'கேப்பில் கிடா வெட்டும்' வோடபோன் ஃப்ளெக்ஸ் திட்டங்கள்.!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைதொடர்பு துறையில் நிலைத்திருக்க அதன் வியாபா தந்திர அலைகளை உருவாக்கிவிட்ட அதே நேரத்தில் பிற முக்கிய நெட்வொர்க்குகள் ஜியோவை சமாளிக்கவும், தங்களின் வாடிக்கையாளர்கள் மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்திவிடாமல் இருக்கப்பும் அவர்களின் பங்கிற்கு ஏதாவது சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் புத்திசாலித்தனத்தை திணிக்கும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் நேற்று தரவு மற்றும் அழைப்புகள் ஆகிய இரண்டையும் ஒன்றாக வழங்கும் 'ஃப்ளெக்ஸ்' என்ற புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃப்ளெக்ஸ் திட்டம் மூலம் நீங்கள் பெறக்கூடிய குறிப்பிடத்தக்க நன்மைகளும் பல உண்டு, அவைகள் என்னென்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஃப்ளெக்ஸ் என்றால் என்ன.?

ஃப்ளெக்ஸ் என்றால் என்ன.?

ஒவ்வொரு ஃப்ளெக்ஸ் ரீசார்ஜுக்கும் பயனர் ஒரு குறிப்பிட்ட அளவு ஃப்ளெக்ஸ் பெறுவர். ஒரு ஃப்ளெக்ஸ் ஆனது ஒரு எம்பி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நிமிட அளவிலான உள்வரும் அழைப்புகளுக்கு சமம் ஆகும் இதுவே நீங்கள் அதை உள்ளூர் அல்லது வெளியூர் அழைப்புகளாக பயன்படுத்தினால் இரண்டு ஃப்ளெக்ஸ் கழிக்கப்படும்.

வோல்ட் ஆதரவு தேவையில்லை

வோல்ட் ஆதரவு தேவையில்லை

ரிலையன்ஸ் ஜியோ போல அழைப்புகளுக்கு வோல்ட் ஆதரவு தேவையில்லை. வோடபோன் குரல் அழைப்புகளுக்கு தரவு பயன்பாடு தேவையில்லை. எப்போதும் போன்ற செயல்பாட்டிலேயே தான் இது இயங்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.119/-

ரூ.119/-

ஜியோ வுடன் ஆன போட்டி முனைப்பில் வோடபோன் மிக மலிவான விலையில் சலுகையை வழங்குகிறது.
ஆரம்ப திட்டம் ரூ.119/- ஆகும் இதன் மூலம் பயனர் 325 ஃப்ளெக்ஸ் பெற முடியும் அதை தரவாகவோ அல்லது குரல் அழைப்புகளாகவோ பயன்படுத்த முடியும். அதிகபட்ச விலையாக 28 நாள்கள் செல்லுபடியாகும் ரூ.1,750/- திட்டம் திகழ்கிறது இதில் ஃப்ளெக்ஸ் பெறலாம்.

தனிப்பட்ட டேட்டா ரீசார்ஜ் தேவை இல்லை

தனிப்பட்ட டேட்டா ரீசார்ஜ் தேவை இல்லை

ஃப்ளெக்ஸ் சலுகைகளில் வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் டேட்டாவும் பெறுவதால் தனித்தனியாக தரவு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மெல்ல மெல்ல தொடங்கி ஒட்டுமொத்தமாக கிழியும் ஜியோ முகமூடி.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
5 Notable Benefits of Vodafone Flex Plans for Prepaid Users. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot