Home
News

டெலிகாம் நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்.!

பிஎஸ்என்எல் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, பின்பு சமீபத்தில் ரூ.399/-என்ற போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகம் செய்தது.

By Prakash S

தற்சமயம் டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. ஆனால் இப்போது டெலிகாம் அறிமுகப்படுத்தும் திட்டங்களில் இன்டர்நெட் பேக் மிகவும் அருமையாக தான் உள்ளது, ஆனால் இன்டர்நெட் வேகம் தான் மிக மிக குறைவு என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய திட்டங்கள்.!

ஏர்டெல் நிறுவனம் நேற்றைய தினம் ரூ.129/- என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்ததது, இதில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது தொலைதொடர்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்த புதிய போஸ்ட்பெயிட் திட்டங்களை பார்ப்போம்.

 ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.649/-என்ற புத்தம் புதிய போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.649/-திட்டத்தில் மொத்தம் 50ஜிபி டேட்டாவை பெறமுடியும், பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், அமேசான் பிரைம் சலுகை மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற அனைத்து சலுகைகளையும் பெறமுடியும்.

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, பின்பு சமீபத்தில் ரூ.399/-என்ற போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 30ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு அம்சங்கள்
இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

 வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் நிறுவனம் ரூ.399/- என்ற போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 20ஜிபி டேட்டா வீதம் வழங்கப்படுகிறது. பின்பு பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்து சலுகைகளையும் பெறமுடியும்.

ஐடியா:

ஐடியா:

ஐடியா நிறுவனம் வோடபோன் நிறுவனத்திற்கு போட்டியா ரூ.389/- என்ற போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 20ஜிபி டேட்டா வீதம் வழங்கப்படுகிறது. பின்பு பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்து சலுகைகளையும் பெறமுடியும்.

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.799/- என்ற போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 60ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்து சலுகைகளையும் பெறமுடியும்.

Best Mobiles in India

English summary
5 Postpaid Plans Introduced by Telcos in Recent Times; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X