடு முழுவதும் கிடைக்காததால், கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதளபாதாளத்துக்கு சென்றது. ஆனால், ஒரு நாள் இது மாறும் என்று யாரும், அவ்வளவு ஏன்? பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் திடீரென்று ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்தன.

கடந்த காலங்களிலும் இப்படித்தான் விலைகள் உயர்ந்தன. ஆகவே, இது வழக்கமாக நடப்பதுதான் என்று டெலிகாம் மார்கெட் நினைத்தது. ஆனால், இந்த முறை டெலிகாம் கஸ்டமர்கள் அப்படி நினைக்கவில்லை. தூங்கி கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியதை போல பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு லட்சம் லட்சமாக மாறத் தொடங்கினர்.

அதே நேரத்தில் 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டுகளை 4ஜிக்கு மாற்றும் பணிகளையும், 4ஜி டவர்களை நிறுவும் பணிகளையும் பிஎஸ்என்எல் முடிக்கும் தருவாயில் கொண்டுவந்தது. இதனால், சுக்ரதிசை நடக்குது போல என்று சொல்லும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் அசூர வளர்ச்சியை எட்டி வருகிறது. புது பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வாங்குவது இங்கு பிரச்சனையில்லை.

ஆனால், ஏற்கனவே இருக்கும் மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் சிம் கார்டு போர்ட் (BSNL SIM Card Port) செய்யும் கஸ்டமர்களின் எண்ணிக்கை விண்ணை எட்டி வருகிறது. அதாவது, ஜூலை மாதத்தில் டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்தது என்றால், அதற்கு பிறகு 55 லட்சம் டெலிகாம் கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு போர்ட் செய்துள்ளனர்.

இந்த 55 லட்சம் கஸ்டமர்கள் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களாக இருப்பதால், அந்த நிறுவனங்கள் இதனால் கதிகலங்கி போய் இருக்கின்றன. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் முழுமையாக தொடங்கப்படாதபோதே இவ்வளவு கஸ்டமர்கள் மாறி இருக்கின்றனர். 2025ஆம் ஆண்டில் கண்டிப்பாக பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைகள் கிடைக்க இருக்கின்றன.

இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் பழைய இடத்துக்கு முன்னேறுவது உறுதியாகி இருக்கிறது. அக்டோபர் மாதம் வரையில் 55 லட்சம் கஸ்டமர்கள் போர்ட் செய்து இருக்கின்றனர். ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 15 லட்சம் கஸ்டமர்கள் மாறி இருக்கின்றனர். இதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் இருக்கின்றனர்.

இதே காலகட்டத்தில் புதிய சிம் கார்டு விற்பனை நம்ப முடியாத அளவுக்கு எழுச்சி கண்டுள்ளது. ஜூன் மாதத்தில் 7.9 லட்சமாக இருந்த சிம் கார்டு விற்பனை, ஜூலை மாதத்தில் 4.9 லட்சமாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 5 லட்சமாகவும் அதிகரித்து இருக்கிறது. இப்படி நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் கஸ்டமர்களின் எண்ணிக்கை புது மாற்றத்துக்கு வழிவகுத்து வருகிறது. 2025ஆம் ஆண்டில் மாறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
55 Lakhs Telecom Customers Port Numbers To BSNL SIM After Jio Airtel Vodafone Idea Tariff Hiked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X