தொட்டது துலங்கும்.,வச்சது விளங்கும்: அன்றே கணித்த மஸ்க்- டுவிட்டர் உரிமையாளராக மஸ்க் சொன்ன முதல் வார்த்தை!
எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனம் குறித்து முன்னதாகவே எலான் மஸ்க் போட்ட டுவீட், வாங்கிய பின் அவர் பதிவிட்ட முதல் டுவீட் வைரலாகி வருகிறது. இதுகுறித்த விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

மிகப் பெரிய பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க்
டுவிட்டரின் மிகப் பெரிய பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், உலகப் பணக்காரர்கள் பட்டியல் பிரதான ஒருவர் என்ற பல புகழ் இவருக்கு இருந்தாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்கப்படும் ஆக்கப்பூர்வமான கேள்விக்கான பதில்கள் மற்றும் உரையாடல்களை அடிப்படை தரப்பினரிடமும், இளைஞர்களிடமும் மேற்கொள்வார்.
பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்
டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதை தன் வசமாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். டுவிட்டருக்கு டிமான்ட் வைத்து அதை வாங்கத் தயார் என மஸ்க் கூறினார். அதன்படி மஸ்க்கிற்கு டுவிட்ரை விற்க இயக்குனர் குழு ஒப்புக் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க் டுவிட்டரை 144 பில்லியன் டாலருக்கு விற்க டுவிட்டர் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன்பின் டுவிட்டரின் உரிமையாளராக தனது டுவீட்டை மஸ்க் பதிவிட்டுள்ளார். அதில், எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன் ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம் என மஸ்க் டுவிட் செய்துள்ளார்.
புதிய அம்சங்களுடன் டுவிட்டர் மேம்படுத்தப்படும்
மேலும் பேச்சு சுதந்திரம் குறித்து டுவிட்டரை வாங்க முயற்சிக்கும் போதே மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதேபோல் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் டுவிட்டரில் விவாதம் செய்யப்படுகின்றன, புதிய அம்சங்களுடன் டுவிட்டர் மேம்படுத்தப்படும், இதன்மூலம் டுவிட்டர் எப்போதும் இல்லாததைவிட மிகவும் சிறந்ததாக இருக்கும், டுவிட்டரில் வைரஸ் தாக்குதல் நிறுத்தப்பட்டு சிறந்ததாக்க விரும்புகிறேன் என டுவிட் செய்திருந்தார்.

டுவிட்டர் விலை என்ன என்று கேள்வி
அதேபோல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு முன்பு எலான் மஸ்க், ஐ லவ் டுவிட்டர் என பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் இந்த பதிவுக்கு டேவ் ஸ்மித் என்பவர் ரிப்ளை செய்திருந்தார். அதில் பிடித்திருந்தால் வாங்க வேண்டியது தானே என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மஸ்க், விலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த டுவிட் தற்போது பெருமளவு வைரலாகி வருவதோடு அதிக லைக்களையும், ரீடுவிட்களையும் பெற்றிருக்கிறது. காரணம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விலை என்ன என்று கேட்ட மஸ்க் தற்போது அதை நிரூபனம் செய்து அதை வாங்கியும் இருக்கிறார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்
டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதால் அதை இப்போது யார் இயக்குவார்கள் என்ற கேள்வி வரலாம், தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைவர் பிரட் டெய்லர் ஆகிய இருவரும் தங்கள் பணிகளை தொடர்வார்கள் என டுவிட்டரில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மஸ்க் முன்னதாகவே டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதால், மேலும் ஒரு தலைமை பொறுப்பை ஏற்பது என்பது திறனை குறைக்கலாம் என கூறப்படுகிறது.

முன்னதாகவே 9.2% பங்குகளை கைவசம் வைத்திருந்த மஸ்க்
முன்னதாக டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைவதற்கு எலான் மஸ்க்கிற்கு நிறுவனத்தின் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மஸ்க் இந்த குழுவில் இணைய மறுத்துவிட்டார். எங்கள் பங்குதாரர்கள் எங்கள் வாரியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் உள்ளீட்டை எப்போதும் மதிப்போம் என அகர்வால் டுவிட் செய்திருந்தார். டுவிட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மஸ்க் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணையாவிட்டாலும் தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்த ஆலோசனை வழங்குவதாக மஸ்க் குறிப்பிட்டிருந்தார். மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9.2% டுவிட்டர் பங்குகளை வாங்கி பெரும் பங்குதாரராக தற்போதே இருக்கிறார்.

சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டுவிட்டர் இருக்கும்
முன்னதாக மஸ்க் டுவிட்டர் நிறுவன தலைவருக்கு எலான் மஸ்க் அனுப்பிய கடிதத்தில், உலகளாவிய சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டுவிட்டர் இருக்கும் என நம்பிக்கை வைத்தே முதலீடு செய்தேன், பேச்சு சுதந்திரம் என்பது சமூகத்தின் அடிப்படை உரிமை என நான் நம்புகிறேன் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் முழு பங்குகளையும் வாங்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியானது, தொடர்ந்து மஸ்க் I Made an Offer என டுவிட் செய்திருந்தார். தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற வீதத்தில் வாங்க தயார் எனவும் விற்பனை தொகையை பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications