இண்டர்நெட் வளர்ச்சியால் உங்களுடைய தனித்தன்மைக்கு கிடைத்த வேட்டு

Written By:
  X

  விஞ்ஞானம் வளர வளர மனிதனுக்கு பலவிதமான வசதிகள் பெரும் வரும் சந்தோஷம் இருந்தாலும், அதே விஞ்ஞானம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் தனித்தன்மைக்கு வேட்டு வைக்கும் வகையில் உள்ளது.

  இண்டர்நெட் வளர்ச்சியால் உங்களுடைய தனித்தன்மைக்கு கிடைத்த வேட்டு

  பெருகி வரும் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் டெக்னாலஜி மூலம் எதையும் கண்டுபிடிக்கும் வாய்ப்பு இருப்பதால் தனியுரிமை பாதிக்கப்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஒரு செய்தியின்படி அமெரிக்க அரசு தங்கள் நாட்டின் சொந்த குடிமக்களின் அனைத்து விபரங்களை மட்டுமின்றி பிற நாட்டு மக்களின் விபரங்களையும் உளவு பார்த்ததாக கூறப்பட்டது.

  இந்த செய்தி ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கத்திற்கும் எழுந்த ஒரு ஆபத்தாகவே கருதப்படுகிறது. தனி மனிதனின் ரகசியங்கள் எப்படி டெக்னாலஜி மூலம் உளவு பார்க்கப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  முக அமைப்பின் மூலம் குணங்களை அறிதல்:

  பயோமெட்ரிக் என்ற டெக்னாலஜி மூலம் ஒருவருடைய முக அமைப்பை வைத்தே அவருடைய குணநலன்களை ஏற்கனவே யூகித்து வைக்கப்பட்டுள்ள டேட்டாக்களின் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். உலகில் உள்ள நபர்களின் புகைப்படங்களை எடுப்பது என்பது இப்போதைய டெக்னாலஜியில் மிக எளிது. ஃபேஸ்புக்கில் கிட்டத்தட்ட அனைவருமே புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.

  அதுமட்டுமின்றி கூகுளில் ஏராளமான விஷயங்கள் கொட்டி கிடக்கின்றது. இது போதாது என்று ஒவ்வொரு நாட்டின் அரசும் ஆங்காங்கே சிசிடிவி வைத்து அந்நாட்டின் மக்கள், மற்றும் அந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டு மக்களின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது. இந்த முறையின் மூலம் ஏன் உலகில் உள்ள அனைத்து மக்களையும் உளவு பார்க்க கூடாது?

  கினெக்ட் (Kinect) என்ற சென்சார்

  சோனி பிளே ஸ்டேஷன்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஆகியவை தங்கள் தயாரிப்பு பொருட்களில் கினெக்ட் என்ற சென்சாரை பயன்படுத்துகிறது. இதன்மூலம் உங்களுடைய ஒவ்வொரு அசைவு, நீங்கள் இடும் வாய்மொழி உத்தரவு உள்பட பல விஷயங்கள் பதிவு செய்யப்படுகிறது.

  இதன் மூலம் உங்களுடைய அனைத்து டேட்டாக்களும் மிக எளிதில் உளவு பார்க்க வகை செய்கிறது. மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் இந்த செய்தியை மறுத்து வந்த போதிலும், அரசு உளவுப்பிரிவிற்காக இந்த சென்சாரை பயன்படுத்துவதாகவே பலருக்கு சந்தேகம் உள்ளது.

  இந்த 6 விடயங்களை செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் 100% பாதுகாப்பாக இருக்கும்.!

  பயோமெட்ரிக் ஸ்கேனிங்:

  பயோமெட்ரி ஸ்கேனிங் என்ற வசதி தற்போது பல ஸ்மார்ட்போன்களில் உள்ளது. ஐரிஸ் ஸ்கேனர், பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகிய வடிவில் உள்ள இந்த பயோமெட்ரிக் ஸ்கேனிங், உங்கள் போனின் பாதுகாப்பிற்காக இருப்பதாக கூறப்பட்டாலும், இந்த ஸ்கேனிங் மூலம் உங்களுடைய பர்சனல் டேட்டாக்கள் வெளியேறும் வாய்ப்பில்லை என்று உறுதியாக கூற முடியாது.

  ஒருமுறை நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்த பயோமெட்ரிக்கை பயன்படுத்தினால் உங்களுடைய அனைத்து விபரங்களையும் ஒரு அரசோ அல்லது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சர்வரோ மிக எளிதில் எடுத்துவிடும் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்

  ட்ரோன்கள்:

  ட்ரோன்ஸ் என்று கூறப்படும் பறக்கும் உபகரணம் ஒரு காலத்தில் ராணுவம் மட்டுமே உளவுக்காக பயன்படுத்தப்படும் உபகரணமாக இருந்தது. ஆனால் தற்போது இதுவொரு விளையாட்டு பொருள் போல ஆன்லைனில் மிக எளிதில் வாங்கும் ஒரு பொருளாகிவிட்டது.

  இந்த உபகரணத்தின் பயன்பாடு அதிகரிப்பால் சைபர் செக்யூரிட்டி என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அதுமட்டுமின்றி ஒருவருடைய பெட்ரூமில் நடக்கும் விஷயம் முதல்கொண்டு வெளியே தெரியும் அபாயமும் இதில் உள்ளது.

  செயலிகள்:

  ஸ்மார்ட்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது நாம் அனைத்து அனுமதியையும் வழங்கிவிடுகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய போன்கள் மூலம் போன்களில் உள்ள செயலிகள் மூலம் நமது பெரும்பான்மையான ரகசியங்கள் நம்மை அறியாமலேயே வெளியேறிவிடுகின்றன.

  குறிப்பாக ஃபேஸ்புக் செயலி நம்முடைய ஆடியோ டேட்டா உள்பட ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த டேட்டாக்களையும் மிக எளிதில் அறிந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  As the technology grows, the security of our privacy is in danger as anything can be accessed from anywhere around the world with a combination of sophisticated software and hardware.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more