Home
News

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் செய்யவே கூடாத 5 விஷயங்கள்.. இல்லையெனில் போன் காலி ஆகிடும்..

எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்த போனை என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை, ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வகையில் எதையேனும் செய்துவிட்டு பின் அதற்கான பலனையும் அனுபவித்து வருகின்றனர். அதாவது சில நேரங்களில் நாம் அதிக காசு கொடுத்து வாங்கிய போன் தண்ணீரில் விழுந்து வீணாகிவிட்டதே என்று நினைத்துப் பயந்துபோய் நாமே சுயமாக சில பல வைத்தியங்களைச் செய்ய ஆரம்பத்துவிடுவோம்.

ஆனால் நாம் பதற்றத்தில் செய்யும் சில தவறான செயல்கள் போனை முற்றிலும் நாசமாக்கிவிடும். அப்படி ஈரமான போனை காப்பற்ற நாம் செய்யவே கூடதா ஐந்து முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் செய்யவே கூடாத 5 விஷயங்கள்..

1.ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தவுடன் பலரும் செய்யும் முதல் பெரிய தவறு என்னவென்றால், அது இன்னும் வேலை செய்கிறதா என்பதை செக் செய்ய உடனே பவர் பட்டனை அழுத்தி ஆன் செய்து பார்ப்பதுதான். இது மிகவும் ஆபத்தான விஷயம். உள்ளே தண்ணீர் இருக்கும் போது போனை ஆன் செய்தாலோ அல்லது சார்ஜர் போட்டு செக் செய்தாலோ உள்ளே ஷார்ட் சர்கியூட் ஆகி மதர்போர்டு முழுமையாக எரிந்துபோக வாய்ப்பு உள்ளது. எனவே போன் ஆஃப் ஆகியிருந்தால் அதை அப்படியே விட்டுவிடுவதுதான் மிகவும் நல்லது.

2.ஸ்மார்ட்போன் (smartphone) தண்ணீரில் விழுந்தவுடன் அதை எடுத்து ஸ்பீக்கர் மற்றும் சார்ஜிங் போர்ட்டில் இருக்கும் தண்ணீரை வெளியே எடுக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு போனை வேகமாக குலுக்குவார்கள். இப்படி செய்தால் போனின் ஓரத்தில் இருக்கும் தண்ணீர் கூட மெயின் போர்டுக்குள் போக வாய்ப்பு உள்ளது. இது போன்ற செயல் போனை அதிகமாகச் சேதப்படுத்திவிடும்.

3.பொதுவாக வீட்டில் முடி காயவைக்கப் பயன்படுத்தப்படும் ஹேர் ட்ரையரை வைத்து போனில் சூடான காற்றை அடிக்க செய்வது மிகவும் தவறு. இந்த வெப்பம் போனில் உள்ள சின்ன சின்ன எலக்ட்ரானிக் பாகங்களை முற்றிலும் உருக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அந்த காற்றின் வேகம் தண்ணீரை இன்னும் உள்ளே அதிகமாகத் தள்ளிவிடும்.

4.சிலர் போன் தண்ணீரில் விழுந்தவுடன் அதை எடுத்து அரிசி பானைக்குள் வைத்தால் தண்ணீர் உறிஞ்சப்படும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது மிகவும் தவறு. அரிசியில் உள்ள சிறிய தூசுகள் மற்றும் மாவு துகள்கள் போனின் கேமரா லென்ஸ் மற்றும் சார்ஜிங் போர்ட்டுக்குள் சென்று அதிக டேமேஜ் ஏற்படுத்திவிடும். எனவே இதற்குப் பதிலாகச் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் செய்யவே கூடாத 5 விஷயங்கள்..

5.பொதுவாக ஸ்மாரட்போன் ஈரமாக இருக்கும்போது வால்யூம் பட்டன் மற்றும் இதர பட்டன்களை தொடர்ந்து அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பட்டன்களக்கு இடையே இருக்கும் மிகவும் சிறிய இடைவெளி வழியாகத் தண்ணீர் உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது. எனவே போனை முடிந்தவரை தொடாமல் அப்படியே பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

உங்களது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தவுடன் அதை எடுத்து ஒரு நல்ல காட்டன் துணிையை வைத்து வெளிப்புறத்தை மெதுவாக துடைக்க வேண்டும் அதன்பின்பு சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றைப் பத்திரமாக வெளியே எடுத்துவிட்டு, நல்ல காற்றோட்டமா இடத்தில் காய வையுங்கள். அதன்பின்பு போன் ஆன் ஆகவில்லை என்றால் அதை ஒரு நல்ல சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வது தான் சிறந்த வழி ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 things not to do if your smartphone falls into water
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X