Subscribe to Gizbot

ஒலிம்பிக்ஸில் கோப்பையை வெல்ல உதவும் சாதனங்கள்!

Posted By: Staff
ஒலிம்பிக்ஸில் கோப்பையை வெல்ல உதவும் சாதனங்கள்!

உலக புகழ் பெற்ற ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்க பதக்கங்களை குவிக்க சாதனங்கள் எப்படி உதவுகின்றது என்று இங்கே ஒரு சிறிய கண்ணோட்டம் பார்க்கலாம்.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் கலந்து கொள்ளவதற்கும் முன்பு, இந்த விளையாட்டில் போட்டி போடும் அளவிற்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்பதும் அவசியம். எந்தவிதமான சூழ்நிலையையும் மனமும், உடலும் ஏற்று கொள்ள கூடிய பக்குவத்தினை பெற சாதனங்கள் எப்படி பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

மோஷன் கேப்சர்:

ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கும் போது மோஷன் கேப்சர் சாதனம் மிக அவசியமானதாக இருக்கிறது. இந்த மோஷன் கேப்சரில், ஒவ்வொரு அசைவுகளும் பதிவாகிறது. இதனால் எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்பதை எளிதாக பார்க்க முடியும். ஓடுவது, நடப்பது, எறிதல் போன்ற அசைவுகளை அங்க அங்கமாக விவரித்து காட்டுகிறது இந்த மோஷன் கேப்சர். இதனால் எவ்வளவு வேகத்தில் ஓட வேண்டும், விளையாட்டில் பயன்படுத்தும் சாதனங்களை எவ்வளவு வேகத்தில் எறிய வேண்டும் என்பதையெல்லாம் புள்ளிவிவரத்தோடு காட்டுகிறது மோஷன் கேப்சர்.

ரோபோ-போங்:

அடுத்ததாக ரோபோ-போங், இது ஒரு எலக்ட்ரானிக் ரோபோ. இதனுடன் விளையாடி பயிற்சி எடுத்து கொள்வதற்கும், மனிதர்களோடு விளையான்டு பயிற்சி எடு்த்து கொள்வதற்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறது. மனிதர்களைவிட 10 மடங்கு அதிக ஆற்றலுடன் செயல்படும் இந்த ரோபோக்கள், அதிக வேகத்தில் விளையாடும். இதனுடன் எப்படி ஈடு கொடுத்து விளையாடுகிறோம் என்பதும் மிக அவசியம். இதனால் விளையாட்டில் தங்களது வேகத்தினை வெகுவாக அதிகரித்து கொள்ளலாம். அதுமட்டும் அல்லாது விளையாட்டில் எப்படி நுனுக்கத்தினை கையாண்டு நம்மை இந்த ரோபோ தோற்கடிக்கிறதோ அது எல்லாமே பயிற்சி கொள்வோருக்கு ஒரு பாடம் என்று தான் சொல்ல வேண்டும்.

சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும், மனிதர்களை விட 10 மடங்கு அதிக வேகத்துடன் செயல்படும் இந்த ரோபோ-போங், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயற்சியை கொடுக்கும். இந்த ரோபோ-போங் சாதனம், டேபில் டென்னிஸ் விளையாட்டிற்கு சிறப்பாக பயன்படும்.

க்ரையோஜெனிக் மற்றும் ஹைப்பாக்ஸிக் சேம்பர்ஸ்:

க்ரையோஜெனிக் மற்றும் ஹைப்பாக்ஸிக் சேம்பர்ஸ் என்ற இந்த சாதனத்தின் பெயரை கேட்டாலே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். நமது உடலை எந்தவிதமான சீதோஷ்ன நிலைக்கும் தயார்படுத்தி கொள்ள உதவும். உதாரணத்திற்கு வெளிநாடுகளில் குளிர் அதிமகாக இருக்கும். இதற்கு தகுந்த வகையில் இந்த பெட்டியில் செட்டிங்ஸ்சை மாற்றி இதனுல் உடலை பொருத்தி தயார்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் அதிக வெப்பம், அதிக குளிர் என்று எப்படி வேண்டுமோ அப்படி உடலை தயார்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு எந்த சீதோஷ்ன நிலையாக இருப்பினும் விளையாட்டு வீரர்களின் உடல், எந்த தொந்தரவும் செய்யாமல் சொன்னபடி கேட்கும்.

ஃப்லைஃப்யர் ஷூ:

விளையாட்டு வீரர்களுக்கென்றே பிரத்தியேகமாக காலில் அணியக்கூடிய காலணிகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். நிக் நிறுவனம் தயாரிக்கும் குறைந்த எடை கொண்ட ஷூக்களை பற்றி இங்கே பார்க்கலாம். இந்த ஷூவில் ஃப்லைஃப்யர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ஷூ (காலணிகள்) அணிவதற்கு மிக இலகுவானது. இந்த நிக் காலணிகளில் வலுவான மெல்லிய நாரிழைகள் (ஃபைபர்) பயன்படுத்தப்பட்டுள்ளது. காகிதம் போன்ற மெல்லிய துணியால் உருவாக்கப்பட்ட இந்த காலணிகள், ஓடும் வேகத்தினை இன்னும் அதிகரிக்கும்.

டெக்ஸ்ச்சர்டு ட்ரேக் மற்றும் ஃபீல்டு யூனிஃபார்ம்:

டெக்ஸ்ச்சர்டு ட்ரேக் மற்றும் ஃபீல்டு யூனிஃபார்ம், இது தடகள வீரர்களுக்கான பிரத்தியேக சீருடை என்று தான் சொல்ல வேண்டும். காற்றின் அசைவுகளுக்கு தகுந்த வகையில் ஒத்துழைக்கும் இந்த சீருடை, காற்றையும் விட மெல்லிய எடை கொண்டது. இதனால் காற்றையும் கிழித்து கொண்டு செல்ல கூடிய வேகத்தினை பெற முடியும். இதில் சில லேஸர் கதிர்களின் இயக்கங்களும் இருக்கும். இதனால் வெளிச்சம் குறைவாக இருப்பினும் நமது அசைவுகள் துல்லியமாக பதிவாகும். இதன் மூலமாகவும் தவறு செய்யும் இடங்களை துல்லியமாக கேமராவில் பதிவு செய்யலாம்.

தொழில் நுட்ப சாதனங்கள் சார்ந்த இந்த 5 வழிகளும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரர்கள் தங்கம், வெள்ளி என்று பதக்களை வாங்கி குவிக்க சிறந்த வகையில் தயார்படுத்தும்.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot