ஐந்து நிமிடத்தில் ஐம்பதாயிரம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது மைக்ரோமேக்ஸ்

Written By:

இணையத்தில் முதல் ப்ளாஷ் விற்பனையை தொடர்ந்து இரண்டாவது முறையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ். அந்நிறுவனம் புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் என்ற புதிய வகை ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிவித்திருந்தது.

முதல் ப்ளாஷ் விற்பனையில் இந்நிறுவனம் சுமார் 20,000 ஸ்பார்க் போன்களை இரண்டே நிமிடங்களில் விற்பனை செய்தது. கேன்வாஸ் ஸ்பார்க் இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. மேலும் ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6582 பிராசஸர் மற்றும் ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து நிமிடத்தில் ஐம்பதாயிரம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது மைக்ரோமே

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது, இதோடு 8 ஜிபி இன்டர்னல் மெமியும் கூடுதலாக 32 டிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

டூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் 3ஜி, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

 

English summary
After the successful first online sale, 50,000 more units of Micromax's budget Android smartphone Canvas Spark went out of stock in less than five minutes
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot