Home
News

DTH கதை முடிஞ்சது.. ரூ.50 முன்பணம் கட்டினால் போதும்.. 800 TV சேனல், 13 OTT.. வீடு தேடி வரும் Jio நிறுவனம்!

உங்கள் வீடுகளில் உள்ள கேபிள் டிவி கனெக்ஷன் (Cable TV Connection) மற்றும் டிடிஎச் கனெக்ஷன்களின் (DTH Connection) கதைகளை முடித்துவிடும் படியான ஒரு புதிய ஆபரை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதுவும் வெறும் ரூ.50 முன்பணம் செலுத்தினால் போதும் என்கிறது. என்ன சலுகை? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முழு கட்டணம் எவ்வளவு? இதோ விவரங்கள்:

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ஜியோ நிறுவனம் - 50 நாள் ஜியோ ஏர்ஃபைபர் சலுகை (Jio AirFiber 50 Days Offer) ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தங்கள் பழைய டிடிஎச் சேவைகளை விட்டுவிட்டு ஜியோ ஏர்ஃபைபருடன் லேட்டஸ்ட் மற்றும் பெஸ்ட் பொழுதுபோக்கை அனுபவிக்க ஊக்குவிக்கிறது.

ரூ.50 முன்பணம்.. 800 TV சேனல், 13 OTT.. வீடு தேடி வரும் Jio நிறுவனம்!

இதன்கீழ் 800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள் (800 digital TV channels), 13 க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ் (13+ OTT apps) மற்றும் வரம்பற்ற வைஃபை (Unlimited Wi-Fi) ஆகிய நன்மைகள் கிடைக்கும். மேலும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ. 1,000 மதிப்புள்ள இலவச நிறுவல் (Free installation worth Rs.1,000), ரூ.1,000 மதிப்புள்ள இலவச கூப்பன் (Free coupon worth Rs.1,000) மற்றும் ரூ. 16,500 மதிப்புள்ள இலவச ஹோம் டிவைஸ்களும் (Free home devices worth Rs.16,500) கிடைக்கும்

ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50 முன்பணத்தை (Rs.50 advance) செலுத்தி இந்த சேவையை முன்பதிவு செய்யலாம், இது ஃபைனல் பேமண்ட்டில் அட்ஜெஸ்ட் (Adjusted in final payment) செய்யப்படும். இந்த 50 நாள் ஆபரின் கீழ் ஜியோ 5ஜி பயனர்கள் (Jio 5G Users), ஜியோ ஏர்ஃபைபர் சேவையை ரூ.1,111 க்கு பெற முடியும்.

இந்த சலுகை குறித்த பிரத்யேக அறிவிப்புகள் எஸ்எம்எஸ் (SMS) வழியாகவும், மைஜியோ ஆப் நோட்டிஃபிகேஷன் (MyJio app notification) வழியாகவும் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) வழியாகவும் ஜியோ பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ இணையதளத்தின்படி (Jio Website), இந்த ஆஃபர் நவம்பர் 23, 2024 அன்று தொடங்கியது, மேலும் அறிவிப்பு வரும் வரை அணுக கிடைக்கும்.

இந்த சலுகையின் கீழ் கிடைக்கும் ரூ.1,000 கூப்பனில் ஏஜியோ (AJIO) தளத்தில் ரூ.2,999 என்கிற குறைந்தபட்ச பரிவர்த்தனையின் கீழ் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.15,000 என்கிற குறைந்தபட்ச பரிவர்த்தனையில் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் ரெயில்டெல் (RailTel) வழங்கும் கம்யூனிட்டி அடிப்படையிலான பிராட்பேண்ட் இணைய சேவையான ரெயில்வயர் (RailWire) ஆனது ஃப்ரீடம் பிளான் (Freedom Plan) என்கிற புதிய சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஓடிடி (OTT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஓவர்-தி-டாப் கன்டென்ட்களுடன் கூடிய ஒரு ஹோம் இன்டர்நெட் பிளானாகும்.

ரெயில்வயர் அறிமுகம் செய்துள்ள புதிய ஃப்ரீடம் பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டமானது 30எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடை (30 Mbps Internet Speed) வகிக்கும். கூடவே 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் (400+ Live TV channels) மற்றும் 200 க்கும் மேற்பட்ட கேம்களை (200+ games) வழங்குகிறது.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, இந்த ஃப்ரீடம் பிளான் ஆனது, மிகவும் சமீபத்தில் அறிமுகமான பிரசார் பாரதியின் (Prasar Bharati) ஓடிடி இயங்குதளமான வேவ்ஸ்-க்கான (WAVES) அணுகலை வழங்குகிறது. வேவ்ஸ் தவிர்த்து மேலும் 9 பிரீமியம் ஓடிடி தளங்களுக்கான (9 Premium OTT) அணுகல்களையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
50 Days Jio AiFiber Offer At Rs 50 Advance 800 TV Channels 13 OTT Unlimited Wifi For For Rs 1111
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X