தியேட்டர் தோற்றுப் போகும்- ரூ.20,000 விலை பிரவில் 55-inch QLED TV அறிமுகம்!

|

ஒரு வீடு என்பது முழுமையடைய ஸ்மார்ட்டிவிகள் என்பது பிரதானமாக இருக்கிறது. ஸ்மார்ட்டிவிகள் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை மிக குறைவு. அதற்கேற்ப ஸ்மார்ட்டிவிகளின் தேவைகளும் அதிகமாகவே இருக்கிறது.

தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறுகிய காலத்திலேயே ஓடிடியில் வெளியாகிவிடுகிறது. எனவே ஓடிடி அணுகல், யூடியூப் ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு ஸ்மார்ட்டிவி என்பது பிரதானமாக இருக்கிறது.

55 இன்ச் க்யூஎல்இடி டிவி

55 இன்ச் க்யூஎல்இடி டிவி

நிறுவனங்கள் பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது.

சாம்சங், சோனி, எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ரீமியம் விலைப் பிரிவில் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சியோமி, இன்பினிக்ஸ், கோடக் போன்ற நிறுவனங்கள் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் விலைப் பிரிவில் போட்டிப் போட்டு ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது.

அதன்படி இன்ஃபினிக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் 55 இன்ச் க்யூஎல்இடி டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

Infinix 55 இன்ச் QLED டிவி

Infinix 55 இன்ச் QLED டிவி

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது முதல் ப்ரீமியம் ஆண்ட்ராய்டு டிவியை 55 இன்ச் QLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்துள்ளது.

நிறுவனம் இரண்டு அளவுகளில் ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்திருக்கிறது.அது 50 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகள் ஆகும்.

இந்த ஸ்மார்ட்டிவியில் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கிறது என்பது இதன் தனித்துவ அம்சமாகும்.

முன்னதாகவே குறிப்பிட்டது போல் பல்வேறு ப்ரீமியம் மற்றும் தனித்துவ அம்சங்கள் இதில் இருக்கிறது.

ப்ரீமியம் ஆண்ட்ராய்ட் டிவி

ப்ரீமியம் ஆண்ட்ராய்ட் டிவி

இதுவரை பட்ஜெட் டிவிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இன்ஃபினிக்ஸ் ப்ரீமியம் ஆண்ட்ராய்ட் டிவி பிரிவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது.

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஜீரோ சீரிஸ் கீழ் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் க்யூஎல்இடி டிவிகளை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த ப்ரீமியம் டிவி சீரிஸ் குறித்து இன்ஃபினிக்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் கபூர் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி

இன்பினிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி

இன்பினிக்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் கபூர் புதிய ஸ்மார்ட்டிவிகள் குறித்து கூறுகையில்..

சந்தையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் எங்களுக்கு தனி வரலாறு இருக்கிறது.

அதன் ஒருபகுதியாகவே எங்களின் ஃபிளாக்ஷிப் குவாண்டம் டாட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 55 இன்ச் QLED 4K TV இருக்கும்.

55-இன்ச் மாடலுடன், பிரீமியம் QLED ஸ்மார்ட் டிவி பிரிவிலும் கடுமையான போட்டியை ஏற்படுத்துவோம்.

Infinix ZERO Series ஆனது பிரகாசமான மற்றும் மென்மையான காட்சி, பாதுகாப்பான பார்வை அனுபவம், மேம்பட்ட ஒலி தரம் மற்றும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகிய பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம்

பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம்

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பிராண்ட் தான் இன்ஃபினிக்ஸ் எனவே நுகர்வோர்களுக்கு அனைத்து சமீபத்திய டெக்னாலஜிகளையும் வழங்க முயற்சி செய்து வருகிறோம்.

வளர்ந்து வரும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்வதில் Infinix நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

55-inch QLED TV: விலை

55-inch QLED TV: விலை

Zero 55-inch QLED TV இன் விலை குறித்து பார்க்கையில், இதன் ZERO சீரிஸ் மாடல் ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் X3 தொடரின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Infinix 50-இன்ச் 4K டிவியின் விலை வெறும் ரூ.24,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு ஆண்ட்ராய்டு டிவிகளும் செப்டம்பர் 24 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zero 55-inch QLED TV சிறப்பம்சங்கள்

Zero 55-inch QLED TV சிறப்பம்சங்கள்

Zero தொடரின் கீழ் வெளியாகியுள்ள 55-inch QLED TV ஆனது Dolby Vision, HDR 10+ மற்றும் 60 FPS MEMC ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. இதில் மிக சிறிய பெசல்கள் இடம்பெற்றுள்ளது.

உங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகளை அதீத தரத்துடன் இந்த டிவியில் காணலாம்.

இதன் டிஸ்ப்ளே 400 NITS உச்ச பிரகாச நிலையை வழங்குகிறது. அதேபோல் டால்பி டிஜிட்டல் ஆடியோவுடன் கூடிய டூயல் 36Watt Box ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

கூடுதலாக 8K முதல் 20K.. Hz வரை ஒலியின் தரத்தை மேம்படுத்தக் கூடிய 2 ட்வீட்டர்களும் இதில் இடம்பெற்றிருக்கிறது.

நியாயமான விலையில் ப்ரீமியம் தர அம்சம்

நியாயமான விலையில் ப்ரீமியம் தர அம்சம்

55-இன்ச் QLED ஆண்ட்ராய்டு டிவி ஆனது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவியானது MediaTek Quad-Core CA55 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்டிவி இயங்குகிறது.

நியாயமான விலையில் ப்ரீமியம் தர ஸ்மார்ட்டிவி வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
55 inch QLED TV Launched by Infinix at Low Price: Sale Date and Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X