எல்லாமே அவர்களுடையது: 52 சீன செயலிகளை புறக்கணிக்க அறிவுறுத்தல்!

|

இந்தியர்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த 52 செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லடாக் எல்லை பகுதி

லடாக் எல்லை பகுதி

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கம்

உலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கம்

உலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையை சாதகமாக்கி சீனா தங்களுக்கு சாதகமாக எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.

அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!

இந்தியா சீனா இடையிலான உறவு

இந்தியா சீனா இடையிலான உறவு

அதேபோல் இந்தியா சீனா இடையிலான உறவு மொத்தமாக முறியும் நிலையில் இருக்கிறது. லடாக் பிரச்சனைக்கு பின் இரண்டு நாட்டு உறவு மீண்டும் சரியாக வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

மூன்று நாட்டு ஆலோசனை கூட்டம்

மூன்று நாட்டு ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் இந்தியா சீனா ரஷ்யா இடையிலான மூன்று நாட்டு ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்தியா சீனா ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையே ஜூன் 22 ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து

சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.

தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு

தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு

இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்ற வகையில் எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிவுறுத்தல் இடம்பெற்றுள்ளது.

ஜூம் செயலி பாதுகாப்பு குறைப்பாடு

ஜூம் செயலி பாதுகாப்பு குறைப்பாடு

குறிப்பாக ஜூம் செயலி பாதுகாப்பு குறைப்பாட்டையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் ஜூம் செயலி அரசு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை தைவான் அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சீன செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கை

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கை

இதில் குறிப்பிடப்பட்டுள்ள செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்படுகிறது.

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்

இந்த 52 செயலிகள் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என இந்திய உளவு அமைப்புக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயலிகள் குறித்து பார்க்கலாம்.

ஷேர்-இட், யூசி நியூஸ், யூசி ப்ரவுஸர், டிக்டாக்

ஷேர்-இட், யூசி நியூஸ், யூசி ப்ரவுஸர், டிக்டாக்

அபஸ் ப்ரவுசர், விவா வீடியோ, வீ-சேட், ஷேர்-இட், யூசி நியூஸ், யூசி ப்ரவுஸர், டிக்டாக், விஹோ வீடியோ, பிகோ லைவர், எம்ஐ ஸ்டோர், 360 செக்யூரிட்டி, டியூ பேட்டரி சேவர், டியூ ப்ரவுசர், டியூ க்ளீனர், டியூ ப்ரைவசி, க்ளீன் மாஸ்டர், ஹலோ, லைக், க்ளப் பேக்டரி, க்செண்டர் போன்ற செயலிகள் ஆகும்.

போருக்கு ரோபோக்களை களமிறக்க தயாராகும் சீனா: ஆயுத பலத்தை காண்பிக்கும் விதமான வீடியோ வெளியீடு!போருக்கு ரோபோக்களை களமிறக்க தயாராகும் சீனா: ஆயுத பலத்தை காண்பிக்கும் விதமான வீடியோ வெளியீடு!

இடம்பெற்றுள்ள செயலிகள்

இடம்பெற்றுள்ள செயலிகள்

ப்யூட்டி ப்ளஸ், போட்டோ வொண்டர், நியூஸ் டாக், ஷீ இன், ரோம்வீ, க்வாய், கேச்சி க்ளியர் டியூ ஆப்ஸ் ஸ்டுடியோ, பெர்பக்ட் கார்ப், சிஎம் ப்ரவுசர், வைரஸ் க்ளீனர், எம்ஐ கம்யூனிட்டி, டியூ ரெக்கார்டர், யூகேம் மேக் அப், இஎஸ் பைல் எக்ஸ்ப்ளோரர், க்யூ க்யூ தொடர்பான செயலி, மெயில் மாஸ்டர் போன்ற செயலிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

source: hindustantimes.com

Best Mobiles in India

English summary
India agencies asked government to block or advise people to stop these 52 mobile app linked to china

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X