Home
News

உலகிலேயே மிகப் பிரபலமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் 5 தமிழர்கள்.!

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் நிறுவனர் லாரி பேஜ், புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்பபெட் நிறுவனத்தை கவனிக்க சென்றுவிட்டதால் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர்பிச்சை நியமனம் செய்யப்பட்டார்.

By Prakash S

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று முழங்கிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடலுக்கு ஏற்ப தான் வாழும் சமூகத்திற்கும் தனக்கும் பெருமை தேடித் தந்த தமிழர்கள் எண்ணிலடங்காதவர்கள் இந்த மண்ணில் காலம்தோறும் உள்ளார்கள்.

இதில் ஐவரை மட்டும் எழுதக் காரணம் தமது துறைகளில் இருக்கும் ஆளுமை திறன் மற்றும் உலக அரங்கில் அவர்களது ஆணித்தரமான பங்களிப்பும் தான். அதன்படி உலகிலேயே பிரபலமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் 5 தமிழர்கள் யார்என்று பார்ப்போம்.

1.சுந்தர் பிச்சை:

1.சுந்தர் பிச்சை:

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் நிறுவனர் லாரி பேஜ், புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்பபெட் நிறுவனத்தை கவனிக்க சென்றுவிட்டதால் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர்பிச்சை நியமனம் செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன், ஹெட்செட், ரூட்டர் உள்ளிட்ட சில சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில்,
மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா
பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர்,
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

 2.இந்திரா நூயி:

2.இந்திரா நூயி:

இந்தியாவுக்கான பெப்சி கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சென்னையை சேர்ந்த இந்திரா நூயி கடந்த 2006ம் ஆண்டு
முதல் செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவுக்கான பெப்சி கோ சி.இ.ஓ.,வாக பணியாற்றி வரும் இந்திரா நூயிக்கு வருடத்திற்கு 195 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. பெப்சிகோ சிஇஒ மற்றும் இயக்குனர் இந்திரா நூயி, ஃபார்தூன் வெளியிட்டுள்ள 'உலகின் மிக சக்திவாய்ந்த 51 பெண்கள்' பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து மீண்டும் ஒரு முறை தன் நிலையை நாட்டி, இந்தியாவை பெருமைப்பட வைத்துள்ளார். ஜென்ரல் மோட்டார்ஸ் தலைமை இயக்குனர் மற்றும் சிஇஒ மேரி பாரா இந்த பட்டியலில் முதலாம் இடத்தை பிடித்து உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 3. சீதாராமன் நாராயணன்

3. சீதாராமன் நாராயணன்

கல்யாணம், காது குத்து முதல் ஃபேஸ்புக் வரை பல அலப்பறைகளையும்உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வரவேற்பு காரணம் இந்த போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் சாப்ட்வேர் தான் முதன் முதலில் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஓ.எஸ்.-ல் வந்து இன்றளவும் டாப்பில் இருக்கிறது. ஒவ்வொரு முறை போட்டோஷாப் இயக்கும்போதும், சீதாராமன் நாராயணன் என்ற பெயர் வரும். இவர் தஞ்சாவூர்காரர் தான். போட்டோஷாப்பில் புரட்சியை
ஏற்படுத்தியவர். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் போட்டோஷாப்பை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் இவர்.

4.சுபாஸ்கரன் அல்லிராஜா:

4.சுபாஸ்கரன் அல்லிராஜா:

இலங்கை தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவர் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், லைக்கா மொபைல் குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவரது லைக்கா மொபைல் நிறுவனமானது தற்போது 17 நாடுகளில், சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் லைக்கா புரொடக்சன் நிறுவனம் இவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.

  ஜார்ஜ் குரியன்:

ஜார்ஜ் குரியன்:

அமெரிக்கவை சார்ந்த NetApp எனும் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஜார்ஜ் குரியன் என்பவர், இந்திய தமழிர் ஆவார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
5 TAMIL PEOPLE WHO WORK FOR FAMOUS COMPANIES: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X