ஒவ்வொன்னும் ஒரு ரகமா இருக்கே.. YouTube-ல் அறிமுகமான 5 புதிய அம்சங்கள்!
விளம்பரங்கள் இல்லாமல் (Ads-free) வீடியோக்களை பார்க்க உதவும் யூட்யூப் பிரீமியம் (YouTube Premium) பற்றி பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்பாடது என்று நம்புகிறோம். அறியாதோர்களுக்கு யூட்யூப் பிரீமியம் என்பது யூட்யூப் தளத்தில் அணுக கிடைக்கும் சந்தா அடிப்படையிலான ஒரு கட்டண சேவை (Paid Service) ஆகும்.
கிட்டத்தட்ட 80 மில்லியன் பிரீமியம் மெம்பர்களை கொண்ட யூட்யூப் பிரீமியம் சேவையின் கீழ் 5 புதிய அம்சங்கள் (New Features) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் யூட்யூப் பிரீமியம் சேவைக்குள் மேலும் பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதென்ன அம்சங்கள் என்கிற விவரங்கள் இதோ:

01. யூட்யூப் க்யூ (YouTube Queue): இந்த புதிய க்யூயிங் (Queuing) அம்சமானது பயனர்கள் தாங்கள் பார்க்கும் வீடியோக்களை கட்டுப்படுத்துவதற்கும், அடுத்து நீங்கள் எந்த வீடியோவை இயக்க விரும்புகிறீர்கள் என்பதை துல்லியமாக தீர்மானிக்கவும் உதவும். முன்னதாக இது வெப் வெர்ஷனில் (Web Version) கிடைத்தது, இப்போது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) மற்றும் டேப்லெட்டுகளுக்கு (Tablets) விரிவடைகிறது.
02. க்ராஸ் டிவைஸ் வியூயிங் (Cross-device viewing): ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வெப் ஆகியவற்றிற்கு இடையில் மாறும்போதும், யூட்யூப் வழியாக நீங்கள் கடைசியாக பார்த்த வீடியோவை தொடர்ந்து பார்க்கும் திறன் தான் இந்த க்ராஸ் டிவைஸ் வியூயிங். இனிமேல் காலையில் உங்கள் மொபைலில் பார்த்த பாதி வீடியோவின் மீதியை இரவில் உங்கள் டேப்லெட்டில் தொடர்ந்து பார்க்கலாம்.
03. ஐஓஎஸ்-இல் மேம்படுத்தப்பட்ட வீடியோ குவாலிட்டி (Enhanced video quality on iOS): ஐஓஎஸ்-ல் 1080பி எச்டி வீடியோ தரத்தின் மேம்படுத்தப்பட்ட பிட்ரேட் வெர்ஷன் (Enhanced bitrate version) கூடிய விரைவில் யூட்யூப்பில் வெளியிடப்படும். இதற்கு முன் கிடைத்த 1080பி-ஐ விட இது கூடுதல் மிருதுவாகவும், தெளிவாகவும் இருக்கும், குறிப்பாக நிறைய விவரங்கள் மற்றும் இயக்கங்களை கொண்ட வீடியோக்களை பார்க்கும் போது!
04. யூட்யூப்-ஐ ஆஃப்லைனில் பார்க்கலாம் (Watch YouTube offline): யூட்யூப் பிரீமியமானது ஸ்மார்ட் டவுன்லோட் (Smart Download) அம்சத்தை வழங்குகிறது, இதன் கீழ் உங்கள் டிவைஸ் வைஃபையுடன் (Wi-Fi) இணைக்கப்பட்டிருக்கும் போது லைப்ரரியில் (Library) உள்ள "பரிந்துரைக்கப்பட்ட" வீடியோக்களை (Recommended videos) தானாகவே பதிவிறக்கம் செய்யப்படும். நீண்ட நேர விமான பயணம் மற்றும் இண்டர்நெட் கனெக்ஷன் இல்லாத நேரங்களில் இது நிச்சயம் கைகொடுக்கும்.
05. நண்பர்களுடன் சேர்ந்து யூட்யூப்-ஐ பார்க்கவும் (Watch YouTube with friends): பிரீமியம் மெம்பர் அல்லது இலவச யூஸர் என்பதை பொருட்படுத்தாமல், கூகுள் மீட் (Google Meet) வழியாக அனைத்து பங்கேற்பாளர்களும் (Attendees) யூட்யூப் வீடியோக்களை ஒன்றாக சேர்ந்து பார்க்க உதவுவதே இந்த 'வாட்ச் யூட்யூப் வித் பிரெண்ட்ஸ்'.
ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் உள்ள மீட் லைவ் ஷேரிங் (Meet Live Sharing) மூலம் இந்த அம்சம் இன்னும் எளிதாக்கப்படுகிறது, மேலும் வரும் வாரங்களில் ஷேர்ப்ளே (SharePlay) வழியாக ஐஓஎஸ்-இல் உள்ள ஃபேஸ்டைம் (FaceTime) பயனர்களுக்கும் இந்த அனுபவத்தை வழங்குவதாக யூட்யூப் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








