பேக் டூ பேக்.. 5 போன்கள் மீது திடீர் PRICE CUT.. என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு விலை குறைப்பு? இதோ லிஸ்ட்!
திடீரென இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் 5 முக்கியமான ஸ்மார்ட்போன்கள் மீது பெரிய அளவிலான விலைக்குறைப்புகள் (Price Cut) அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? எந்தெந்த மாடல்கள் மீது எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? அவைகளின் புதிய விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:
01. நத்திங் போன் 2 (Nothing Phone 2): நத்திங் பிராண்டின் இரண்டாவது ஸ்மார்ட்போனாக நத்திங் போன் 2 கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகு நத்திங் போன் ஸ்மார்ட்போன் மீது மிகப்பெரிய அளவிலான விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,000 குறைக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2-வின் அசல் வெளியீட்டு விலை ரூ.44,999 ஆகும்.
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீதும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் ரூ.49,999 மற்றும் ரூ.54,999 க்கு பதிலாக ரூ.44,999 மற்றும் ரூ.49,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

02. விவோ டி2 5ஜி (Vivo T2 5G): இந்திய சந்தையில் விவோவின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனான விவோ டி2 கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமானது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.18,999 க்கும், 8ஜிபி ரேம் +128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும் வாங்க கிடைத்தது.
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 விலைக்குறைப்புக்கு விவோவின் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.16,999 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

03. ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி (Oppo Reno 10 Pro 5G): ஒப்போ ரெனோ 11 சீரிஸ் அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதால் ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்ப்போனின் மீது ரூ.2,000 விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2023 ஜூலையில் இந்தியாவில் அறிமுகமானது.
அந்த நேரத்தில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு வாங்க கிடைத்ததது. தற்போது ரூ.2000 விலை குறைப்பிற்கு பின்னர் ஒப்போவின் ஆன்லைன் ஸ்டோரில் ரூ. 37,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
04. ரெட்மி 12 (Redmi 12): ஷாவ்மீயின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக ரெட்மி 12 இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது,. அதில் 6 ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.11,999 க்கு அறிமுகமானது.
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,500 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பின் வழியாக ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஜேட் பிளாக், மூன்ஸ்டோன் சில்வர் மற்றும் பேஸ்டல் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
05. சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜி (Samsung Galaxy F14 5G): இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.1,000 வரையிலான விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது மற்றும் இரண்டுமே விலைக்குறைப்பை பெற்றுள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.14,490 மற்றும் ரூ.15,990 க்கு அறிமுகமாகின. தற்போது விலை வீழ்ச்சிக்கு பிறகு 4ஜிபி ஆப்ஷன் ரூ.13,990 க்கும், 6ஜிபி ஆப்ஷன் ரூ.14,990 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








