சர்க்கரைநோய்க்கு எதிராக போராட உதவும் 5 தொழில்நுட்பங்கள்!

இன்சுலின் ஹார்மோன் உருவாவதற்கு காரணமான கணையத்தின் முறையற்ற செயல்பாடு காரணமாக ஏற்படும் சர்க்கரைவியாதி ஒரு நாள்பட்ட நோயாகும்.

|

உலகெங்கிலும் 371 மில்லியனுக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்சுலின் ஹார்மோன் உருவாவதற்கு காரணமான கணையத்தின் முறையற்ற செயல்பாடு காரணமாக ஏற்படும் சர்க்கரைவியாதி ஒரு நாள்பட்ட நோயாகும்.

இன்சுலின் நமது இரத்தத்தில் குளுக்கோஸை செயல்படுத்தி செல்களுக்கு அனுப்பி ஆற்றலுக்கு பயன்படுத்த தேவைப்படுகிறது. நமது உடல் குறைவாக அல்லது அதிகமாக இன்சுலினை உற்பத்தி செய்யும் நிலையை நீரிழிவு நோய் எனப்படும்.இதில் இரண்டு வகைகள் உள்ளன.

சர்க்கரைநோய்க்கு எதிராக போராட உதவும் 5 தொழில்நுட்பங்கள்!

முதல் வகையில் நமது உடல் இன்சுலினை உற்பத்தி செய்யாது. ​​இரண்டாவது வகையில் நமது உடல் இன்சுலினுக்கு நன்கு இணங்கி செயல்படாது. நீரிழிவுநோய் என்றால் என்ன மற்றும் அது நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி மிகவும் விரிவாக பார்க்கப்போவதில்லை. மாறாக, நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கும் உத்திகள் மற்றும் முறைகள் குறித்து நாம் கவனம் செலுத்தப் போகிறோம்.


குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்கவும், அதன் அளவை அடிப்படையாகக் கொண்டு இன்சுலினை நிர்வகிக்கும் ஹைப்ரிட் சாதனங்களில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்திவருகின்றனர். ஆட்டோமேடேட் க்ளோசுடு லூப் சிஸ்டம் என்று அழைக்கப்படும் இது, சி.ஜி.எம் (தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு -Continuous Glucose Monitoring) கேஜெட்டுகள் மற்றும் இன்சுலின் பம்புகள் ஆகியவற்றுடன் இணைந்து, அடுத்த தலைமுறை நீரிழிவு மேலாண்மை ( diabetes management) முறையாக இருக்கும் என கருதப்படுகிறது.

நீரிழிவு நோயைக் கண்டறிந்து சிறந்த முறையில் நிர்வகிக்கும் சில நம்பிக்கையூட்டும் தொழில்நுட்பங்களின் பட்டியல் பின்வருமாறு.

ஸ்மார்ட் இன்சுலின் பம்ப்ஸ்:

இன்சுலின் அளவை தீர்மானிக்க தேவையான அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட் இன்சுலின் பம்புகள் செய்கிறது. தொழில்நுட்பம் முன்னேறும் போது, ​​புத்திசாலித்தனமும் வேகவேகமாக வளர்கிறது. இன்சுலின் மிதமிஞ்சிய அளவில் வழங்குவதை தவிர்ப்பதற்காக வேறுபட்ட அளவிலான தரவுகளை ஆராயும் திறன்கொண்ட இன்சுலின் பம்புகளும் உள்ளன. எக்ஸ்2 இன்சுலின் பம்ப் அது போன்ற ஒரு கேஜெட் ஆகும். டேன்டம் டயாபடீஸ் கேர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இதன் நோக்கம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை நிர்வகிப்பது ஆகும். அமெரிக்க எஃப்.டி.ஏ. நிறுவனம் இதை ' ஏசிஇ பம்ப்ஸ்' என்ற புதிய பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளது.

