விரைவில் : ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 5 நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள்.!

2017-ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐந்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!

|

நோக்கியா நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் மூலம் 2017-இல் மீண்டும் அதன் மறுபிரவேசம் செய்ய திட்டமிட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அதன் அதிகாரப்பூர்வமான தகவலையும் நோக்கியா மற்றும் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது, மேலும் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் நோக்கியாவின் கருவிகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த வேளையில் எதிர்வரும் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஆனது நோக்கியா ரசிகர்கள் மத்தியில் ஒரு பரந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது முழு ஸ்மார்ட்போன் துறையும் 2017-இல் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்காக காத்திருக்கிறது எனலாம்.

அப்படியாக, 2017-ல் சந்தேகத்திற்கு இடமின்றி வெளியாகப்போகும் 'எதிர்பார்க்கப்படும்' நோக்கியா ஸ்மார்ட்போன்களின் பட்டியல் ஒன்றும் எங்களிடம் உள்ளது. இவைகள் அனைத்தும் கான்செப்ட் ஸ்மார்ட்போன்கள் என்பதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா டி1சி

நோக்கியா டி1சி

வதந்திகளின்படி நோக்கியா டி1சி ஆண்ட்ராய்டு நௌவ்கட் ஓஎஸ் மூலம் நிரப்பப்பட வேண்டும் மற்றும் ஒரு பட்ஜெட் வேரியண்ட் அத்துடன் ஒரு மிட் ரேன்ஞ் மாறுபாடும் வெளியாகலாம். உடன் 5 அங்குல / 5.5 அங்குல புல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 செயலி, 2ஜிபி / 3ஜிபி ரேம், மற்றும் 16 ஜிபி சேமிப்பு திறன் ஆகியவைகளும் அடங்கும்.

நோக்கியா சி9

நோக்கியா சி9

ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியான வதந்திகளின்படி, நோக்கியா சி9 ஒரு மெட்டல் ப்ரேம் பாடி கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. உடன் சாதனம் ஒரு 64-பிட் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820 செயலி, 21எம்பி பின்பக்க கேமிரா, 8எம்பி முன்பக்க கேமிரா கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சாதனத்தின் மற்ற குறிப்புகள் (வதந்திகள் படி) : 4ஜிபி ரேம், மூன்று சேமிப்பு விருப்பங்கள் - 32ஜிபி / 64ஜிபி / 128ஜிபி மற்றும் ஒரு நீக்கக்கூடிய பேட்டரி.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நோக்கியா இ1

நோக்கியா இ1

நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வதந்திகள் எப்போது வெளியானது அன்றில் இருந்தே நோக்கியா இ1 கருவி சார்ந்த கான்செப்ட்கள் வெளிவந்த வானம் தான் உள்ளது. இந்த சாதனம் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்று நம்பப்படுகிறது. உடன் இது 2.3ஜிகாஹெர்ட்ஸ் இண்டெல் ஆட்டம் ப்ராசஸர், புல்எச்டி 1080பி ரெசெல்யூஷன் மற்றும் 2ஜிபி ரேம் உடன் ஒரு 5. இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் கூறப்படும் நோக்கியா இ1 அம்சங்களாக 32ஜிபி சேமிப்பு திறன், 20எம்பி பின்புற கேமிரா, 5எம்பி முன்பக்க கேமிரா மற்றும் ஒரு 2,700 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளன.

நோக்கியா ஸ்வான்

நோக்கியா ஸ்வான்

நோக்கியா ஸ்வான் கான்செப்ட்களின் படி, இக்கருவி ஒரு 89% ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்டிருக்கும், மற்றும் 2கே 5.3 அங்குல டிஸ்ப்ளே இடம்பெறும் என்று நம்பப்படுகிறது. நோக்கியா ஸ்வான் கருவியின் வன்பொருள் அம்சங்களை பொருத்தமட்டில் அது ஸ்னாப்ட்ராகன் 810 அக்டா-கோர் செயலி, 4ஜிபி ரேம், 128ஜிபி உள் சேமிப்பு திறன் ஆகியவைகளுடன் இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட 42எம்பி பின்புற கேமிராவும் இடம் பெறலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நோக்கிய பி1

நோக்கிய பி1

நோக்கியா பி1 கருவியில் 5.3-அங்குல புல்எச்டி ஸ்க்ரீன், ஸ்னாப்டிராகன் 820 செயலி, 3ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னெல் மெமரி, 22.6எம்பி பின்பக்க கேமிரா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சம் மற்றும் ஒரு 3,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, ஐபி 58 சான்றிதழ் ஆகியவைகள் இடம்பெறலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பிளாக்பெர்ரியின் கடைசி வாக்குறுதி - இதோ 'ஆண்ட்ராய்டு' ஆதாரம்.!a

Best Mobiles in India

Read more about:
English summary
5 Nokia Android Smartphones Expected to be Launched in 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X