உங்கள் தினசரி வாழ்க்கையை என்கிரிப்ஷன் செய்ய 5 வழிகள்.!

என்கிரிப்ஷன் எட்வர்ட் ஸ்னோடன் அவரக்ள் கொடுத்த தகவலுக்கு பின்னரே அரசாங்கங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

|

என்கிரிப்ஷன் என்றால் ஒரு குறியாக்கம் அல்லது பாதுகாப்பு தன்மையுடையது அல்லது ஒரு பாஸ்வேர்டை போன்றது என்பது பொருள். இந்த என்கிரிப்ஷன் எட்வர்ட் ஸ்னோடன் அவரக்ள் கொடுத்த தகவலுக்கு பின்னரே அரசாங்கங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஒரு அரசாங்கம் மக்களின் செயல்களின் மீது எவ்வாறு விழிப்புடன் செயல்பட்டது என்பதைக் காட்டியதுடன், இந்த செய்திகளும் என்கிரிஷ்பன் மெசேஜ் அப்ளிகேஷன் மற்றும் என்கிரிஷ்பன் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல விஷயங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு காரணமாக அமைந்தது.

உங்கள் தினசரி வாழ்க்கையை என்கிரிப்ஷன் செய்ய 5 வழிகள்.!

என்கிரிப்ஷன் செய்திகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும் அதன் முக்கியத்துவம் சமீபத்தில் தான் உணரப்பட்டது. டிஜிட்டல் என்கிரிப்ஷன் என்பது இப்போது நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. இதன் மூலம் நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகிறோம்.

உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் 5 முக்கிய என்கிரிப்ஷன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப்பின் லேட்டஸ் அப்டேட் செய்தவர்களுக்கு எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் என்ற வசதி இருப்பதை அறிந்திருப்பீர்கள். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் உள்ள சுமார் 1.5 பில்லியன் பயனாளிகளின் மெசேஜ்களும் பாதுகாப்பு தன்மையை பெற்றுள்ளன. எந்த ஒரு நபரும் ஏன், வாட்ஸ் அப்பில் பணிபுரியும் ஊழியர்கள் கூட நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களை படிக்க முடியாது. இதனால் வாட்ஸ் அப்பில் நீங்கள் எந்த வகையான மெசேஜ்களையும் தைரியமாக பாதுகாப்புடன் அனுப்பலாம்.

 புரோட்டோன் மெயில்:

புரோட்டோன் மெயில்:

நம்மில் பெரும்பாலானோர் ஜிமெயிலை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போதைய நிலையில் நாம் ஒரு மாற்றத்தை கடைபிடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். உங்களுக்கு தெரியுமா? ஜிமெயில் உங்களுடைய அனைத்து மெயில்களையும் படிக்கின்றது என்பது? இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் ஜிமெயில் இருந்து புரோட்டான் மெயிலுக்கு மாற வேண்டும். புரோட்டான் மெயில் என்பது அனுப்புபவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் மட்டுமே தெரியும் வகையில் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கும் அம்சம்.அதாவது எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் ஆகும். இந்த மெயில் சர்வீஸ் இலவசம்தான். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் அதிக காலம் இதை பயன்படுத்த வேண்டும் என்றால் அதன் பிரிமியர் வெர்ஷனை பெற்று கொள்ள வேண்டும்

பிஜிபி/ஜிபிஜி:

பிஜிபி/ஜிபிஜி:

பிரட்டி குட் பிரைவசி என்பதன் சுருக்கம் தான் இந்த பிஜிபி என்பது ஆகும். இது உங்களுடைய டிரைவ்கள், எம்யில்கள் மற்றும் ஃபைல்களை ரகசியமாக பாதுகாக்கும் தன்மை உடையது. குறிப்பாக இமெயில்களை பாதுகாப்பதில் இது வல்லமை பெற்றது. இந்த வசதி குறித்து பலர் அறிந்தவுடன் தான் இந்த சாப்ட்வேரை சார்ந்து இருப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர தொடங்கியுள்ளனர். இதன் விளைவாகத்தான் இதில் உள்ள ஜிஎன்யூ பிரைவைசி கார்டு என்று சொல்லக்கூடிய ஜிபிஜி உருவானது

வெராகிரிப்ட்:

வெராகிரிப்ட்:

நம்முடைய மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களில் உள்ள பிரெளசிங் ஹிஸ்ட்ரி, ரகசிய தகவல்கள், முக்கியமான டாக்குமெண்ட்டுக்கள் ஆகியவை தொலைந்து போவதோ அல்லது பிறர் கைக்கு செல்வதோ ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் அதன் விளைவுகள் குறித்து அறிந்த பின்னர்தான் அந்த ரகசியத்தின் முக்கியத்துவம் குறித்து நமக்கு தெரியவரும். எனவே விண்டோஸ், மேக் மற்றும் லீனக்ஸ் இயங்கு தளத்தில் செயல்பட்டு வரும் என்கிரிப்ஷன் டூல் வெராகிரிப்ட்டை பயன்படுத்துவது இது சரியான காலம் ஆகும். இதன் மூலம் டிரைவ்ஸ்கள் உள்பட அனைத்தையும் நாம் பாதுகாத்து கொள்ளலாம்.

பென் இண்டர்நேஷனல்:

பென் இண்டர்நேஷனல்:

இன்றைய நாட்களில் ரகசியங்களை பாதுகாப்பது என்பது எவ்வளவு முக்கிய விஷயம் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக தான் எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் பல ஆண்டுகளாக போராடி வருகிறார் என்பது உலகம் அறிந்ததே. அவரை போல் உலகில் பலர் பிரைவைசி குறித்த கவலையில் உள்ளனர் அதுமட்டுமின்றி அதற்காக போராடியும் வருகின்றனர். அந்த வகையில் நமது ரகசியங்களை பாதுகாக்க நமக்கு கிடைத்திருக்கும் வசதிகளில் ஒன்றுதான் பென் இண்டர்நேஷனல். கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் இது ஒரு லண்டனை சேர்ந்த என்.ஜி.ஓ நிறுவனம். தற்போது இது உலகம் முழுவதும் புகழ்பெற்று பரவி வருகிறது. சமீபத்தில் ரஷ்யா அரசு என்கிரிப்ஷன் மெசேஜ் செயலியான டெலிகிராமை தடை செய்த போது அதனை எதிர்த்து போராடியது பென் இண்டர்நேஷனல் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
5 ways to encrypt your daily life : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X