Home
News

தக்காளி யாரு கிட்ட.. ரூ.100 க்கு 50 நாள் வேலிடிட்டி.. சிங்கிள் பிளானில் Jio, Airtel-ஐ துவம்சம் செய்த BSNL!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாமே "ஒரு தென்றல் புயலானதே" என்று கூறும்படியாக உள்ளன. புதிய லோகோ, 7 புதிய சேவைகள், பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி அறிமுகத்திற்கான வேலைகள் மற்றும் திட்டமிட்டதை விட முன்கூட்டியே 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்வதற்கான பணிகள் என.. பிஎஸ்என்எல் நிறுவனமானது உண்மையாகவே புயல் வேகத்தில் வேலை செய்து வருகிறது.

இந்த வேகமும் பிஎஸ்என்எல்-ன் சூப்பர்-பட்ஜெட் விலை திட்டங்களும் சந்திக்கும் இடத்தில்.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் ஆகிய 2 தனியார் நிறுவனங்களுக்கும் பெரிய சிக்கல் காத்திருக்கும். ஏனென்றால் ஜியோ மற்றும் ஏர்டெல்லால் ரூ.100 க்கு 50 நாட்கள் வேலிடிட்டியை தர முடியாது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தர முடியும். அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? இதோ விவரங்கள்:

ரூ.100 க்கு 50 நாள் வேலிடிட்டி.. Jio, Airtel-ஐ துவம்சம் செய்த BSNL!

நாம் இங்கே பேசுவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிரீமியம் பெர் மினிட் (Premium per Minute) திட்டத்தை பற்றித்தான். 50 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ.107 மட்டுமே ஆகும். இதன்கீழ் 200 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் நன்மை மற்றும் 3ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இருப்பினும் ரூ.107 பிரீமியம் பெர் மினிட் திட்டத்தின் கீழ் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் கிடையாது. மேலும் 3ஜிபி அளவிலான டேட்டா நன்மை தீர்ந்த பின்னர் எஃப்யுபி லிமிட்ற்கு பிறகான அன்லிமிடெட் டேட்டாவும் கிடைக்காது. அதாவது டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் கிடைக்கும். 40 கேபிபிஎஸ் அல்லது 80 கேபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீட் எதுவும் கிடைக்காது.

ஆனால் செல்லுபடியாகும் 50 நாட்ககளுக்கும் பிஆர்பிடி (PRBT) என்று சுருக்கமாக அழைக்கப்டுடம் பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (Personalized Ring Back Tone) நன்மை முற்றிலும் இலவமாக கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு எஸ்எம்எஸ் நன்மையும் தேவைப்பட்டால் ரூ.108 க்கு கிடைக்கும் எஃப்ஆர்சி108 (FRC 108) பிளானை ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ.108 திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன் லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 1 ஜிபி டேட்டா, அது தீர்ந்த பின்னர் 80 கேபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீட்டில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 500 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இதில் பிஆர்பிடி நன்மை இருக்காது.

பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற முக்கியமான செய்திகளை பொறுத்தவரை, 2024 தீபாவளி சலுகையாக ரூ.1999 திட்டத்தின் விலை ரூ.1899 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை நவம்பர் 7 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் மொத்தம் 600ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இது 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

மேலும் பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் (BSNL SelfCare App) வழியாக மட்டுமே கிடைக்கும் 3ஜிபி போனஸ் டேட்டா ஆபரையும் அறிவித்துள்ளது. இது ரூ.499 திட்டத்தை பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் வாய்ஸ், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 75 நாட்களுக்கு வழங்கும்.

இன்னும் அதிக வேலிடிட்டியை விரும்பும் பயனர்கள் பிஎஸ்என்எல்-ன் ரூ.397-ஐ ரீசார்ஜ் செய்யலாம். இதுவொரு எக்ஸ்டென்டட் வேலிடிட்டி (Extended validity) பிளானாகும். அதாவது இந்த ப்ரீபெய்ட் திட்டம் 150 நாட்கள் என்கிற மொத்த வேலிடிட்டியை கொண்டிருக்கும். ஆனால் முதல் 30 நாட்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை வழங்கும்.

Best Mobiles in India

English summary
50 Days Validity For Just Rs 107 Every BSNL Customers Should Know About This Premium per Minute Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X