அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் "இந்த போன்கள்" எல்லாமே குப்பைக்கு போகும்!

|

கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து ஒரு புதிய மொபைல் போனை வாங்கிய எல்லோருக்குமே "இந்த அறிக்கை" கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!

அதென்ன அறிக்கை? எந்தெந்த மொபைல் போன்கள் (Mobile Phones) குப்பையாக போகிறது? இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒன்றா.. இரண்டா.. 500 கோடி!

ஒன்றா.. இரண்டா.. 500 கோடி!

மொபைல் போன்கள் தொடர்பான ஒரு சமீபத்திய அறிக்கையானது, உலகம் முழுவதும் உள்ள 16 பில்லியன் (1,600 கோடி) மொபைல் போன்களில் மூன்றில் ஒரு பங்கு, இந்த 2022 ஆம் ஆண்டில் வீணாகிவிடும் என்று கூறுகிறது.

அதாவது 5.3 பில்லியன் மொபைல் போன்கள், இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 500 கோடி மொபைல் போன்கள் குப்பைக்கு போகும் என்று கூறுகிறது!

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

இதற்கு யார் / எது காரணம்?

இதற்கு யார் / எது காரணம்?

கிட்டத்தட்ட 5 பில்லியன் மொபைல் போன்கள் குப்பைக்கு போக யார் / எது காரணம்? என்று கேட்டால்..

ஆப்பிள், கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களும், அந்தந்த நிறுவனங்களின் 'கார்பன்-நியூட்ரல்' (Carbon-neutral) கொள்கைகளும் தான் காரணம்!

அதென்ன கொள்கை..?

அதென்ன கொள்கை..?

அறியாதோர்களுக்கு, கார்பன் நடுநிலை (Carbon neutrality) என்பது வளிமண்டலத்தில் இருந்து கார்பனை உறிஞ்சுவதற்கும், கார்பனை வெளியேற்றுவதற்கும் இடையே சமநிலையை கொண்டிருப்பதாகும்!

இது மின்னணுக் கழிவு மேலாண்மை கொள்கையின் (Electronic waste management policy) ஒரு பகுதி ஆகும்!

10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?

"இந்த போன்கள்" எல்லாமே குப்பைக்கு போகும்!

மின்னணுக் கழிவு மேலாண்மை கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 5.3 பில்லியன் (530 கோடி) மொபைல் / ஸ்மார்ட்போன்கள் "செயல் இழந்து" போக உள்ளன!

இப்படியாக குப்பைக்கு போகும் மொபைல் போன்கள் அனைத்தையும் (சராசரியாக 9 மிமீ தடிமன் கொண்டவை) ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், அதன் உயரம் தோராயமாக 50,000 கிமீ இருக்கும்.

120 மடங்கு அதிகம்.. எட்டில் ஒரு பங்கு!

120 மடங்கு அதிகம்.. எட்டில் ஒரு பங்கு!

50,000 கிமீ என்பது பூமிக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் (ISS) இடையே உள்ள தூரத்தை விட 120 மடங்கு அதிகம் ஆகும்

நினைவூட்டும் வண்ணம், விண்வெளி நிலையம் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 420 கிமீ உயரத்தில் இருக்கிறது.

அதுமட்டுமா? 50,000 கிமீ என்பது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான மொத்த தூரத்தில் எட்டில் ஒரு பங்கு ஆகும். நினைவூட்டும் வண்ணம்,பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான மொத்த தூரம் 3,84,400 கி.மீ ஆகும்!

Netflix-இன் புதிய அறிவிப்பு.. நவம்பர் 3 முதல் Netflix-இன் புதிய அறிவிப்பு.. நவம்பர் 3 முதல் "இதுக்கு" தயார் ஆகிக்கோங்க!

எரிக்கப்படும் தங்கம், தாமிரம், வெள்ளி!

எரிக்கப்படும் தங்கம், தாமிரம், வெள்ளி!

உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்; ஸ்மார்ட்போன்களில் - தங்கம், தாமிரம், வெள்ளி, பல்லேடியம் மற்றும் பிற மறுசுழற்சி கூறுகளும் (Recyclable components) இருக்கும்.

ஆனால் வல்லுநர்களின் ஒரு சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அந்த கூறுகள் மக்களின் வீடுகளில் சேமிக்கப்படுகிறது அல்லது நிலப்பரப்பில் புதைக்கப்படுகிறது அல்லது எரிக்கப்படுகிறது!

"இந்த அற்பமான பொருட்களின் பெருமதிப்பை பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை!" என்று வருந்துகிறார் WEEE மன்றத்தின் இயக்குநர் ஆன ஜெனரல் பாஸ்கல் லெராய்!

அந்த பொறுப்பை கையில் எடுக்கும் ஆப்பிள், கூகுள் மற்றும் சாம்சங்!

அந்த பொறுப்பை கையில் எடுக்கும் ஆப்பிள், கூகுள் மற்றும் சாம்சங்!

ஆப்பிள், அதன் கார்பன் ஃபுட்பிரிண்ட்-ஐ (Carbon footprint) குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் - தங்கம், கோபால்ட், அலுமினியம் மற்றும் அரிய கூறுகளை மறுசுழற்சி செய்வதும் ஒன்றாகும். இதன் கீழ் ஆப்பிள் தயாரிப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும் மற்ற பொருட்களும் அடங்கும்.

மறுகையில் உள்ள கூகுள், அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவின் மேட் என்க்ளோஷருக்கு (Matte enclosure) 100% மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தைப் பயன்படுத்துவதாக கூறியுள்ளது!

இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

2030 ஆம் ஆண்டுக்குள்!

2030 ஆம் ஆண்டுக்குள்!

வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள், நிறுவனத்தின் டிவைஸ் எக்ஸ்பீரியன்ஸ் (டிஎக்ஸ்) பிரிவின் அனைத்து செயல்பாடுகளும் கார்பன் நியூட்ரலாக இருக்கும் என்று சாம்சங் அறிவித்தது.

நினைவூட்டும் வண்ணம், சாம்சங் நிறுவனத்தின் டிஎக்ஸ் பிரிவானது நுகர்வோர் மின்னணு (Consumer electronics) வணிகங்களை உள்ளடக்கியது.

Photo Courtesy: Wikipedia

Best Mobiles in India

English summary
500 Crore Mobile Phones Will Become Waste By End Of 2022 Here Is Why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X