இ-பாஸ் இல்லாமல் பயணம்., சொன்னா கேட்கனும்., ஒரு நபரால் ஒரு பகுதியே லாக்: என்ன நடந்தது தெரியுமா?

|

இ-பாஸ் இல்லாமல் கொரோனா தொற்றோடு பயணம் செய்த நபரால் அந்த பகுதியில் பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

200 நாடுகளுக்கு மேல் தாக்கம்

200 நாடுகளுக்கு மேல் தாக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 200 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா தாக்கம் சீனாவில் குறையத் தொடங்கினாலும் பிற நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

உலகளவில் கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 38 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், இருப்பினும் 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயரிழந்துள்ளனர்.

வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் 94 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெல்லியில் 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னையில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது.

தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது

தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது

மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது. தொடர்ந்து வெளி ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பயணிப்பவர்கள் இ-பாஸ் பயன்படுத்துவது கட்டாயம். இபாஸ் https://tnepass.tnega.org என்ற வலைதளத்தில் வாங்கலாம்.

தனிநபர் இ-பாஸ் கட்டாயம்

தனிநபர் இ-பாஸ் கட்டாயம்

தனிநபர் இ-பாஸ் பெறுவதற்கு திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கித் தவித்தல் போன்ற சில காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படுகிறது என்பது இதில் கவனிக்கத்தக்க விஷயம். தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். 5-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30 ஆம் தேதி அமலில் உள்ளது.

சென்னையில் இருந்து நீலகிரி வந்த ஒருவர்

சென்னையில் இருந்து நீலகிரி வந்த ஒருவர்

இந்த நிலையில் இ-பாஸ் எடுக்காமல் சென்னையில் இருந்து ஒருவர் நீலகிரி மாவட்டத்திற்கு கொரோனாவோடு மேற்கொண்ட பயணம் குறித்து அதிகாரி ஒருவர் கூறிய கருத்தை தனியார் செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம். நீலகிரி மாவட்டம் பிக்கட்டி பகுதியை சேர்ந்த 54 வயது நபர் சென்னை கோயம்பேட்டில் காய்கறி கடை வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கின் காரணமாக அவர் சொந்த ஊருக்கு இ-பாஸ் இன்றி பயணித்துள்ளார்.

சரக்கு லாரி மூலம் பயணம்

சரக்கு லாரி மூலம் பயணம்

வேலூர் வரை நடந்தும் அங்கிருந்து சேலம் வரை ஒரு சரக்கு லாரி மூலம் பயணித்துள்ளார். அங்கிருந்து நீலகிரி மாவட்டம் பிக்கட்டை வந்தடைந்துள்ளார். இதற்கு முன்பாகவே பர்லியார் செக் போஸ்டில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேருக்கு நேர்: ஜியோ vs ஏர்டெல்., ஒரே விலை திட்டம் எது சிறந்தது?நேருக்கு நேர்: ஜியோ vs ஏர்டெல்., ஒரே விலை திட்டம் எது சிறந்தது?

சகஜமாக அங்கும் இங்கும் நடமாடி புழக்கம்

சகஜமாக அங்கும் இங்கும் நடமாடி புழக்கம்

இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த ஒரு வாரமாக ஊருக்குள் பல்வேறு பகுதிகளுக்கம் சகஜமாக அங்கும் இங்கும் நடமாடி புழங்கி இருக்கிறார். செக்போஸ்டில் பரிசோதனை எடுக்கப்பட்ட போதே அவரை தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் பொருட்படுத்தாமல் இருப்பதால் தற்போது பிக்கட்டி பகுதி தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்புடைய நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
54 year oldman travel from chennai to nilgiris without epass in affected by coronavirus

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X