ஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!
ஜியோ பைபருக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது, புதிய பிளானில் 50 எம்பிஎஸ் வேகத்தில், 500ஜிபி டேட்டாவை 6 மாதத்திற்கு வழங்கியுள்ளது. ஏற்கனவே அன்லிமிடெட் வாய்ஸ்காலுடன், நெட்பிக்ஸ் உள்ளிட்ட சலுகைகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது.

ஜியோ பைபர்
இலவச டிவி, அன்லிமிடெட் வாஸ்கால், ஹோம் டிவி உள்ளிட்ட பல்வேறு இலவச திட்டங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ பைபர் நாடு முழுவதும் இன்னியும் சரியாக துவங்கவில்லை. இதற்காக ஏற்பாடுகளும் நடக்கின்றது. இந்த பிளான்கள் கிடைப்பதில் பொது மக்களுக்கு வெகு நாட்களாகலாம்.

500 ஜிபி கியூல் பிளான்
இந்த பிராட்பேண்ட் திட்டம் ரூ.777க்கு கிடைக்கின்றது. ஜியோ பைபருக்கு போட்டியாக வழங்குகின்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கின்றது. புதிய பிளான்களையும் கவர்ச்சிகரமாக திட்டங்களையும் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அறிவித்து வருகின்றது.

50 எம்பிபிஎஸ் வேகம்
ரூ.777 பிராட்பேண்ட் கிடைத்தாலும், 50 எம்பிபிஸ் வேகத்தில் 500ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். FUP க்குப் பிறகு வேகம் 2 Mbps குறைக்கப்படும். அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்தைத் தவிர அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டம் கிடைக்கிறது.

6 மாதத்திற்கு வழங்கப்படுகின்றது
பி.எஸ்.என்.எல் வழங்கும் ரூ .777 பிராட்பேண்ட் திட்டம் ஆர்வமுள்ள சந்தாதாரர்களுக்கு விளம்பர சலுகையின் கீழ் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த விளம்பர சலுகையாக ரூ 777 பிராட்பேண்ட் திட்டம் அல்லது 500 ஜிபி கியூல் திட்டம் ஆறு மாத காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

மாறவேண்டிய பிளான்
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ .777 பிராட்பேண்ட் திட்டத்தைப் பெற ஆர்வமுள்ள சந்தாதாரர்கள் இப்போதே அவ்வாறு செய்ய முடியும். ஆனால் அவர்கள் மாதத்திற்கு 500 ஜிபி தரவை 50 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் ஆறு மாதங்களுக்கு மட்டுமே பெற முடியும். இந்த காலத்திற்குப் பிறகு, ரூ .849 திட்டத்திற்கு சந்தாதாரர்கள் மாற வேண்டும். மாதத்திற்கு ரூ .849 திட்டம் 600 ஜிபி டேட்டாவை அதே 50 எம்.பி.பி.எஸ் வேகத்திலும், எஃப்.யூ.பி வேகத்திற்குப் பிறகு 2 எம்.பி.பி.எஸ் வழங்குகின்றது.


Click it and Unblock the Notifications