பாதிக்கு பாதி விலை.. Flip போன் வாங்க சரியான நேரம்.. யாரும் தரமுடியாத விலையில் புது Motorola Razr 40 Ultra 5G..
மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் அதிரடி ஆஃபர் இப்போது லைவில் உள்ளது. மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா 5ஜி (Motorola Razr 40 Ultra 5G) போன் மீது அதிரடியாக 54% வரை விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மோட்டோரோலா பிலிப் போனின் (Motorola Flip Phone) விலை பாதிக்கு பாதி குறைந்துள்ளது. புதிதாக பிலிப் போன் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு இந்த Motorola Razr 40 Ultra ஒரு சிறந்த சாதனமாக இருக்கும். அதிரடி விலை தள்ளுபடிக்கு பிறகு, இதன் புதிய விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
இந்திய சந்தையில் இப்போது ஃபிலிப் ஸ்மார்ட்போன்கள் (Flip Smartphone) மற்றும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் (Foldable Smartphone) விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்திய மக்கள் தற்போது வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பதிலாக வித்தியாசமான தோற்றத்தில் மடக்கி நீட்டி பயன்படுத்த அனுமதிக்கும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த ஆசைப்படுகிறார்கள். இதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தற்போது பிலிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது.

பாதிக்கு பாதி விலை.. Motorola Razr 40 Ultra 5G Flip போன் வாங்க சரியான நேரம்:
அதில் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் (stunning look flip phone), பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் அழகுடன் இந்திய சந்தையில் மோட்டோரோலா (motorola) நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சாதனம் தான் இந்த Motorola Razr 40 Ultra சாதனம். இந்த மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா 5ஜி (Motorola Razr 40 Ultra 5G) சாதனத்தை நிறுவனம் இந்தியாவில் ரூ. 1,20,000 என்ற விலையில் (price) அறிமுகம் செய்தது. தற்போது இந்த போனின் மீது நம்ப முடியாத சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா 5ஜி (Motorola Razr 40 Ultra 5G) ஸ்மார்ட்போனின் தற்போதைய அசல் விலை, இந்திய மதிப்பில் ரூ. 1,19,999 ஆகும். ஆனால், தற்போது இந்த Motorola Razr 40 Ultra 5G போன் மீது 54% தள்ளுபடி (54 percent discount) அறிவிக்கப்பட்டுள்ளது. 54% என்கிற பொழுது இந்த போனின் விலை அப்படியா பாதிக்கு பாதி குறைகிறது (flip phone for half price).
மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா 5ஜி (Motorola Razr 40 Ultra 5G):
இந்த நம்ப முடியாத சலுகையை வழங்கியது வேறு யாரும் இல்லைங்க நம்ம பிளிப்கார்ட் இந்தியா (Flipkart India) தான். பிளிப்கார்ட் இந்தியாவில் நடைபெறும் ரிபப்ளிக் டே சேல்ஸ் (Flipkart Republic Day Sale) இன் ஒரு பகுதியாக Motorola Razr 40 Ultra 5G ஸ்மார்ட்போனின் மீது இப்போது 54% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 1,19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பிலிப் போன் (Flip mobile phone), தற்போது வெறும் ரூ. 54,999 என்ற விலையில் வாங்க (offer price) கிடைக்கிறது.
இத்துடன் Motorola Razr 40 Ultra 5G ஸ்மார்ட்போன் மீது கூடுதல் வங்கி சலுகையையும் (bank offers) பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க வங்கி சலுகையில் மூலம் Motorola Razr 40 Ultra 5G ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் கணிசமாக குறைக்கும் வாய்ப்பும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களிடம் Axis பேங்க் கிரெடிட் கார்டு (credit card) இருக்கிறதென்றால், இந்த போனின் மீது கூடுதலாக 5% கேஷ் பேக் (cash back) நன்மையை அனுபவிக்க முடியும்.
அதேபோல், உங்களிடம் HDFC வங்கி கார்டு இருந்தால், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பொழுது ரூ. 1500 வரை கூடுதல் தள்ளுபடியை பெறுவீர்கள். இதன் மூலம் இந்த போனை ரூ.53,999 விலைக்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








