Just In
- 1 hr ago
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- 16 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 17 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 17 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூகுள் எர்த் மூலம் கிடைக்கும் ஐந்து முக்கிய பலன்கள்
கூகுள் நிறுவனத்தின் அரிய சேவைகளில் ஒன்று கூகுள் எர்த். வீட்டில் இருந்து கொண்டே உலகம் சுற்றும் வாலிபனாக மாற உதவும் இந்த கூகுள் எர்த், சமீபத்தில் கூகுள் நிறுவனத்தால் மறு வடிவமைப்பு கொண்டுள்ளது.
இந்த மறுவடிவமைப்பு 3D வடிவில் ஆண்ட்ராய்ட் மற்றும் வெப் ஆகிய இரண்டிலும் செயல்படும் வகையில் உள்ளதால் கூகுள் பயனாளிகள் பூமியை தெரிந்து கொள்ள மிகுந்த உதவி செய்வதோடு, சுற்றுலா பயணிகளும் இது பெரும் உதவியாக உள்ளது.
இந்த 3D மறுவடிவமைப்பு விஞ்ஞானிகள், டாகுமெண்ட் படைப்பாளிகள், உள்பட பல விற்பன்னர்களுக்கும் இந்த உலகில் உள்ள அழகை, மர்மத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது. இந்நிலையில் இந்த மறுவடிவமைப்பால் ஏற்பட்டுள்ள ஐந்து முக்கிய பயன்களை தற்போது பார்ப்போம்

நாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்:
கடந்த பத்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்னர் உலகை வெறும் மேப்பில் மட்டுமே பார்த்து கொண்டிருந்த நிலையில் இன்று கம்ப்யூட்டரிலும், கையகள மொபைல் போனிலும் பூமியை, இந்த உலகை நேரில் காணும் பாக்கியம் கிடைத்துள்ளதால் இந்த தலைமுறையினர் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்.
கூகுள் எர்த்தை ஒரே ஒரு க்ளிக் செய்வதன் மூலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முதல் அண்டார்டிகா வரை நேரில் பார்க்கும் அனுபவத்தை உணர முடியும். ஒருவேளை நீங்கள் ஒரு அழகிய பிரதேசத்தில் இருந்தால் உடனே அந்த இடத்தின் அழகை கூகுள் எர்த்திலும் பார்த்து சரிபார்த்து கொள்ளலாம்

வானத்தில் இருந்தும் விமானத்தை பார்க்கலாம்:
சிறுவயதில் நான் வானத்தில் விமானம் செல்லும்போது அண்ணாந்து பார்த்த அனுபவத்தை பெற்றிருப்போம். ஆனால் தற்போது வானத்தில் இருந்து விமானத்தை பூமியுடன் சேர்ந்து ரசிக்கலாம்.
ஆம், கூகுள் எர்த் மூலம் சாட்டிலைட் இருந்து வரும் இமேஜை பார்க்க முடியும் வசதி இருப்பதால் விமானம் பறப்பதை வானத்தில் இருந்து பார்க்கும் வசதியையும் பெற முடியும்
நம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

வீட்டில் இருந்தே சுற்றுலா:
முன்பெல்லால் உலக டூர் செல்ல வேண்டுமானால் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால் இப்போது உங்கள் வீட்டில் இருந்து கொண்டே உலகை சுற்றி வரலாம். ஏழு உலக அதிசயங்கள் உள்பட அனைத்து அழகிய பகுதிகளையும் 3D வடிவில், அதற்குரிய ஆடியோ விளக்கத்துடன் கம்ப்யூட்டரில் பார்த்து மகிழலாம்

பூமியையும் தாண்டி செல்லலாம்:
கூகுள் எர்த் மூலம் பூமியை மட்டுமின்றி பூமிக்கு வெளியே சென்று பூமியையே மொத்தமாக பார்த்து மகிழலம். விண்வெளி இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு விண்வெளி வீரர் எந்தெந்த அனுபவத்தை உணர்கிறாரோ, அதே அனுபவத்தை நம்மாலும் இனி உணர முடியும் என்பதே இந்த கூகுள் எர்த்தின் இன்னொரு சிறப்பு ஆகும்

இதெல்லாம் போரடிக்குதா அப்ப இதை செய்யுங்கள்:
எத்தனை நாள் தான் கூகுள் எர்த்தில் உட்கார்ந்து கொண்டே பார்த்து கொண்டிருப்பது? போரடிக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் உடனே நீங்க F22 போன்ற சிங்கிள் சீட் விமானத்தை எடுத்து கொண்டு உலகை சுற்றுங்கள், கடற்கரை, கட்டிடங்களை நேரில் பார்த்து ரசியுங்கள். இதற்கு பைலட்டுகளும் தற்போது எளிதில் கிடைக்கின்றனர்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090