50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உதவ முன்வரும் அமெரிக்கர்கள்! எதற்கு?
அப்போலோ 11 நிலவு தரையிறங்கல் நிகழ்வின் 50 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடத்திய கருத்துகணிப்பில், விண்வெளிவீரர்களை செவ்வாயில் தரையிறங்க வைக்கும் மிஷனுக்கு அதிக விருப்பம் தெரிவித்து நிதியுதவி செய்ய அமெரிக்கர்கள் தயாராக உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

30 ஆண்டுவிழாவின் போது மீண்டும் கேட்டது
ஜூன் மாத இறுதியில் இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த கருத்துகணிப்பில், அமெரிக்கா முழுவதும் வசிக்கும் 1,018 நபர்களிடம், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக அரசாங்கம் தனியாக நிதி ஒதுக்கினால் ஆதரிப்பீர்களா என கேட்கப்பட்டது. கேலப் கருந்துகணிப்பு இதே கேள்வியை 1969 ஜூலை மாத இறுதியில் அப்போலோ 11 திரும்பிய உடனேயே கேட்டது மற்றும் ஜூலை 1999 இல் அந்த மிஷனின் 30 ஆண்டுவிழாவின் போது மீண்டும் கேட்டது.

46% பேர் எதிர்ப்பதாகவும் மற்றும் 1% பேர் கருத்து இல்லை
முந்தைய இரண்டு ஆண்டுகளில் போலல்லாமல் இந்த ஆண்டு, அத்தகைய நிதி ஒதுக்கீட்டை ஒப்புக்கொள்வதாக கூறுபவர்களில் ஒரு சிறிய பெரும்பான்மை கிடைத்ததாக புதிய கருத்துகணிப்பு கண்டறிந்துள்ளது. இதில் பதிலளித்தவர்களில் 53% பேர் ஆதரவளிப்பதாகவும், 46% பேர் எதிர்ப்பதாகவும் மற்றும் 1% பேர் கருத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கருத்துகணிப்பு நடத்தியவர்கள் மக்களிடம் "செவ்வாய் கிரகத்தின் ஒரு விண்வெளி வீரர்களை தரையிறக்குவதற்கான முயற்சிகள் குறித்து பெரிய விவாதம் நடந்துவருகிறது. அத்தகைய ஒரு முயற்சியை பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? இத்தகைய திட்டத்திற்கு அமெரிக்க அரசு பணம் ஒதுக்கி வைத்திருப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?" என கேள்வியெழுப்பியுள்ளனர்.

அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள்
அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் சந்திரனில் இருந்து திரும்பி தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோது, அந்த சமயத்தில் நடைபெற்ற முதல் கருத்துகணிப்பில் இந்த கேள்வியை கேட்டபோது, மற்றொரு மிகப்பெரிய மிஷனுக்கு நிதி ஒதுக்குவதில் ஆர்வம் இல்லை என அமெரிக்கர்கள் தெரிவித்தனர். அந்த கருத்துகணிப்பில் கலந்துகொண்டவர்களில் 39% பேர் செவ்வாய் மிஷனுக்கு நிதியளிப்பதற்கு ஆதரவாகவும், 53% பேர் எதிராகவும், 8% பேர் கருத்து இல்லை எனவும் கூறினர். (பதிலளித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் மாதிரி பிழை ஆகியவை, 1969 மற்றும் 1999ல் நடைபெற்ற கருத்துகணிப்புகளில் இருந்து கிடைக்கவில்லை).

விண்வெளி ஆய்விற்கான செலவினங்களை குறிப்பிடுவதில்லை
முன்னதாக அப்பல்லோ திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது தொடர்பான கருத்துகணிப்புகளில் கூட இந்த அளவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 1969ல் ஒருமுறை மட்டுமே இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க அமெரிக்கர்கள் பெரும்பான்மை ஆதரவு வழங்கினர். ஆனால் அந்த ஆதரவும் 53% என்ற அளவில் மந்தமாக இருந்தது. 1965 ஆம் ஆண்டிலிருந்து பொதுவாக இந்த கருத்துகணிப்புகளில் விண்வெளி ஆய்விற்கான செலவினங்களை குறிப்பிடுவதில்லை. ஆனால் இதுதொடர்பான கேள்விகளை உருவாக்கும் போது பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

18 முதல்54 வயதுடையோர் அதிக ஆதரவளித்துள்ளனர்
இந்த ஆண்டின் கருத்துகணிப்பில், பெண்களை காட்டில் ஆண்கள் செவ்வாய் மிஷனுக்கான நிதியுதவிக்கு அதிகளவு ஆதரவளித்துள்ளனர். அதுபோல மற்ற நிறத்தவர்களை காட்டிலும் வெள்ளையர்கள் அதிக ஆதரவளித்துள்ளனர். 55 வயதுக்கு மேற்பட்டவர்களை காட்டிலும், 18 முதல்54 வயதுடையோர் அதிக ஆதரவளித்துள்ளனர்.
கட்சி ரீதியாக பார்க்கும் போது, குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினரில் 55% பேர் ஆதரவாகவும், 44% பேர் எதிராகவும் உள்ளனர். சுயேட்சையான வாக்காளர்கள் மத்தியில் குறைவான ஆதரவே உள்ளது. ஐடியலாஜிகல் கன்சர்வேடிவ் கட்சியில் 51% ஆதரவாகவும், 48%பேர் எதிராகவும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications