Home
News

சீனா கப்சிப்.. பாக். பதுங்கியது.. Agni Prime ஏவுகணை.. மொத்த ஆசிய கண்டத்தையும் அலற விடுவது ஏன்? 5 காரணங்கள்!

3 வாரங்கள் ஆகிவிட்டது. இன்னமும்கூட பெரும்பாலான உலக நாடுகளால்.. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீனாவால்.. அக்னி-5 ஏவுகணையின் வெற்றியை தாங்கிகொள்ள முடியவில்லை; ஜீரணிக்க முடியவில்லை. இதற்கிடையில் அக்னி ப்ரைம் பாலிஸ்டிக் ஏவுகணை (Agni Prime Ballistic Missile) சோதனையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது!

அக்னி ப்ரைம் என்பது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய வல்லமை கொண்ட இந்தியாவின் புதிய தலைமுறை ஏவுகணை ஆகும். சோதனை நோக்கத்தின் கீழ் இது ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் (Abdul Kalam Island) இருந்து ஏவப்பட்டது.

Agni Prime.. மொத்த ஆசிய கண்டத்தையும் அலற விடுவது ஏன்? 5 காரணங்கள்!

அப்போது இது நம்பகமான செயல்திறனை (Reliable performance) உறுதிப்படுத்தும் அனைத்து வகையான சோதனை நோக்கங்களையும் (Trial objectives) பூர்த்தி செய்தது. இந்த தகவல் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட பல ரேஞ்ச் சென்சார்களால் (Range sensors) கைப்பற்றப்பட்ட தரவுகளின் வழியாக உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

அக்னி-5 ஏவுகணையில் (Agni-5 Missile) உள்ள எம்ஐஆர்வி டெக்னாலஜி (MIRV Technology) ஆனது எப்படி சீனா மற்றும் பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுக்கிறதோ.. அதேபோல அக்னி ப்ரைம் ஏவுகணையை பார்த்து மொத்த ஆசிய கண்டமும் (Asia Continent) அலறுவதற்கு 5 காரணங்கள் உள்ளன.

Agni Prime.. மொத்த ஆசிய கண்டத்தையும் அலற விடுவது ஏன்? 5 காரணங்கள்!

1. 2000 கிமீ வரை பாயும் டூ-ஸ்டேஜ் மிஸைல்: முன்னரே குறிப்பிட்டபடி, அக்னி பிரைம் அல்லது அக்னி-பி என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை அக்னி ஏவுகணையானது.. அணுசக்தி திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஏவுகணை ஆகும். இது 1,000 முதல் 2,000 கிமீ வரை சென்று தாக்கக்கூடிய இரண்டு நிலைகளை கொண்ட கேனிஸ்டரைஸ்டு ஏவுகணை (Two-stage Canisterised Missile) ஆகும்.

2. கோல்ட் லான்ச் மெக்கானிசம்: அக்னி ப்ரைம் ஒரு கேனிஸ்டரைஸ்டு ஏவுகணையாக இருப்பதால்.. அதாவது உருளை வடிவத்திலான ஒரு பொருளுக்குள் இன்னொரு பொருளை வைத்திருக்கும் ஒரு கொள்கலன் போன்ற ஒரு ஏவுகணையாக இருப்பதால்.. இதை சாலை மற்றும் ரயில் மூலம் கொண்டு செல்ல முடியும்.

Agni Prime.. மொத்த ஆசிய கண்டத்தையும் அலற விடுவது ஏன்? 5 காரணங்கள்!

அதுமட்டுமின்றி இதை நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்திருக்கவும் முடியும். இதன் மூலம் திடீர் தாக்குதலை சமாளிக்க உதவும் நேரத்தில் எந்த சிக்கலும், நேர வீணடிப்பும் இருக்காது. எல்லாவற்றை விட முக்கியமாக இந்த ஏவுகணையானது கோல்ட் லான்ச் மெக்கானிசம் மற்றும் சால்வோ மோட்-ன் கீழ் ஏவப்படும்

கோல்ட் லான்ச் மற்றும் சால்வோ மோட் என்றால் என்ன? ஒரு ஹாட் லான்ச்சில், ஏவுகணை ஆனது செல்லுக்குள் பற்றவைக்கப்படுகிறது, அதுவே கோல்ட் லான்ச் என்றால் ஏவுகணையில் இருந்து தனித்தனியாக, எரிவாயு ஜெனரேட்டரால் உருவாக்கப்பட்ட வாயுவை பயன்படுத்தி அது வெளியேற்றப்படும். சால்வோ மோட் என்றால் ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை பாய்ச்சும் முறையாகும்!

3. 50% எடை குறைவானது! அக்னி ப்ரைம் ஏவுகணை ஆனது முன்னதாக உருவாக்கப்பட்ட அனைத்து அக்னி வகை ஏவுகணைகளையும் விட மிகவும் இலகுவானது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், இது அக்னி 3 ஏவுகணையை விட குறைந்தது 50% குறைவான எடையை கொண்டது மற்றும் புதிய வழிகாட்டுதல் மற்றும் உந்துவிசை அமைப்புகளையும் (New guidance and propulsion systems) கொண்டுள்ளது.

4. இதுவொன்றும் முதல் சோதனை அல்ல! அக்னி ப்ரைம் ஏவுகணைடின் முதல் சோதனை 2021 இல் நடத்தப்பட்டது. பின்னர் இரண்டாவது சோதனை "அடுத்த" ஆறு மாதங்களுக்கு பிறகு டிசம்பரில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்னி ப்ரைம் ஏவுகணையின் முதல் நைட் லான்ச்சும் நடத்தப்பட்டது.

5. கண்ணா இது அக்னி சீரிஸ் ஏவுகணை! அக்னி சீரிஸ் ஏவுகணை என்றாலே சக்ஸஸ் ரேட் தாறுமாறாக இருக்கும். எனவே அக்னி ப்ரைம் என்கிற பெயர் காரணத்திற்காகவே எதிரி நாடுகள் கப்சிப் என்று அடங்கி விடும். முன்னரே குறிப்பிட்டபடி, கடந்த மாதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் விமான சோதனையும் வெற்றிகரமாக முடிந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஏவுகணைகள் 5,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. அதாவது அக்னி ப்ரைம் ஏவுகணையை விட 3000 கீமீ அதிக தூரம் பாயும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் சீனாவின் வடக்குப் பகுதி மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் உட்பட கிட்டத்தட்ட முழு ஆசியாவுமே இதன் தாக்கதல் எல்லைக்குள் இருக்கிறது!

போதாக்குறைக்கு அக்னி-5 ஏவுகணையில் எம்ஐஆர்வி டெக்னாலஜியும் உள்ளது.எம்ஐஆர்வி என்பது மல்டிபிள் இன்டிபென்டென்ட்லி டார்கெட்டபிள் ரீஎன்ட்ரி வெஹிக்கிள் (Multiple Independently Targetable Reentry Vehicle) என்பதன் சுருக்கமாகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது ஒரே லான்ச்சில் வெவ்வேறு இடங்களில் உள்ள போர்க்கப்பல்களில் இருந்து எதிர்தாக்குதக்கலை நடத்த உதவும் தொழில்நுட்பமாகும்.

இந்த தொழில்நுட்பம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இருந்தது. தற்போது அக்னி-5 ஏவுகணையின் வெற்றியின் வழியாக இந்த "உயரடுக்கு பட்டியலில்" இந்தியாவும் சேர்ந்துள்ளது. அக்னி-5 வெப்பன் சிஸ்டத்தில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால்.. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவியோனிக்ஸ் அமைப்புகள் (Avionics systems) மற்றும் உயர் துல்லிய சென்சார் பேக்கேஜ்களையும் (High-accuracy sensor packages) கொண்டுள்ளது!

Best Mobiles in India

English summary
5 Reasons Why China Pakistan Entire Asia Scared About Indias New Ballistic Missile Agni Prime
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X