நியூ குளுகாகன் ஃபார்முலேசன்ஸ்

நியூ குளுகாகன் ஃபார்முலேசன்ஸ்

குளுகாகன் என்பது தீவர இரத்த சர்க்கரை குறைபாடு அல்லது தீவிர ஹைபோக்ளைசீமியா நோயிற்காகான சிகிச்சையின் பெயர். நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதற்காக இரு புதிய வகை சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. எளி லில்லி என்பவர் உருவாக்கிய ' puff-up-your-nose ' என்ற முறை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமான அதிகப்படுத்தியது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மதிப்பாய்வு செய்யப்பட்ட இந்த உலர்ந்த நாசல் பவுடர் குளுகாகன் பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாவது வகையான குளுகாகன் எமர்ஜென்சி பேனா, ஜீரிஸ் பார்மா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த பேனாவில் உள்ள நிலையான திரவ குளுகாகன் எந்தவொரு தயாரிப்பும் தேவையில்லாமல் உடனடியாக செலுத்தக்கூடியது.

டியூப்லஸ் இன்சுலின் பம்ப்ஸ்

ஆம்னிபேட் என்ற இந்த கருவி, வழக்கமான இன்சுலின் விநியோக அமைப்பிற்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்டர்ப்ரூப் இன்சுலின் பம்ப் 2018ல் அங்கீகரிக்கப்பட்டது. இச்சாதனம் ப்ளூடூத் செயல்பாடுகள் மற்றும் தொடுதிரையுடன் கூடிய தனிப்பட்ட நீரிழிவு மேலாளர் (personal diabetes manager -PDM) போன்ற அம்சங்களுடன் வருகிறது. பொதுவாக உடலில் இன்சுலின் எடுத்துக் கொள்ளப்படும் இடத்தில் பொருத்தி 72 மணிநேரம் வரை அணிந்துகொள்ளலாம். எந்தவொரு ட்யூபும் தேவைப்படாத இது, பிடிஎம் உடன் ஒயர்லெஸ் வசதிமூலம் இணைந்துள்ளது.

அட்வான்ஸ்டு டயாபடீஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்

நாள்பட்ட வியாதியான நீரிழிவு நோயை கையாள நீரிழிவு மேலாண்மை அமைப்புகள் மிகவும் முக்கியம்.அத்தகைய சாதனங்கள் துல்லியமாக செயல்பட தொடர்ந்து மேம்பட்டு வருவதற்கு ஐஓடி மற்றும் அதன் வளர்ச்சிக்கு நன்றி கூறவேண்டும். உலகின் மிகப்பெரிய மருத்துவ சாதன நிறுவனமான மேட்ரானிக், இந்த பிரிவில் பணியாற்ற குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்களை ஒதுக்கியுள்ளது. 670G ஹைப்ரிட் க்ளோசூடு லூப்-ல் பெரும் மேம்பாடுகளை இது காண்பிக்கும்.மேலும் இது கார்டியன் கனெக்ட் சிஜிஎம் சிஸ்டமிலும் பணியாற்றி வருகிறது. இந்த புதிய அமைப்பில் உள்ள அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் இரு மொபைல் செயலிகள், இன்சுலின் ஊசி மீது முழுமையான நீரிழிவு மேலாண்மையை வழங்கும்.

ஸ்மார்ட் இன்சுலின் பென்

முதல் இன்சுலின் பேனா 1985களில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் சமீபத்திய மற்றும் ஸ்மார்ட் இன்சுலின் பேனா நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் மற்றொரு தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகும். இது இன்சுலின் அளவை தானாகவே பதிவு செய்து உதவுகிறது. கம்பேனியன் மெடிக்கல் நிறுவனத்தின் இன்பென் கேஜெட் ஸ்மார்ட்போன் செயலி, ப்ளூடுத் தொழில்நுட்பம் மற்றும் போலஸ் அட்வைசர் போன்ற வசதிகளுடன் அமெரிக்க நுகர்வோர் சந்தையில் தற்போது உடனடியாக கிடைக்கிறது. இதுபோன்ற கோகேப் மற்றும் எஸ்டா சாதனங்களும் இந்த ஆண்டு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
5 New Technologies That Will Help You Fight Diabetes In 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X