50% எக்ஸ்ட்ரா டேட்டா.. இந்த 2 திட்டங்கள் மீது மட்டும் ஸ்பெஷல் ஆபரை அறிவித்துள்ள Jio.. தேங்க்ஸ் அம்பானி சார்!

|

2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த கையோடு, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, அந்த 2 புதிய ப்ரீபெயிட் திட்டங்களின் (Prepaid Recharge) மீதும் பிரத்யேக சலுகை ஒன்றையும் அறிவித்துள்ளது.

அதென்ன திட்டங்கள்? அவற்றின் விலைகள் மற்றும் நன்மைகள் என்ன? அவைகளின் மீது அறிவிக்கப்பட்டுள்ள ஆபர் (Offer) என்ன? இதோ விவரங்கள்:

ஜியோவின் புதிய திட்டங்களும், புதிய ஆபரும்!

ஜியோவின் புதிய திட்டங்களும், புதிய ஆபரும்!

வயர்லெஸ் சந்தாதாரர்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு 'ஸ்டோர் ஆஃபர்' (Store Offer) என்கிற ஒரு பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது.

இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, ஜியோவின் இந்த புதிய ஆபர் ஆனது ஜியோ ஸ்டோர்களுக்குள் (Jio Store) சென்று ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கானது!

டெலிகாம் டால்க் வழியாக வெளியான அறிக்கையின்படி, இந்த 'ஸ்டோர் ஆஃபர்' சலுகையின் கீழ், ஜியோவின் 2 புதிய திட்டங்கள் ஆனது 50% எக்ஸ்ட்ரா டேட்டா நன்மைகளை வழங்கும்!

ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?

ஒருவேளை ஆப் வழியாக.. வெப்சைட் வழியாக ரீசார்ஜ் செய்தால்?

ஒருவேளை ஆப் வழியாக.. வெப்சைட் வழியாக ரீசார்ஜ் செய்தால்?

ஒருவேளை ஜியோ அறிமுகம் செய்துள்ள 2 புதிய திட்டங்களையும், ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Jio Webisite) வழியாகவோ அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் (MyJio App) வழியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு பிளாட்ஃபார்ம்கள் வழியாகவோ, அதாவது ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்ய நினைத்தால், உங்களுக்கு எதுவுமே கிடைக்காது!

அதாவது ஜியோ ஸ்டோருக்கு சென்று ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இந்த 'ஸ்டோர் ஆஃபர்' கிடைக்கும். இந்த சலுகையை பெற நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அந்த புதிய திட்டங்களின் விவரங்கள் இதோ:

ஜியோவின் 2 புதிய திட்டங்களுமே டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ்கள் ஆகும்!

ஜியோவின் 2 புதிய திட்டங்களுமே டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ்கள் ஆகும்!

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய திட்டங்களும் டேட்டா ஆட்-ஆன் பேக்குகள் (Data Add-on Packs) ஆகும். அவைகளின் மதிப்பு - ரூ.29 மற்றும் ரூ.19 ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த இரண்டுமே ப்ரீபெய்டு பயனர்களுக்கானது; போஸ்ட்பெய்டு பயனர்களுக்கானது அல்ல.

ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த 2 திட்டங்களுமே அதன் போட்டியாளர்களை விட 50% கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

அதாவது ரூ.29 திட்டமானது அதன் "போட்டியாளரின்" 2ஜிபி டேட்டாவுடன் ஒப்பிடும்போது 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். அதே போல ரூ.19 திட்டமானது அதன் "போட்டியாளரின்" 1ஜிபி டேட்டாவுடன் ஒப்பிடும்போது 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது.

இதெல்லாம் ஒருபக்க இருக்க யார் அந்த "போட்டியாளர்" என்பதை ஜியோ குறிப்பிடவில்லை!

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

ஒப்பீட்டளவில் அதிக டேட்டா.. ஆனால் யாரு ரீசார்ஜ் செய்வார்கள்?

ஒப்பீட்டளவில் அதிக டேட்டா.. ஆனால் யாரு ரீசார்ஜ் செய்வார்கள்?

மேற்குறிப்பிட்ட 2 டேட்டா ஆட்-ஆன் பேக்குகளையும் ஜியோ ஸ்டோருக்குள் சென்று ரீசார்ஜ் செய்வதன் மூலம் நிச்சயமாக (ஒப்பீட்டளவில்) அதிக டேட்டா நன்மைகள் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை!

ஆனால் பெரும்பாலான ரீசார்ஜ்கள் டிஜிட்டல் முறையில் / ஆன்லைன் வழியாக நடக்கும் இந்த காலத்தில், இப்படி ஒரு ஆபர் வேலைக்கு ஆகுமா? வெறும் 500MB கூடுதல் டேட்டாவை பெறுவதற்காக மக்கள் ஜியோ ஸ்டோருக்கு படை எடுப்பார்களா? என்பது சந்தேகம் தான்!

பேசாமல் ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்தால் என்ன?

பேசாமல் ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்தால் என்ன?

ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.29 மற்றும் ரூ,19 டேட்டா ஆட்-ஆன் திட்டங்கள் ஆனது ஜியோவின் இணையதளம் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்காது.

அங்கே உங்களுக்கு ரூ.15 மற்றும் ரூ.25 மதிப்பிலான திட்டங்கள் மட்டுமே கிடைக்கும். அவைகள் வழங்கும் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.15 டேட்டா ஆட் ஆன் திட்டமானது 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.25 திட்டமானது 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

Best Mobiles in India

English summary
50 Percent More Data Announced On These 2 Jio Plans But You Have To Recharge It Via Jio Store Only

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X