பொன்விழா கண்ட அப்போலோ9 ! நிலவில் கால்பதிக்க வழிகாண்பித்த விண்கலம்..

மார்ச் 3, 1969 அன்று சட்டர்ன் வி ராக்கெட் மூலம் மூன்று துணிச்சலான விண்வெளி வீரர்கள் அப்போலோ 9 மிஷனின் ஒரு பகுதியாக புவி சுற்றுவட்டபாதைக்கு அனுப்பப்பட்டனர்.

|

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளியில் அந்த 10 நாட்கள் நடைபெற்ற கண்கவர் மற்றும் அற்புதமான சோதனை மனிதர்களின் விண்வெளிப் பயணத்திற்கு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. மார்ச் 3, 1969 அன்று சட்டர்ன் வி ராக்கெட் மூலம் மூன்று துணிச்சலான விண்வெளி வீரர்கள் அப்போலோ 9 மிஷனின் ஒரு பகுதியாக புவி சுற்றுவட்டபாதைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மிஷனில் இக்குழு பிற்காலத்தில் மனிதர்களை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் விண்கலத்தை சோதனை செய்தது.

பொன்விழா கண்ட அப்போலோ9 ! நிலவில் கால்பதிக்க வழிகாண்பித்த விண்கலம்..

சட்டர்ன் வி ராக்கெட் மூலம் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்ட இரண்டாவது மிஷனான அப்பல்லோ 9 விண்கலம், அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் மனிதர்கள் பயணிக்கும் மூன்றாவது மிஷனாகும். இந்த அப்போலோ 9 விண்கலம் அப்பல்லோ லூனார் மாட்யூல் (ALM) உடன் கமாண்ட் அண்ட் சர்வீஸ் மாட்யூல்-ன் (CSM) முதல் விமானத்தைக் கண்டது . அப்போலோ9 விண்கலத்தில் கமாண்டர் ஜேம்ஸ் மெக்டிவிட், காமாண்ட் மாட்யூல் பைலட் டேவ் ஸ்காட் மற்றும் எல்எம் பைலட் ரஸ்டி ஷ்வீயிக்கார்ட் ஆகியோர் பயணித்தனர்.

"த்ரீ டூ மேக் ரெடி"

1969 ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை(ஹைலைட்ஸ்) தொகுத்து நாசா தயாரித்துள்ள "த்ரீ டூ மேக் ரெடி" எனும் அப்போலோ 9 ஆவணப்படத்தில், இந்த விண்கலம் எதிர்கால நிலவு தரையிறங்குதலுக்கு மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் திறன்களையும் பரிசோதிக்க முக்கியமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. ரஸ்டி இதுதொடர்பாக கூறுகையில், அந்த மிஷனில் நாங்கள் செய்த சோதனைகள் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்கள் செய்யும் பணிகளை ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை எனினும், அக்காலக்கட்டத்தில் அது மிகப்பெரிய சாதனையாக இருந்தது என்கிறார்.

 சோதனை

சோதனை

அந்த மிஷனின் போது செய்துமுடிந்த அனைத்து சோதனைகளும் மகத்தானவை எனினும், மிகவும் முக்கியமான ஒன்று எல்எம் பைலட் ரஸ்டி செய்த நிலவு தரையிறங்கும் சோதனை. இதுதான் விண்வெளியில் இந்த விண்கலத்தின் முதல் சோதனை என்றாலும், ரஸ்டி சிறிலும் பதற்றப்படவில்லை.

அப்பல்லோ 9

அப்பல்லோ 9

ஆனால் ரஸ்டி விண்வெளி நடையின் போது ஒரு எதிர்பாராத அனுபவம் பெற்றார். அப்பல்லோ 9 மிஷனின் நான்காவது நாள், அவரும் மற்றும் ஸ்காட்-ம் ஒரு எக்ஸ்ட் வெகிகுலர் நடவடிக்கையை (EVA) தொடங்கினார். ஸ்காட் முதல் அப்பல்லோ விண்வெளி நடைபயணத்தை படம்பிடிக்கும் போது கேமரா ஜேம் ஆனது.

 5 நிமிடங்கள்

5 நிமிடங்கள்

காமாண்டர் மெக்டெவிட் ஸ்காட் க்கு 5 நிமிடங்கள் கேமரா சரிசெய்ய கொடுத்தார். அந்த நம்பமுடியாத 5 நிமிடங்களில், ரஸ்டி ஒரு மனிதனின் மிகப்பெரிய கனவான விண்வெளியில் உலா வந்துகொண்டு ஆனந்த அதிர்ச்சியில் இருந்தார்.

அப்பல்லோ 9

அப்பல்லோ 9

1969ல் சில மாதங்களுக்கு பிறகு அப்பல்லோ 9 விண்கலம் நிலவு தரையிறங்கலுக்கு வழிவகுத்தது. தற்போது அப்போலோ காலகட்டம் போலில்லாமல், போட்டியிடுவதற்கு பதிலாக சர்வதேச நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், வணிக நிறுவனங்களின் தனிப்பட்ட வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றிவருகின்றன.

Best Mobiles in India

English summary
50 Years Ago Today, Apollo 9 Launched and Paved the Way for a Lunar Landing: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X