Home
News

அம்பானி அப்படி போ.. Airtel இப்படி போ.. 5000GB டேட்டா, 200Mbps, 5 ஓடிடி.. முடிச்சு விட்ட BSNL.. எந்த ரீசார்ஜ்?

ப்ரீபெய்ட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) போன்ற முன்னிலை வகித்தாலும், ஹோம் பிராட்பேண்ட் (Home Broadband) பிரிவில் இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) ஆனது தனியார் நிறுவனங்களுக்கு கடும்போட்டியை வழங்கி வருகிறது.

காப்பர் வயர் கனெக்ஷன்களின் (Copper wire connections) சகாப்தத்தில் - பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ராஜாவாக இருந்தது. ஆனால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஃபைபர் பிராட்பேண்ட் கனெக்ஷன்களின் ஆதிக்கம் அந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.

5000GB டேட்டா, 200Mbps ஸ்பீட், 5 ஓடிடி.. முடிச்சு விட்ட BSNL!

எப்படியிருந்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் இந்த பிரிவில் ஒரு முக்கியமான சேவை வழங்குநர் ஆக உள்ளது. இதற்கு காரணம் - இன்றைய தேதிக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களில் பல - பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் உள்ளது. அதில் ரூ.1000 க்குள் கிடைக்கும் இரு திட்டத்தை பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்

அது பிஎஸ்என்எல் ரூ.999 (வரிகள் சேர்க்கப்படாத விலை) பிராட்பேண்ட் திட்டம் ஆகும். இது பிஎஸ்என்எல்-ன் பெஸ்ட் பிராட்பேண்ட் திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படும் மறுகையில், இது ஒரு "விசித்திரமான" பில்லிங் சைக்கிளையும் கொண்டுள்ளது. அது என்னது? பிஎஸ்என்எல் ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

பிஎஸ்என்எல் இன் ரூ.999 பிராட்பேண்ட் திட்டம் ஆனது 5000ஜிபி வரையிலான, அதாவது 5டிபி வரையிலான டேட்டாவை வழங்குகிறது. இது ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற ஆபரேட்டர்களிடமிருந்து கிடைக்கும் இதேபோன்ற விலை நிர்ணயம் கொண்ட திட்டங்களின் வழியாக கிடைக்கும் டேட்டா நன்மையை விட பல மடங்கு அதிகமாகும்.

போதாக்குறைக்கு இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 200 எம்பிபிஎஸ் ஆகும். மேலும் ஓடிடி (OTT) நன்மைகளும் உள்ளன. இதன் கீழ் - ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லைவ் (SonyLIV), ஹங்காமா (Hungama), ஷீமாரூ மீ (ShemarooMe), மற்றும் எபிக் ஆன் (EpicON) ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

டேட்டா லிமிட் தீர்ந்ததும், அதாவது 5000ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 10 எம்பிபிஎஸ் ஆக குறையும். இந்த திட்டத்தை நீண்ட காலத்திற்கும் நீங்கள் பெறலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த திட்டத்தை 1, 6அல்லது 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் விருப்பம் - பிஎஸ்என்எல் வலைத்தளத்தில் உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு மாத விலை ரூ.999 ஆகும். ஆறு மற்றும் பன்னிரண்டு மாத திட்டத்தின் விலை முறையே ரூ.5994 மற்றும் ரூ.11,988. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், நீண்ட கால செல்லுபடியாகும் திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும் கூட உங்களுக்கு எந்த தள்ளுபடியும் கிடைக்காது.

வழக்கமாக தனியார் டெலிகாம் நிறுவனங்களின் நீண்ட கால பிராட்பேண்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் சில தள்ளுபடி அல்லது விலை குறைப்பு கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் ரூ.999 திட்டத்தில் அப்படி எதுவுமில்லை. எனவே பயனர்கள் இந்த திட்டத்தின் மாதாந்திர கட்டணங்களை செலுத்திக்கொண்டே இருப்பதும் 1 ஆண்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்வதும் - ஒன்றுதான்!

பிஎஸ்என்எல் இன் ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையையும் பெறுவார்கள். ஆனால் அதற்காக அவர்கள் லேண்ட்லைன் இன்ஸ்ட்ரூமென்ட்டை தனியாக வாங்க வேண்டும். ஏனெனில் இந்த திட்டத்தின் கீழ் அதை வழங்கவில்லை. முன்னரே குறிப்பிட்டபடி, ரூ.999 என்பது வரிகள் சேர்க்கப்படாத விலை ஆகும். பைனல் பில்லிங்கின் போது வரிகள் சேர்க்கப்பட்டு, இன்னும் அதிக தொகை செலுத்தும்படி இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
5000GB Data 200Mbps Speed 5 Free OTTs BSNL Best Broadband Plan Rs 999 Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X