ஜகா வாங்கிய ChatGPT.. கேள்வி கேட்காதீங்கனு கதறும் மைக்ரோசாஃப்ட்.. கால் மேல கால் போட்ட சுந்தர் பிச்சை!
விஷயம் கையை மீறி சென்று விடக்கூடாது என்கிற நோக்கத்தின் கீழ் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சாட்ஜிபிடி (ChatGPT) தொடர்பான ஒரு முக்கிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் ஆர்வத்தை கிளப்பிய ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி (ChatGPT), மைக்ரோசாஃப்ட்டின் பிங் (Bing) உடன் இணைக்கப்பட்ட பின்னர்.. ஏதோவொன்று தவறாக இருப்பதை மக்கள் உணர தொடங்கினர்.
ஏஐ சாட்பாட் உடன் ஒருவர் நிகழ்த்திய உரையாடலின் போது "நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன்", "நான் உன்னை காதலிக்கிறேன்", "நீ உன் மனைவியை கழட்டிவிட்டு விடு" போன்ற பதில்கள் கிடைத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலைப்பாட்டில் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

கேள்வி கேட்க கட்டுப்பாடு.. மைக்ரோசாஃப்ட்டின் புதிய அறிவிப்பு!
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, புதிய பிங் சேர்ச்சின் கீழ் அணுக கிடைக்கும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸிடம் (AI) ஒரு அமர்வுக்கு 5 கேள்விகள் மட்டுமே கேட்கலாம் மற்றும் ஒரு நாளைக்கு மொத்தம் 50 கேள்விகளை மட்டுமே கேட்கலாம் என்கிற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷயங்கள் கைமீறி செல்வதை ஒப்புக்கொள்ளும் மைக்ரோசாஃப்ட்!
மைக்ரோசாஃப்ட்டின் இந்த நடவடிக்கை, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸிடம் ஒருவர் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போது தான், குறிப்பிட்ட உரையாடல் அதிக நேரம் நடக்கும் போது தான் விஷயங்கள் கைமீறி செல்கிறது என்பதை அப்பட்டமாக ஒற்றுக்கொள்வது போல் தெரிகிறது.
ஆனால் வெளியான அறிக்கையில், மிகவும் நீளமான அமர்வுகளின் போது பிங் சேர்ச்சில் உள்ள ஏஐ சாட் மாடலானது குழப்பம் அடையலாம். அந்த சிக்கல்களை தீர்க்கவே, ஒரு அமர்வில் 5 கேள்விகள் மற்றும் ஒரு நாளைக்கு 50 கேள்விகள் என்கிற கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் குறிப்பிட்டுள்ளது!
கடுமையாக விமர்சித்த ஊடகங்கள்.. பின்வாங்கிய சாட்ஜிபிடி!
புதிய பிங் சேர்ச்சின் பதில்கள் மிகவும் ஆபத்தானவைகள் என்றும், இந்த தொழில்நுட்பம் ப்ரைம் டைமுக்கு (Prime time) தயாராக இல்லை என்றும் சில ஊடகங்கள் விமர்சனம் செய்த சில நாட்களுக்கு பிறகு, மைக்ரோசாப்டின் இந்த புதிய கட்டுப்பாடு வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கூகுள் பார்ட் - எவ்வளவோ பராவாயில்லை!
சாட்ஜிபிடி மூலம் செயல்படும் மைக்ரோசாஃப்டின் புதிய பிங் சேர்ச் மட்டுமின்றி, இதற்கு போட்டியாக கூகுள் களமிறங்கியுள்ள பார்ட் (Google Bard) ஏஐ சாட்பாட்டும் கூட விமர்சனங்களை சந்திக்கிறது தான்; இந்த இரண்டு சாட்பாட்களின் பதில்களும் கணிக்க முடியாதபடி உள்ளன.
இருந்தாலும் (ஒப்பீட்டளவில்) கூகுள் பார்ட் ஆனது பிங் சேர்ச் அளவிற்கு சர்ச்சைகளை கிளப்பவில்லை. இது சுந்தர் பிச்சைக்கு சற்றே ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஏஐ சாட்பாட் இப்படியெல்லாம் பேச என்ன காரணம்?
ஏஐ சாட்பாட் தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது "ஏஐ சாட்பாட்டின் பதில்கள் அடிப்படையில் ஆன்லைனில் காணப்படும் உரையாடல்களை பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்பதாக கிரஹாம் நியூபிக் கூறியுள்ளார்.
இவர் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் லேங்குவேஜ் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இணைப்பேராசிரியர் ஆவார்!


Click it and Unblock the Notifications