கரும்பு திண்ண கூலியாம்- வேலை: பீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கனும்., சம்பளம்: ரூ.36,000!

|

பீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கும் பிங்க் வாட்ச்சர் என்ற வேலைக்கு போனஸ்ஃபைண்டர் என்ற நிறுவனம் ஆள் தேடி வருகிறது. இந்த வேலைக்கான விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஓடிடியில் வெளியாகும் தொடர்கள், திரைப்படங்கள்

ஓடிடியில் வெளியாகும் தொடர்கள், திரைப்படங்கள்

கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் பலரின் வாழ்க்கை முறையே மாறுபட்டிருக்கிறது. வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு என பல சூழ்நிலைகளை கொரோனா பரவல் காரணமாக எதிர்கொள்ள வேண்டியது. அதேநிலையில் தியேட்டர்கள் மூடும்நிலை ஏற்பட்டது. இதன்காரணாக ஏணைய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. மேலும் பல சீரிஸ்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

போனஸ்ஃபைண்டர் என்ற நிறுவனம்

போனஸ்ஃபைண்டர் என்ற நிறுவனம்

இந்தநிலையில் வியக்கும்படியான வேலை ஒன்றை போனஸ்ஃபைண்டர் (BonusFinder) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணியின் பெயர் பிங்க் வாட்ச்சர் ஆகும். இதற்கு கைநிறைய சம்பளம் அறிவித்துள்ள நிறுவனம் பணிக்கான ஆட்களை தேடும் பணியில் ஈடுபட உள்ளது.

தேசிய பீட்சா தினம்

தேசிய பீட்சா தினம்

பிங்க் வாட்ச்சர் பதவியின் வேலை என்னவென்றால் பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்க வேண்டும் என்பதாகும். பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யும் வேலை தேசிய பீட்சா தினமான பிப்ரவரி 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..ஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..

பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்க வேண்டும்

பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்க வேண்டும்

இன்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சொகுசாக அமர்ந்து பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் 500 டாலராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.36,600 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பு

பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பு

2021 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சில நாடுகளில் மீண்டும் லாக் டவுன் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்க வலைதளமான போனஸ்ஃபைண்டர் நெட்பிளிக்ஸ் பார்ப்பதற்கும் பீட்சா சாப்பிடுவதற்கும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பை அறிவித்துள்ளது.

500 டாலர் வரை சம்பளம்

500 டாலர் வரை சம்பளம்

பீட்சாவுடன் மூன்று நெட்பிளிக்ஸ் காட்சிகள் பார்த்தால் 500 டாலர் வரை வழங்கப்படும். இந்த பணியில் சேரும் ஊழியர்கள் ஒவ்வொரு தொடர் மற்றும் படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும். ஒவ்வொன்றின் கதை, வசனங்கள், நடிப்பு தரம் மற்றும் தொடரின் முடிவுகள் போன்றவற்றுக்கு மறுபரிசீலனை செய்யும்படியான கருத்துகளை தெரவிக்க வேண்டும். நடிப்பு, கதைக்களம் உள்ளிட்டவைகளின் விமர்சனங்கள் எழுத வேண்டும்.

விமர்சனங்களை எழுத வேண்டும்

விமர்சனங்களை எழுத வேண்டும்

அதுமட்டுமின்றி நெட்பிளிக்ஸ் பார்க்கும்போது சாப்பிடும் பீட்சாக்களின் சுவை குறித்த விவரங்களையும் மதிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். பீட்சாவின் தரம் அதன் கலவை பொருட்கள், பீட்சாவின் தரம், அதன் வடிவமைப்பு உள்ளிட்டவைகளின் மதிப்பீட்டை எழுத வேண்டும்.

Source: bonusfinder.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
$500 Salary For Watch Netflix and Eat Takeout Pizza

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X