ஒன்னு ரெண்டு இல்ல 50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல் ஆன்லைனில் லீக்: பெயர், இருப்பிடம், மொபைல் எண் எல்லாம்!

|

50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்கள் ஹேக்கர்களுக்கான ஆன்லைன் தளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

பிரதானமாக இருக்கும் சமூகவலைதளம்

பிரதானமாக இருக்கும் சமூகவலைதளம்

சமூகவலைதளம் என்பது இந்த காலக்கட்டத்தில் பிரதான ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்பதில் அதிகப்படியானோர் அக்கவுண்ட் வைத்துள்ளனர். பேஸ்புக், வாட்ஸ்அப் தளங்கள் பயனர்களின் தேவைகளை கண்டறிந்து பல்வேறு புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேஸ்புக் நிறுவன பயன்பாட்டை உலக அளவில் பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை அதிகம்.

50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல்

50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல்

50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் சொந்த விவரங்கள் ஹேக்கர்களுக்கான ஆன்லைன் தளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. பெயர்கள், வசிக்கும் இடம், பிறந்தநாளில் தொடங்கி பல்வேறு விவரங்கள் இதில் அடங்கும். இதுதொடர்பாக பிஸ்னஸ் இன்சைடர் வெளியிட்ட தகவல்களை குறித்து பார்க்கலாம்.

தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள்

தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள்

தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் என 106 நாடுகளின் பேஸ்புக் பயனர்கள் விவரங்கள் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. பேஸ்புக் தளத்தில் பாதுகாப்பு குறித்து பல்வேறு சிக்கல்களை நிறுவனம் சந்தித்து வருகிறது.

தொலைபேசி எண் மூலம் பயனர்களை தேடும் அம்சம்

தொலைபேசி எண் மூலம் பயனர்களை தேடும் அம்சம்

இதையடுத்து 2018 ஆம் ஆண்டு முதல் தொலைபேசி எண் மூலம் பயனர்களை தேடும் அம்சத்தை நிறுவனம் தடை செய்தது. பேஸ்புக் நிறுவனம் தங்களது பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வரதான் செய்கிறது.

பேஸ்புக் சொன்ன பதில்

பேஸ்புக் சொன்ன பதில்

50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்டவை ஹேக்கர்களின் தளங்களில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை கண்டுபடிக்கப்பட்டு 2019 ஆகஸ்ட் மாதமே சரி செய்யப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

புகார்கள் கண்டறிந்து சரிசெய்துவிட்டதாக அறிவிப்பு

புகார்கள் கண்டறிந்து சரிசெய்துவிட்டதாக அறிவிப்பு

2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பழைய தரவு என பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த சிக்கலை 2019 ஆகஸ்டில் கண்டறிந்து சரிசெய்தோம் என பேஸ்புக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தகவல்கள் பல ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. தகவல்கள் தொகுப்பு கிடைக்கும் தன்மையை முதலில் பிஸ்னஸ் இன்சைடரால் தெரிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்டுள்ளபடி தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் என 106 நாடுகளின் பேஸ்புக் பயனர்கள் தகவல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயனர்கள் தற்போது பயன்படுத்தும் விவரங்கள்

பயனர்கள் தற்போது பயன்படுத்தும் விவரங்கள்

டிசம்பர் 2019 இல், உக்ரேனிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், 267 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை ஒரு தரவுத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல் சுமார் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களின் தகவல்கள் இலவசமாக கசிய விடப்பட்டுள்ளன என ஹட்சன் ராக் சைபர் கிரைம் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் டுவிட்டரில் தெரிவித்தார். அதேபோல் இந்த தகவல்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கணக்குகள் எனவும் பயனர்கள் தற்போது பயன்படுத்தப்படும் அதே தொலைபேசி எண்கள் கசியவிடப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
50 Crore Facebook Users Details Now Available in Hackers Website: Here the Facebook Reply

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X