முடிந்தது கெடு.. 7 நாட்களில் பணம் திருப்பி கொடுக்கப்படும்.. Paytm அறிவிப்பு.. ஆப்பிற்கு உள்ளயே கிடைக்கும்!
2024 மார்ச் 15 ஆம் தேதியோடு பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் முடிவுக்கு வந்தன. இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) உத்தரவின்படி, இனிமேல் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்கால் புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் பரிவர்த்தனைகளையும் அனுமதிக்காது.
இதன் விளைவாக பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வழங்கிய ஃபாஸ்டாக்கும் (FASTag) கூட, மார்ச் 16 ஆம் தேதி முதல் வேலை செய்யாது. அதாவது இனிமேல் உங்களால் பேடிஎம் ஃபாஸ்டாக்கை டாப்-அப் அல்லது ரீசார்ஜ் செய்யவோ, அதன் வழியாக டோல் கட்டணம் செலுத்தவோ முடியாது.

இதற்கிடையில் தான் "பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வழங்கிய பழைய ஃபாஸ்டாக்கில் இருக்கும் பேலன்ஸை வேறு வங்கியிலிருந்து பெறப்பட்ட புதிய ஃபாஸ்டாக்கிற்கு டிரான்ஸ்பர் செய்ய முடியுமா?" (Transfer the balance from old FASTag to new FASTag) என்கிற கேள்விக்கு பேடிஎம் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
பேடிஎம் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஃபாஸ்டாக் தயாரிப்பில் கிரெடிட் டிரான்ஸ்பர் பேலன்ஸ் என்கிற அம்சம். கிடையாது. எனவே பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியால் வழங்கப்பட்ட பழைய ஃபாஸ்டாக்கை க்ளோஸ் செய்துவிட்டு, எங்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொள்வதன் மூலம் ஏதேனும் பொருந்தக்கூடிய இருந்தால், அதை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

பேடிஎம் ஃபாஸ்டாக்கை க்ளோஸ் செய்துவிட்டு ரீஃபண்ட் பெறுவது எப்படி? உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பேடிஎம் ஆப்பை திறந்து, சேர்ச் மெனுவில் மேனேஜ் பாஸ்டாக் (Manage FASTag) என்கிற விருப்பத்தை தேடவும். இப்படி செய்வதன் மூலம் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் ஃபாஸ்டாக் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வாகனங்களின் பட்டியலும் உங்களுக்கு கிடைக்கும்.
இப்போது ஸ்க்ரீனில் மேல் வலது பகுதியில் உள்ள க்ளோஸ் ஃபாஸ்டாக் ஆப்ஷனை (Close FASTag option) தேர்ந்தெடுக்கவும். பின்னர் எந்த வாகனத்தின் ஃபாஸ்டாக்கை க்ளோஸ் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த வாகனத்தை தேர்வு செய்யவும். பின்னர் ப்ரொசீட் (Proceed) என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ஸ்க்ரீனில் கன்ஃபிர்மேஷன் மெசேஜை (Confirmation message) காண்பீர்கள்.

அவ்வளவு தான். உங்கள் ஃபாஸ்டாக் ஆனது 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் க்ளோஸ் செய்யப்படும். பிபிபிஎல் ஃபாஸ்டாக்கிற்காக பராமரிக்கப்படும் பொருந்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகை (Applicable Security deposit) மற்றும் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை (Minimum balance) போன்றவைகள் உங்களுடைய பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் வேலட்டில் ( Paytm Payments Bank Wallet) ரீஃபண்ட் ஆக வந்து சேரும்.
பேடிஎம் நிறுவனமானது - என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) அனுமதியின் கீழ் - மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப் (Third Party UPI App) ஆக அவதாரம் எடுத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் 4 முக்கிய வங்கிகளுடன் இணைந்து பேடிஎம் நிறுவனமானது தேர்ட் பார்ட்டி யுபிஐ ஆப் ஆக மாறியுள்ளது. இதற்காக பேடிஎம் நிறுவனமானது எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank), ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் யெஸ் பேங்க் (Yes Bank) உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் பேடிஎம் நிறுவனத்தால் தன் பயனர்களுக்கு தொடர்ந்து யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்க முடியும். அதாவது முன்னதாக பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank - PPBL) மூலம் மேற்கொள்ளப்பட்ட பேடிஎம்-ன் யுபிஐ பரிவர்த்தனைகள் இனிமேல் மேற்கண்ட 4 வங்கிகளின் வழியாக நடக்கும்.
மேலும் பேடிஎம் நிறுவனத்திற்கு எதிரான ஆர்பிஐ-யின் புதிய கட்டுப்பாடுகளுக்கு பிறகும் கூட, பேடிஎம் நிறுவனத்தின் க்யூஆர் கோட் (QR Code) மற்றும் சவுண்ட்பாக்ஸ் (Soundbox) வசதியானது தொடர்ந்து செயல்படும் என்று பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








